நம்மை புண்படுத்தியவரை மன்னிப்பதுமாதிரி

ஒவ்வொரு நாளும் எதிர்கால நினைவு கூறுதலுக்காக நாம் அனுபவங்களைச் சேகரித்து வைக்கிறோம்- அது நமது மகிழ்ச்சிக்காக என நம்புகிறோம். ஆனால் சில நேரங்களில் கெட்ட விஷயங்கள் நடந்து அவை நம் வாழ்வில் நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் பிறரின் தவறான தேர்வுகளின் விளைவாக ஊனங்கள் ஏற்படுகின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர், கார் விபத்தில் இருந்து நடந்து சென்றாலும் அவருடன் பயணம் செய்தவருக்கு நிரந்நர உடல் மற்றும் மன செயல்முடக்கம் பாதிப்பு ஏற்படுத்தலாம். ஒரு நபர் கவனக்குறைவான அல்லது சுயநல செயல்களின் விளைவாக மற்றவர்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கலாம். இத்தகைய தவறுகளை மன்னிக்கலாம்னு கூட நாம் எப்படி சிந்திக்க ஆரம்பிக்கலாம்?
மன்னிப்பு என்பது மற்றவர்களின் மோசமான செயல்களையும் பாவங்களையும் வேண்டும் என்றே விட்டுவிடுவதை உள்ளடக்குகிறது. நீங்கள் மற்றவர்களின் தவறுகளை நினைவில் கொள்ள வேண்டாம் என்று தேர்வு செய்கிறீர்கள். சங்கீதம் 103:8-12 கடவுளின் வேண்டுமென்ற மன்னிப்பைக் காட்டுகிறது. "அவர் தொடர்ந்து நம்மைக் குற்றஞ்சாட்ட மாட்டார்" (அதற்கு அவர் தகுதியுடையவராக இருந்தாலும்), "கிழக்கு மேற்கிலிருந்து எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் நம்முடைய பாவங்களை அவர் நீக்கிவிட்டார்." இது ஒரு நித்திய தூரம்; இரண்டு வானவரம்புகள் எப்போதும் சந்திப்பதே இல்லை. கடவுள் நம் பாவங்களைத் தம்முடைய பார்வையிலிருந்து மனவிருப்பத்துடன் நீக்கீ, இனி அவற்றை நினைவு கூறமாட்டார்! அப்படிப்பட்ட மன்னிப்பை நாம் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? பரிசுத்த ஆவி நமக்குக் கொடுகும் அன்பினால் மட்டுமே "அநீதி இழைக்கப்பட்டதற்கான பதிவேடு வைக்காது" (1 கொரிந்தியர் 13:5) போதுமான அளவிற்கு நம் இதயங்களை மாற்றும். இந்த வகையான மன்னிப்பு நம் இதயங்களில் கடவுளின் கிருபையால் செய்யப்படுகிறது மற்றும் மற்றவர்கள் மீது உண்மையான அன்பினால் தூண்டப்படுகிறது.
நம்முடைய சொந்த துன்பங்கள் மற்றும் சிரமங்கள் மட்டுமே கவனம் செலுத்தும்போது மற்றவர்களை மன்னிப்பது மிகவும் கடினம். அதற்கு பதிலாக, கடவுள் எவ்வாறு குற்றங்களைச் சமாளித்தார் என்பதைக் கவனியுங்கள்: "இவ்வாறு கடவுள் உலகத்தில் அன்பு காட்டினார்: அவர் தம்முடைய ஒரே மகனைக் கொடுத்தார், அதனால் அவரை விசுவாசிக்கிற அனைவரும் அழியாமல் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்" (யோவான் 3:16). கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பு, நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பை வழங்குவதற்காக தம்முடைய குமாரனை பலிகொடுக்கும்படி செய்தது. நாம் அப்படி மன்னிக்க வேண்டுமா? ஆம்! ஆனால் நம் சொந்த பலத்தில் இல்லை! நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை நாம் இயற்கையாகவே நினைவில் வைத்துக்கொள்வோம். சில விஷயங்களை நாம் "மறக்கவே முடியாது." ஆனால் நாம் மற்றவர்களின் தவறுகளை "பதிவு" வைத்திருக்கிறோமா? அந்த நபரைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நாம் எதிர்மறையான விவரங்களை நினைவு கூர்ந்து அல்லது மானத்திரையில் காண்கின்றோமா?
கடவுளார்ந்த மன்னிப்பு நம் நினைவுகளை அழிக்காது, ஆனால் அது தவறுகளின் பதிவை அழிக்கவும், மீட்டெடுக்கப்பட்ட உறவுகளில் வாழவும் அனுமதிக்கிறது. காலப்போக்கில், மற்றும் கடவுளின் புனித ஆவியால், நம்மை காயப்படுத்தியவர்களைப் பற்றிய நமது எதிர்மறை எண்ணங்களையும் உணர்வுகளையும் அன்பு மாற்றியமைத்திருப்பதைக் காண்போம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நாம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான காயங்களால் அல்லல் பட்டாலும், மன்னிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாகும். இயேசு கிறிஸ்து அனைத்து வகையான அநியாயங்கள் மற்றும் அநீதிகளை அனுபவித்தார், அதுவும் நேர்மைகேடான மரணம் வரையும். ஆயினும், அவரது இறுதி நேரத்தில் மற்ற சிலுவையில் கேலி செய்த திருடனையும், அவரது வதகன்களையும் மன்னித்தார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

நம்மில் தேவனின் திட்டம்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

சீடத்துவம்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஒரு புதிய ஆரம்பம்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
