நம்மை புண்படுத்தியவரை மன்னிப்பதுமாதிரி

Forgiving Those Who Wound Us

7 ல் 2 நாள்

மன்னிக்கும் வாழ்க்கை முறை

இயேசு தம்முடைய சீஷர்களுக்கு ஜெபிக்கக் கற்றுக் கொடுத்த பிறகு, இந்த உடைந்த உலகில் அவர்கள் எப்படி ஒருங்கே நடக்கலாம் என்பது பற்றிய முக்கியமான நுண்ணறிவை அவர்களுக்குக் கொடுத்தார். பரலோகத்திலுள்ள பிதா தங்களுக்குள் உள்ள உறவுகளை எப்படி காண்கிறார் என்பதை அவர்களுக்குக் காட்டினார், மேலும் அவருடைய கிருபையின் வெளிச்சத்தில் நடக்க அவர்களுக்கு வழி காட்டினார்.

நமது பிதா நமக்கு அன்றாட உணவை வழங்குவது மட்டுமல்லாமல், தினசரி ஒழுக்கத்தையும் வழங்குகிறார். இந்த பத்தியில் அன்றாடம் இந்த வீழ்ந்த உலகில் விசுவாசத்துடன் வாழ்வதால் திரட்டும் துர்செயல், வேதனைகள், மற்றும் தவறுகள் ஆகியவற்றின் மன்னிப்பை பற்றி கூறுகிறது. நமது தந்தை இந்த பகுதியிலும் நம்மை ஒழுங்கு முறை செய்கிறார். நாம் மற்றவர்களிடம் கடினமாகவும், மன்னிக்காதவர்களாகவும் இருந்தால் (அவர்கள் நம்மை அடிக்கடி காயப்படுத்துவதால்), எப்படி மன்னிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ளும் வரை நம் தந்தை நம்மைத் அவரது கண்டனதின் கீழ் வைத்திருப்பதிருக்கிறார். நம் அகம்பாவங்களை எதிர்கொள்வதிலும், தவறுகளை நமக்கு நினைவூட்டுவதிலும் அவர் கனிவானவர்.

மன்னிப்பில் நடப்பது என்பது, மற்றவர்களுக்கு எதிராக நாம் செய்யும் பாவங்களை விரைவாக ஒப்புக்கொண்டு, விரைவில் அவர்களிடம் மன்னிப்பைப் பெறுவதைக் குறிக்கிறது. ஆனால், நமக்கு எதிராக பாவம் செய்பவர்களை மன்னிக்க தயாராகவும், விருப்பத்துடன் இருக்கிறோம் என்றும் அர்த்தம். கிறிஸ்துவில் பிதா ஏற்கனவே நம்மை மன்னித்ததை நாம் கருத்தில் கொள்ளும்போது அத்தகைய மன்னிப்பு சாத்தியமாகும் (எபேசியர் 4:32). கிறிஸ்துவுக்கு எதிராக நாம் செய்த பாவங்களின் விளைவாக அவர் அனுபவித்ததை ஒப்பிடும்போது மற்றவர்களிடமிருந்து நாம் பெறும் அவமானங்களும் காயங்களும் சிறியவை.

மன்னிப்பு வாழ்க்கை முறை வாழ்வது, சிறு நிந்தைகளை புறக்கனித்து கடுமையான ஆளிடை பாவங்களை ஆரோக்கமான முறையில் எதிர்கொள்ள கூடிய உறவுகளை உருவாக்கவல்லது. இப்படிப்பட்ட வாழ்க்கை முறை, அநீதி நிறைந்த உலகத்தை நம் தந்தை எப்படி பார்க்கிறாறோ அதை போலவே பார்க்க உதவும்—ஒரு இரட்சகரின் தேவையுள்ள உலகம். அதன் மூலம், நற்செய்தியின் உண்மையை நம் சொந்த வாழ்வில் முன்மாதிரியாகக் கொண்டு உலகை மீட்பதற்கான அவரது பெரிய திட்டத்தில் நாம் பங்கேற்கலாம்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Forgiving Those Who Wound Us

நாம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான காயங்களால் அல்லல் பட்டாலும், மன்னிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாகும். இயேசு கிறிஸ்து அனைத்து வகையான அநியாயங்கள் மற்றும் அநீதிகளை அனுபவித்தார், அதுவும் நேர்மைகேடான மரணம் வரையும். ஆயினும், அவரது இறுதி நேரத்தில் மற்ற சிலுவையில் கேலி செய்த திருடனையும், அவரது வதகன்களையும் மன்னித்தார்.

More

இந்த திட்டத்தை அளித்தமைக்காக ஜோனி மற்றும் நண்பர்கள், சர்வசே மற்றும் டின்டேல் பதிப்பாளர்கள், வேதனையும் தாண்டி பைபிளை படைத்தவர்களுக்கும் நாங்கள் நன்றி செலுத்த வேண்டுகிறோம். மேலும் விபரங்களுக்கு தயவு கூர்ந்து இங்கே செல்லவும்: www.beyondsufferingbible.com/