நம்மை புண்படுத்தியவரை மன்னிப்பதுமாதிரி

Forgiving Those Who Wound Us

7 ல் 3 நாள்

உறவுகளை மீட்டெடுத்தல்

உங்கள் மனம் சில உறவுகள் மிகவும் உடைந்து வேதனையாய் இருப்பதால், அவற்றில் ஊன்றிநினைக்கின்றதா?

ஒருவரின் மனம் இதனால் மிகுதியாக ஈர்க்கப்பட்டால் மகிழ்ச்சியான மனநிலையைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே குற்றங்கள் குறுக்கிடலாம் அது பரிசுத்தமான கடவுளுடன் நமது உறவில் தடங்கல் உண்டாக்கலாம். நமது வழிபாடு தூய்மையாகவும் மாசற்றதாகவும் இருக்க வேண்டும். கிறிஸ்துவில் நம்முடைய மன்னிப்பு கடவுளை அணுகுவதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது, ஆனால் நாம் அவருடைய குமாரனைப் போல ஆக வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மற்றவர்களுடன் நம்மை "இணக்கமாக" இயேசு நமக்கு வலியுறுத்துகிறார். சமரசம் செய்வது என்பது உறவை நேரிய முறைக்கு சீர்திருத்துவதாகும். நம் உறவுகள் சரிபட இல்லாதபோது கிறிஸ்துவை நாம் அவமதிக்கிறோம். மன்னிப்பதன் மூலம் நாம் நமது உறவுகளை மறுசீரமைத்து, தெளிவான மனசாட்சியுடன் கடவுளை வழிபடலாம். மற்றவர் சமரசம் செய்ய விரும்பாவிட்டாலும், நல்லிணக்கத்தைத் தொடர நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

நாம் இப்படி வாழ்ந்தால், ​​கிறிஸ்துவற்கு பெருமை செய்கிறோம், மேலும் கடவுளுக்கு நாம் செய்யும் வழிபாடு வெளிப்படையாகவும் தடையற்றதாகவும் இருக்கும். நாம் பண்பட்டு கிறிஸ்துவைப் போல ஆகும்போது, ​​பல குற்றங்கள் வெறுமனே "புறக்கணிக்க" படலாம் என்பதை அறிவோம். நாம் புண்படாமல் இருக்க முடிவு செய்கிறோம் (நீதிமொழிகள் 19:11 ஐப் பார்க்கவும்). நாமும் மற்றவர்களும் ஒருவருக்கு ஒருவர் தற்செயலாக அதிக தீங்கு விளைவிப்பதை உணர்ந்து மற்றவர்களுக்கு மன்னிப்பை வழங்குகிறோம். இது பல பாவங்களுக்கு ஒரு கிருபையான பதில், இது தேவையற்ற மோதல்களைத் தடுக்கும் மற்றும் உறவுகள் முறிவதை தடுக்கும். இத்தகைய பண்பட்ட நடத்தை, கடவுளுடனும் மற்றவர்களுடனும் தடையற்ற ஐக்கியத்தை களிக்க நம்மை விடுவிக்கிறது.

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Forgiving Those Who Wound Us

நாம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான காயங்களால் அல்லல் பட்டாலும், மன்னிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாகும். இயேசு கிறிஸ்து அனைத்து வகையான அநியாயங்கள் மற்றும் அநீதிகளை அனுபவித்தார், அதுவும் நேர்மைகேடான மரணம் வரையும். ஆயினும், அவரது இறுதி நேரத்தில் மற்ற சிலுவையில் கேலி செய்த திருடனையும், அவரது வதகன்களையும் மன்னித்தார்.

More

இந்த திட்டத்தை அளித்தமைக்காக ஜோனி மற்றும் நண்பர்கள், சர்வசே மற்றும் டின்டேல் பதிப்பாளர்கள், வேதனையும் தாண்டி பைபிளை படைத்தவர்களுக்கும் நாங்கள் நன்றி செலுத்த வேண்டுகிறோம். மேலும் விபரங்களுக்கு தயவு கூர்ந்து இங்கே செல்லவும்: www.beyondsufferingbible.com/