நம்மை புண்படுத்தியவரை மன்னிப்பதுமாதிரி

Forgiving Those Who Wound Us

7 ல் 6 நாள்

கிறிஸ்தவரின் “சீருடை"

அனைத்து வகையான தொழில்களிலும் சீருடை அணிந்தவர்களை நாம் பார்க்கிறோம். மெக்கானிக்கள், சமையல்காரர்கள், பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் சீருடை அணிகிறார்கள். உண்மையில், சீருடைகளை வழங்குவதற்கும் சுத்தம் செய்வதற்கும் முழு நிறுவனங்கள் உள்ளன. "கிறிஸ்தவ சீருடை" என்று ஒன்று இருக்கிறதா? அப்படியாயின் அது ஆடை அல்ல ஆனால் ஒருவருக்கு ஒருவர் காட்டும் அக்கறையே ஆகும். இந்த ஏட்டுரைப்பகுதி நம்மை "போர்த்தி" கொள்ள ஊக்குவிக்கிறது, அது பொருள்படுத்துவது என்ன வென்றால் கருதிச்செய்யவும் மற்றும் குறிக்கோள் அகியவையே. ஒருவருக்கு ஒருவர் பிரத்யேகமான முறையில் ஒப்பனை செய்து கொள்ள வேண்டும். கருணை, இரக்கம், பணிவு, மென்மை, பொறுமை ஆகியவற்றை நாம் அணிந்து கொள்ள வேண்டும். ஏன்? ஏனெனில் அந்த சீருடைகளின் கீழ் தவறுகள் உள்ள நபர்கள் உள்ளனர். அந்தக் குறைகள் எல்லா வகையிலும் வரும். ஆகவே, கிறிஸ்தவரைக் குறிக்க வேண்டிய பண்புகளின் பட்டியலைக் கடவுள் நமக்கு வழங்குகிறார், பின்னர் அவர் தவறுகளைக் கையாள்வதற்கான ஒரு முக்கியமான நடத்தைக் கருவியை நமக்குத் தருகிறார் - மன்னிப்பு.

மன்னிப்பு என்பது பண்படைந்த விசுவாசிகளின் தினசரி நடத்தை. கடவுள் நம்மைப் பரிசுத்த மக்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். பரிசுத்தமாக இருப்பது என்பது ஒரு குறிக்கொளுக்காக "ஒதுக்கப்படுதல்" அல்லது "அர்ப்பணிப்பு" என்று பொருள்- கர்தரை போல இருக்க. இந்த பத்தியில், நாம் ஒருவருக்கொருவர் கடவுளின் அன்பைக் காட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். இருப்பினும், நம் அனைவருக்கும் தவறுகள் இருப்பதை கடவுள் அறிவார். அந்தக் குறைகளின் மீது கடவுள் இறையாண்மை கொண்டவர், மேலும் ஒருவர் மற்றவரின் குறைபாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்! விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஊடாடுவதின் மூலம் அவர்கள் பரிசுத்தமாக வேண்டும் என்பதே (புனிதமாக்குவது, அர்ப்பணிப்பது) கடவுளின் திட்டம். நாம் மன்னிக்கும்போது, கடவுளின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்துப்போகிறோம்.நம்முடைய தவறுகளும் மற்றவர்களின் தவறுகளும் மன்னிக்கும் நற்பண்பைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பாகிறது.

உங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா (ஜேம்ஸ் 5:16 ஐப் பார்க்கவும்)? கருணை, இரக்கம், பணிவு, மென்மை, பொறுமை ஆகியவற்றை நாம் அணிந்து கொள்ள நீங்கள் தயாரா?. நீங்கள் கிறிஸ்துவைப் போல இருக்கவும், உங்களை புண்படுத்தியவர்களை மன்னிக்க தயாராக இருக்கிறீர்களா?

மன்னிப்பு என்பது விசுவாசிகளின் கூட்டுறவைக் குறிக்க வேண்டும். மன்னிக்கும் முறையில் வாழ்வதன் மூலம் நாம் நிச்சயமாக தனிப்பட்ட முறையில் பயனடைவோம். ஆனால் நாம் ஒருவரையொருவர் மன்னிப்பதால் ஒரு பெரிய நன்மையும் நிறைவேற்றப்படுகிறது: கடவுள் மகிமைப்படுத்தப்படுகிறார், மேலும் கிறிஸ்து உயர்த்தப்பட்டு, கண்காணிக்கும் உலகிற்குத் தெரியப்படுத்தப்படுகிறார். நாங்கள் கிறிஸ்துவைப் போல இருக்கிறோம்!

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Forgiving Those Who Wound Us

நாம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான காயங்களால் அல்லல் பட்டாலும், மன்னிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாகும். இயேசு கிறிஸ்து அனைத்து வகையான அநியாயங்கள் மற்றும் அநீதிகளை அனுபவித்தார், அதுவும் நேர்மைகேடான மரணம் வரையும். ஆயினும், அவரது இறுதி நேரத்தில் மற்ற சிலுவையில் கேலி செய்த திருடனையும், அவரது வதகன்களையும் மன்னித்தார்.

More

இந்த திட்டத்தை அளித்தமைக்காக ஜோனி மற்றும் நண்பர்கள், சர்வசே மற்றும் டின்டேல் பதிப்பாளர்கள், வேதனையும் தாண்டி பைபிளை படைத்தவர்களுக்கும் நாங்கள் நன்றி செலுத்த வேண்டுகிறோம். மேலும் விபரங்களுக்கு தயவு கூர்ந்து இங்கே செல்லவும்: www.beyondsufferingbible.com/