நம்மை புண்படுத்தியவரை மன்னிப்பதுமாதிரி

Forgiving Those Who Wound Us

7 ல் 4 நாள்

மன்னிப்பதற்கான பரிசு

நம்மில் பலர் தீர்க்கப்படாத மோதல்கள், உடைந்த தொடர்புகள் மற்றும் நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் நடந்துகொண்டிருக்கும் "பிரச்சினைகள்" ஆகியவற்றுடன் வாழ்கிறோம். ஆனால் பெரிய நன்னம்பிக்கை இருக்கிறது! ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழும் விசுவாசிகளின் கூட்டமாக தேவாலயத்தை இறைவன் வடிவமைத்திருக்கிறார். “இனிமையாக . . . மென்மையான இதயம், மன்னித்துவிடும் பாங்குடன் இருங்கள்." என இந்த உரைக்கூற்றில், விசுவாசிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மன்னிக்கும் கட்டளையின் மூலம் கனிவாகவும் கனிவாகவும் இருக்க வேண்டும் என்ற கட்டளைகள் வலுப்படுத்தப்படுகிறது. மன்னிப்பு என்பது மற்றவர்களுக்கு நாம் கொடுக்கும் ஒரு பரிசு, தியாகமுள்ள வாழ்க்கைமுறை, அதன் மூலம் மற்றவர்களின் குற்றங்களின் நம்மை நோக்கிய கடப்பாட்டில் இருந்து அவர்களை விடுவிக்கிறோம். நமது பாவங்கள் அனைத்தையும் மறைக்க கடவுள் ஏற்கனவே தம் சொந்த மகனைக் கொடுத்ததால், நாமும்மற்றவர்களை மன்னிக்க முடிகிறது; கடவுள் ஏற்கனவே ஈடு கொடுத்துவிட்டார். நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது கிறிஸ்துவில் கடவுளின் தியாகப் பரிசின் நுழைவுரிமை பெறுகிறோம்.

அன்பின் இந்த முன்னேற்றத்திற்கான உந்துதல் நம் சொந்த இதயங்களில் காணப்படுவதில்லை. மாறாக, அந்த உந்துதல் கடவுளிடமிருந்தும், கிறிஸ்துவில் நம்மை மன்னிக்க அவர் செய்தவற்றிலிருந்தும் வருகிறது. உண்மையான தவறுகள் செய்யப்பட்டுள்ளதால் கடனை ஈடு செய்தே ஆக வேண்டும். ஆயினும், நமக்கு எதிராக செய்யப்பட்ட தவறுகளுக்கான கடப்பாட்டை நாம் விடுவிக்கும்போது, ​​கடவுளின் கிருபையின் அந்த விலையை ஈடு செய்யும் என நம்புகிறோம். இது நம் சொந்த வாழ்வில் ஒரு விமோசனம் ஏற்படுத்துகிறது. கிறிஸ்துவில் சுதந்திரத்தை மற்றவர்களுடன் இணக்கத்தையும் துய்த்து மகிழ இது நம்மை நிர்மாணிக்கின்றது! முழுமையான மற்றும் கட்டற்ற மன்னிப்பின் சிறப்பியல்பினால் ஆக்க பட்டால் உறவுகள் எப்பேற்பட்ட விடுதலையும் நல்லெண்ணமும் அனுபிக்க நேரிடும் என்பதை சற்றே எண்ணிப்பாருங்கள். அன்பான, கனிவான மற்றும் மன்னிக்கும் உறவுகளின் மூலம் தான் விசுவாசிகளாகிய நமது கூட்டுறவு பராமரிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Forgiving Those Who Wound Us

நாம் உணர்ச்சி அல்லது உடல் ரீதியான காயங்களால் அல்லல் பட்டாலும், மன்னிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கையின் மூலக்கல்லாகும். இயேசு கிறிஸ்து அனைத்து வகையான அநியாயங்கள் மற்றும் அநீதிகளை அனுபவித்தார், அதுவும் நேர்மைகேடான மரணம் வரையும். ஆயினும், அவரது இறுதி நேரத்தில் மற்ற சிலுவையில் கேலி செய்த திருடனையும், அவரது வதகன்களையும் மன்னித்தார்.

More

இந்த திட்டத்தை அளித்தமைக்காக ஜோனி மற்றும் நண்பர்கள், சர்வசே மற்றும் டின்டேல் பதிப்பாளர்கள், வேதனையும் தாண்டி பைபிளை படைத்தவர்களுக்கும் நாங்கள் நன்றி செலுத்த வேண்டுகிறோம். மேலும் விபரங்களுக்கு தயவு கூர்ந்து இங்கே செல்லவும்: www.beyondsufferingbible.com/