21 நாள் உபவாசம்மாதிரி
இது வேதாகமத்தில் மிகவும் பிரகாசமான கதைகளில் ஒன்றாகும். இந்த மூன்று இளைஞர்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை நீங்கள் நிச்சயமாக தொடர்புபடுத்தலாம் - உண்மைநிலைகள் சத்தியத்தின் முகத்தை எதிர்கொள்ளும் தருணம். உண்மைகள் என்னவென்றால், அவர்கள் சட்டத்தை மீறிவிட்டார்கள், தண்டனையோ மரணம், நேபுகாத்நேச்சார் உலகின் மிக சக்திவாய்ந்த மனிதர், அருகிலுள்ள காவலரைக் கொல்லும் அளவுக்கு நெருப்பு சூடாக இருந்தது, அவர்களை தூக்கி எறிய ஏராளமான காவலர்கள் இருந்தனர், அவர்கள் இருவரும் பணிய வேண்டும் அல்லது எரிக்கப்பட வேண்டும். அவ்வளவுதான். ஆனால் சத்தியம் அந்த உண்மைகளை எதிர்த்தது, சத்தியம் என்னவெனில் அந்த மூன்று மனிதர்களும் உறுதியாக நின்றனர். சத்தியம் என்னவென்றால் அவர்களுடைய தேவன் அவர்களை விடுவிக்கப்போகிறார் அல்லது அவருடைய சேவையை நிறைவேற்றுவதில் அவர்கள் தாமாக உயிர்துறப்பார்கள். சத்தியம் என்னவேன்றால் தேவகுமாரன் அக்கினித்தழல்களுக்குள் அவரகளோடே சஞ்சரித்தார். எத்தகைய சத்தியத்தை எதிர்க்கிற உண்மைநிலைகளை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்? இந்த நிலைகளை இன்று ஜெபத்தோடே கர்த்தரிடம் எடுத்துசென்று கர்த்தர் அக்கினியில் உங்களோடு சஞ்சரிப்பார் என்கிற தைரியத்துடன் விசுவாசம்கொள்ளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.
More
We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.