21 நாள் உபவாசம்மாதிரி

21 Day Fast

21 ல் 16 நாள்

இன்றைய வாசிப்பின் தலைப்பு கர்த்தர் மீது அச்சமற்ற நம்பிக்கையின் ஒரு சங்கீதம். இது ஒரு விஷயத்தைத் தேடுவது பற்றி பேசுகிறது. தேடும் இந்த நேரத்தில், கர்த்தரை தேடுவதற்குப் பதிலாக அவரிடமிருந்து என்ன கிடைக்கும் என்று தேடுவதில் கவனம் செலுத்துவது எளிதானது - அவருடைய முகத்தை அல்லாமல், அவருடைய கையை தேடுவது போல. கையை முத்தமிட ஒரு ராஜாவை அணுகுவதற்கும், முகத்தை முத்தமிட அன்பான தந்தையை அணுகுவதற்கும் உள்ள வித்தியாசத்தை சிந்தியுங்கள். தேவன் நமது ராஜா மற்றும் தந்தை. அவர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பதற்கும் வல்லவர். ஆனால் அவர் நீங்கள் என்றும் அறிந்திடுவதை விட உங்களை ஆழமாக நேசிக்கிறார். நீங்கள் அவருடைய முகத்தைத் தேடும்போது, ​​நீங்கள் அவருக்கு மிக நெருக்கமான தோரணையில் முடிகிறீர்கள். நீங்கள் முன்பை விட இன்னும் கர்த்தரின் முகத்தைத் தேடுவீர்கள் என்றும், அவருடன் நெருங்கிப் பழகுவீர்கள் என்றும் இன்று ஜெபியுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 15நாள் 17

இந்த திட்டத்தைப் பற்றி

21 Day Fast

உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.

More

We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.