இது உங்கள் திருப்புமுனை ஆண்டு: இந்தப் புதிய வருடத்தை உத்வேகத்துடன் துவங்க உதவும் 5 நாட்கள் தியான வாசிப்புத் திட்டம்மாதிரி

Your Breakthrough Year: 5 Days of Inspiration to Kickstart Your New Year

5 ல் 5 நாள்

நாள் 5 - சிதைந்த கனவுகள்

மெலெக் செர்ட் எனும் பெண்மணி, கடுமையான வலி மற்றும் இரத்தப் போக்குடன் மருத்துவமனைக்குச் சென்றபோது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால் பின்னர் அவரது இரத்தப்போக்கு நின்றது. அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இருப்பினும், மறுநாள் மீண்டும் அதே வலியுடன் அவரும் அவரது கணவர் ஹசனும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அவருக்குக் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் இருந்ததால், அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார். அவருக்கு விரைவில் பிரசவமும் ஆனது, ஆனால் அவரது குழந்தை இறந்து பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துருக்கியில் உள்ள செஹான் அரசு மருத்துவமனையால், அந்தக் குழந்தைக்கு இறப்புச் சான்றிதழும், ஒரு சிறிய இறுதிப் பையும் வழங்கப்பட்டது.

ஹசன் குழந்தையை அடக்கம் செய்வதற்காக ஹெரேக்லி அருகிலுள்ள கல்லறைக்குக் குழந்தையை எடுத்துச் சென்றார். ஹசன் கல்லறைக்கு காரில் சென்றபோது, ​​குழந்தையின் அழுகை சத்தம் கேட்க ஆரம்பித்தது. அவர் காரை நிறுத்தி பையைக் கழற்றினார். குழந்தையின் உடல் அசைந்தது. அவர் தனது மேல் ஜாக்கெட்டைக் கழற்றி, அதில் அந்தக் குழந்தையைச் சுற்றிக் கொண்டு, கார் ஹீட்டரை மேலே திருப்பி மருத்துவமனைக்கு அழைப்பு விடுத்தார்.

அம்புலன்ஸ் வந்தது, குழந்தை அதானா நகர ஆராய்ச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, இரத்த அழுத்தம் குறைந்த நிலையில், குழந்தை ஆபத்தான நிலையில் இருந்தது. ஆனால் மெலக் தன் குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டாள்! அவள் கைகளும் கால்களும் படபடக்க, இதயம் துடித்தது.

அந்தத் தம்பதிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவர்களின் கைக்குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்தது, ஆனால் மரிக்கவில்லை. அவர்கள் முழு விரக்தியிலிருந்து நம்பமுடியாத மகிழ்ச்சிக்குச் சென்றனர். அவர்களின் குழந்தை உயிருடன் உள்ளது, இப்போது அந்தக் குழந்தையின் வளர்ச்சி மற்றும் முழுமையாக குணமடைவதற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

லூக்கா 15:24 கூறுகிறது, “என்னுடைய குமாரன் மரித்திருந்தான், ஆனால் இப்போது உயிர்த்தெழுந்தான். காணாமல் போன அவன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். அதை அவர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள். இந்த ஊதாரி கெட்ட குமாரன் கதையில், அவன் உண்மையில் இறக்கவில்லை, ஆனால் அவன் வீட்டை விட்டு வெளியேறியதால், இறந்துவிட்டான் என்று தோன்றியது. அவன் திரும்பி வந்த போது, அவனது தந்தை தனது "இறந்த" மகன் வீட்டிற்குத் திரும்பி வந்ததைக் குறித்து மகிழ்ச்சியடைந்தார்.

ஹசனும், மெலேக்கும் தங்கள் கைக்குழந்தை இறந்துவிட்டதாக நினைத்தனர், தந்தை தனது ஊதாரி கெட்ட குமாரன் நிரந்தரமாக இறந்துவிட்டதாக நினைத்தார். ஒரு கனவில் நாம் மரணத்தை அனுபவிக்க முடியும், அது உண்மையான மரணத்தைப் போலவே உணர முடியும்.

கனவு நனவாகும் என்று நாம் நம்பி, பிரார்த்தனை செய்து, அதற்காக உழைத்து, அது நடக்காதபோது, ​​அது மரணத்தைப் போன்றது. நமக்கு அதிர்ச்சியும், வேதனையும், துக்கமும்தான் மிச்சம். அனைத்தும் தொலைந்துவிட்டதாகத் தோன்றும். நம் வாழ்க்கையில் எந்த நோக்கமும் அர்த்தமும் இல்லை என்பது போல் தோன்றும்.

ஆனால் இழந்ததை மீட்டெடுக்கவும், இறந்ததை உயிர்ப்பிக்கவும் கர்த்தர் ஒரு வழியைக் கொண்டுள்ளார். நாம் நமது கனவைப் புதைக்க தயாராக இருக்கலாம். ஆனால், கர்த்தர் மறுக்க முடியாத வகையில் மீட்டெடுப்பார். நம் கனவு சாகவில்லை - அது உண்மையில் உயிருடன் இருக்கிறது.

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Your Breakthrough Year: 5 Days of Inspiration to Kickstart Your New Year

இந்தப் புதிய வருடம் உங்களுக்கு ஓர் திருப்புமுனைஆண்டாக இருக்கலாம். கடந்த ஆண்டு நீங்கள் எதிர்கொண்ட தடை முடிந்து விட்டது. உங்கள் முன்னேற்றம் இப்போது அதன் மறுபக்கத்தில் உள்ளது. இறுதியாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விரும்பிய முன்னேற்றத்தை அடையக்கூடிய வருடம், இந்த ஆண்டாக இருக்கலாம். உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைவதற்குத் தேவையான ஊக்கத்தையும், உத்வேகத்தையும், இந்த வாசிப்புத் திட்டம் உறுதியாக அளிக்கும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய The Feddக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம். மேலதிக தகவலுக்கு: https://www.rickmcdaniel.com/thisisliving.html க்கு செல்லவும்