இது உங்கள் திருப்புமுனை ஆண்டு: இந்தப் புதிய வருடத்தை உத்வேகத்துடன் துவங்க உதவும் 5 நாட்கள் தியான வாசிப்புத் திட்டம்மாதிரி
நாள் 4 - வாழ்க்கையின் மறு பக்கம்
இன்று நாம் பெரும்பாலும் நமது செல் ஃபோன்களில் இருந்து இயர்பட்கள் மூலம் இசையைக் கேட்கிறோம். இன்று எல்லாமே டிஜிட்டல். ஒரு காலத்தில் கேசட் ஒலி நாடாக்கள், 8 டிராக் ஸ்டிரியோ மற்றும் ஒலி தட்டுகளில் இசை மற்றும் பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் ஒலி நாடாக்கள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட வகையான இசைப் பதிவுகளைக் கொண்டிருந்தன.
1945ம் வருடத்தில் கேட்கப்பட்ட புகழ்மிக்க பாடல்களை நினைவில் வைத்துக்கொள்ளும் வயது உங்களுக்கு இல்லை. அதுவும், இந்த டிஜிட்டல் யுகத்தில். ஆனால், அந்த சிறிய கிரம ஃபோன் தகட்டில் இரண்டு பாடல்கள் இருக்கும். அதை நீங்கள் விலைக்கு வாங்கலாம் என்று நம்புவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஆம். அதில் ஒரு பாடல் A பக்கத்திலும் மற்றொன்று B பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ஒரு தொகுப்பில் பத்து அல்லது பன்னிரண்டு பாடல்கள் இருக்கும். அதாவது, 33 அல்லது லாங்-ப்ளே ரெக்கார்டில். ஆனால், ஒரு பாடலின் பதிவு 45 எனும் வகையில் விற்கப்பட்டது. ஒரு கிராம ஃபோன் ரெகார்ட் கருவியைக் கொண்டு இந்த இரண்டு வகையான ரெக்கார்டுகளையும் இயக்கலாம், ஆனால் அதற்கான அடாப்டர் தேவை. 45 வகை எனில் அதன் கை ஊசியின் ஆரம், ஆல்பத்தின் அளவை விட பெரியதாக இருக்கும்.
பொதுவாக, இசை வெளியீட்டு நிறுவனம், வெற்றி பெறும் என்று நம்புகின்ற பாடலை A பக்கத்தில் பதிவு செய்வர், மற்ற சாதாரண இசையுடன் அமைந்த பாடல் B பக்கத்தில் இருக்கும். ஆனால் சில நேரங்களில் ஹிட் பாடல் B பக்கத்தில் அமைந்துவிடும்.
சில B பக்கம் அமைந்த பெரிய ஹிட் பாடல்கள்; பீட்டில்ஸின் "I Saw Her Standing There", குயின் எழுதிய "We will Rock You", எல்விஸ் பிரெஸ்லியின் "Hound Dog", ரிக் ஜேம்ஸின் "Super Freak" மற்றும் ரோலிங் ஸ்டோன்ஸின் "You Can't Get Always What You Want".
அப்போஸ்தலர் 16: 6-7 நமக்குச் சொல்கிறது, “பவுலும் அவருடைய நண்பர்களும் ஃபிரிகியா மற்றும் கலாத்தியா தேசங்கள் வழியாக ஊழியம் செய்யச் சென்றனர், ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை ஆசியாவில் பிரசங்கிக்க அனுமதிக்கவில்லை. அவர்கள் மீசியா தேசம் வந்தபின், பித்தினியா நாட்டிற்குச் செல்ல முயன்றனர், ஆனால் பரிசுத்தாவியானவர் அவர்கள் அங்குச் செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
பவுல் வெற்றி அடையும் என நினைத்த A பக்கத்தைக் கர்த்தர் நிறுத்தினார். அவரை மக்கெதோனியா எனும் B பக்கத்தை நோக்கி நகர்த்தினார். ஆனால் அது வரலாற்றை மாற்றியது. கிறிஸ்தவம் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு பரவியது. ஐரோப்பாவில் திருச்சபை நிறுவப்பட்டது. பின்னர் அது உலகம் முழுவதும் பரவியது.
பவுல் தனது திட்டங்களில் ஏற்பட்ட மாற்றத்திற்கு, உற்சாகமாகவும் நேர்மறையாகவும் பதிலளிக்காத வரை இது நடந்திருக்காது. அவர் கர்த்தர் மதியீனமாகத் தன்னை நடத்துவதாக்க் கருதியிருக்கலாம், அல்லது தனது நிலையை நினைத்துப் பரிதாபப்பட்டிருக்கலாம். அவர் தன்னை முற்றிலும் அர்ப்பணிக்காதவராக்க் கூட அந்த பணியில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அதற்குப் பதிலாக அவர் முழு மனதோடு, பல நகரங்களில் திருச்சபையை நிறுவினார்.
இன்று நீங்கள் விரும்பாத, திட்டமிடாத ஒரு சூழ்நிலையில் பவுலைப் போல இருக்கலாம். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ அது முற்றிலும் மாறி இருக்க கூடும். ஆனால் நீங்கள் கனவு கண்டதை விட அதிக வெற்றியையும் அதிக தாக்கத்தையும் கொண்டுவரக் கர்த்தரால் அந்தச் சூழலைப் பயன்படுத்த முடியும்.
கர்த்தர் உங்கள் B பக்கத்தில் என்ன செய்வார் என்று உங்களுக்குத் தெரியாது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்தப் புதிய வருடம் உங்களுக்கு ஓர் திருப்புமுனைஆண்டாக இருக்கலாம். கடந்த ஆண்டு நீங்கள் எதிர்கொண்ட தடை முடிந்து விட்டது. உங்கள் முன்னேற்றம் இப்போது அதன் மறுபக்கத்தில் உள்ளது. இறுதியாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விரும்பிய முன்னேற்றத்தை அடையக்கூடிய வருடம், இந்த ஆண்டாக இருக்கலாம். உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைவதற்குத் தேவையான ஊக்கத்தையும், உத்வேகத்தையும், இந்த வாசிப்புத் திட்டம் உறுதியாக அளிக்கும்.
More