இது உங்கள் திருப்புமுனை ஆண்டு: இந்தப் புதிய வருடத்தை உத்வேகத்துடன் துவங்க உதவும் 5 நாட்கள் தியான வாசிப்புத் திட்டம்மாதிரி
நாள் 1 - திருப்புமுனை
நான் ஒரு தேவாலயத்தை நிறுவினேன், அது எனது இதயத்தின் விருப்பத்திற்காக அல்ல. நாங்கள் ஒரு புதிய மாநிலத்திற்குச் சென்றோம். முதலில் பத்து குடும்பங்கள் சேர்ந்து, ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் கூடி, எங்கள் ஆராதனையைத் தொடங்கினோம். முதல் ஆராதனைக்கு வருமாறு 4000க்கும் மேற்பட்ட அழைப்பிதழ்களை எங்கள் கைகளால் எழுதி மக்களுக்கு அழைப்பு விடுத்தோம்.
பல ஆண்டுகள் கடந்த பிறகு, நான் புதிய திருச் சபைகளை உருவாக்கும் இயக்கத்தில் தொடக்கப் பேச்சாளராக இருந்தேன். எனது உத்வேகமான செய்தி "சிலர் மட்டுமே, போற்றுதலுக்கு உரியவர்கள், அவர்கள் திருச்சபை நடுவோர்". அவர்கள் கர்த்தரது படையின் சிறப்பு வீரர்கள். ஆம், எதிரிகள் இடத்தை கைப்பற்றுவது அத்தனை எளிதானது அல்ல, ஆனால் தேவனுடைய ராஜ்யம் முன்னேற வேண்டியது அவசியம்.
ஒரு தேவாலயத்தைத் தொடங்கும் போது, அதன் ஆரம்ப நாட்களில் பல சவால்கள் உள்ளன. கர்த்தர் உங்கள் சபை வளரும்படியாக ஆசீர்வதித்தால், அதிலும் கூட பல புதிய சவால்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது சபை நடத்தத் தேவையான இட வசதி பிரச்சினை. நீங்கள் திருச்சபை ஆராதனையை நிரந்தரமாக வாடகை கட்டிடத்தில் நடத்த முடியாது. ஒரு காலகட்டத்தில் நிச்சயம் உங்கள் சபைக்கென ஒரு கட்டிடம் தேவைப்படும்.
ஆக எங்களது திருச்சபைக்கும் ஒரு இடம் வாங்கப் பணம் சேகரித்து, ஒரு சரியான இடத்தை தேட ஆரம்பித்தோம். அது உண்மையில் மிக நீண்ட, சோர்வு தரும் ஒரு காரியமாக இருந்தது. நாங்கள் ஏறக்குறைய 25 வெவ்வேறு இடங்களைப் பார்த்தோம், அவற்றில் எதுவுமே எங்கள் தேவாலயத்திற்கு ஏற்றதாக அமையவில்லை.
எங்களுக்கு ஒரு திருப்புமுனை தேவை - சரியானதொரு இடத்தைப் பெறுவதற்கு ஏதாவது ஒரு அதிசயம் நடக்க வேண்டும். திருச்சபைக்கு மிக முக்கியமானது சரியான இடம், அது அனைவரும் எளிதாக அணுகும்படி இருக்க வேண்டும். இடம், அணுகல், இடம், அணுகல், இடம், அணுகல்.
எங்கள் திருச்சபை அங்கத்தினரில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் என்னிடம் எங்கள் பகுதியில் உள்ள மிகப் பெரிய ரியல் எஸ்டேட் உரிமையாளருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தித் தருகிறேன் எனக் கூறினார். அந்த சந்திப்பில் அவர்களுக்குச் சொந்தமான ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றி நான் அவரிடம் கேட்டேன். அது எப்போதும் நான் மிகவும் விரும்பிய இடம்.
அந்த இடம் ஒரு நான்கு வழிச்சாலையில் இருந்தது. அது மாநிலங்களுக்கு இடையேயான மிக முக்கியமான பாதையாகும். அதன் முகப்பு 1000 அடி அகலம். அத்துடன் அந்த இடம் அப்பகுதியில் உள்ள மிகப்பெரிய வீட்டு வசதி வாரியத்திற்கு எதிரே இருந்தது. நாங்கள் விரும்பிய அந்த தேவாலய இடத்தை விற்பதற்குச் சம்மதம் என அவர் என்னிடம் கூறினார். பின்னர் அவர் என்னிடம் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த இடத்தை 3.5 இலட்சம் டாலர்களுக்குத் தருவதாகக் கூறினார்!
எங்கள் திருப்புமுனையைப் பெற்றோம், அது எங்கள் தேவாலயத்தை மிகச் சிறப்பாக மாற்றியது. திருச்சபை கட்டப்பட்ட முதல் வருடத்தில், எங்களது அங்கத்தினர்களது எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்தது. 1 நாளாகமம் 14:11 நமக்குச் சொல்கிறது, "தண்ணீர்கள் உடைந்தோடுகிறது போல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப் பண்ணினார்’ என்று சொல்லி, தாவிது அந்த இடத்திற்கு ‘ஆண்டவர் முறியடித்தார்’ என்று பெயரிட்டான்.”
கர்த்தர் அதுபோல உங்களுக்கும் ஒரு திருப்புமுனையைத் தர முடியும். அது நடந்தால், அது அற்புதமான ஆசீர்வாதங்களின் வெள்ளம் போல் இருக்கும். அதற்காக நீங்கள் கர்த்தரைத் தேட வேண்டும்... பல சமயங்களில், அது நடக்க நீங்கள் விரும்புவதை விட அதிக நேரம் எடுக்கலாம். ஆனால் கர்த்தர் அதை நிச்சயம் செய்வார். உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை வரும். அதன் பின்னர் உங்களது வாழ்க்கை ஒரு போதும் ஒரே மாதிரியாகவே இருக்காது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்தப் புதிய வருடம் உங்களுக்கு ஓர் திருப்புமுனைஆண்டாக இருக்கலாம். கடந்த ஆண்டு நீங்கள் எதிர்கொண்ட தடை முடிந்து விட்டது. உங்கள் முன்னேற்றம் இப்போது அதன் மறுபக்கத்தில் உள்ளது. இறுதியாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விரும்பிய முன்னேற்றத்தை அடையக்கூடிய வருடம், இந்த ஆண்டாக இருக்கலாம். உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைவதற்குத் தேவையான ஊக்கத்தையும், உத்வேகத்தையும், இந்த வாசிப்புத் திட்டம் உறுதியாக அளிக்கும்.
More