இது உங்கள் திருப்புமுனை ஆண்டு: இந்தப் புதிய வருடத்தை உத்வேகத்துடன் துவங்க உதவும் 5 நாட்கள் தியான வாசிப்புத் திட்டம்மாதிரி

Your Breakthrough Year: 5 Days of Inspiration to Kickstart Your New Year

5 ல் 2 நாள்

நாள் 2 - ஒரு அரிய நிகழ்வு

இது இங்கிலாந்தில் நிகழ்ந்த ஒரு அரிய நிகழ்வு. ஒரு பெண் கர்ப்பம் தரித்திருந்த போதும், அதே காலத்தில் மீண்டும் கர்ப்பமானார். இறுதியில் மிக அரிதாக, மூன்று வார இடைவெளியில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்! பொதுவாக, ஒரு பெண் கருவுற்றால், அவளது உடல் அதே சமயத்தில், மீண்டும் கர்ப்பம் தரிப்பதைத் தடுக்க, அவரது உடல் பல செயல்முறைகளைத் தொடங்குகிறது. குறிப்பாக, அவளது கரு முட்டை உருவாகுவதை நிறுத்தும்படியாக பல ஹார்மோன்களை வெளியிடுகிறது.

ஆனால் மிக அரிதான சந்தர்ப்பங்களில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்குத் தொடர்ந்து கருமுட்டை உருவாகக் கூடும். அத்துடன் அந்த முட்டை விந்தணுக்களால் கருவுற்று, கருப்பையையும் சென்றடையலாம். இரண்டு கருவுற்ற முட்டைகள், வெவ்வேறு நேரங்களில் கருப்பையில் சென்று வளரும் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு சூப்பர்ஃபெடேஷன் என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பெண்ணை 12 வாரங்களுக்குப் பிறகு, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது முதல் குழந்தை உருவானதிலிருந்து, மூன்று வாரக் கால அளவு வித்தியாசத்தில், இரண்டாவது குழந்தை உருவாகி இருந்ததை கண்டுபிடித்தனர். சூப்பர்ஃபெடேஷன் நிகழ்வு மிகவும் அசாதாரணமானது என்பதால், இரண்டு குழந்தைகளுக்கும் இடையேயான இந்தக் கால அளவு வித்தியாசத்தை மருத்துவர்களால் ஆரம்பத்தில் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பின்னர் மருத்துவர்கள் சூப்பர்ஃபெடேஷன் நிகழ்ந்ததைக் கண்டறிந்தனர்.

நோவா மற்றும் ரோசாலி ஆகிய அந்த இரண்டு குழந்தைகளும் முன்கூட்டியே பிறந்தவர்கள். நோவா மூன்று வாரங்களையும், ரோசாலி 13 வாரங்களையும் மருத்துவமனையில் கழித்தார். அந்த இரண்டு குழந்தைகளும் இப்போது வீட்டில் ஆரோக்கியமாக உள்ளனர்.

சூப்பர்ஃபெடேஷன் மிகவும் அசாதாரணமானது, ஏனென்றால் அது நிகழ மூன்று தனித்தனியான, நடக்கவே சாத்தியமற்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும். பொதுவாகக் கருத்தரித்தல் நிகழும்போது ஏற்படும் கர்ப்பகால ஹார்மோன்களினால், இயல்பாகவே கரு முட்டை உருவாவது நின்று விடும். அடுத்ததாக கர்ப்ப வாய் வழியாக விந்தணுக்கள் செல்வதைத் தடுக்க ஒரு தடை உருவாகும். அத்துடன் கருப்பையில் மற்றொரு கரு வளர போதுமான இடம் தேவைப்படுகிறது. அதே போல் கருவுற்ற பிறகு ஒரு பெண்ணிற்கு ஹார்மோன்கள் சாதாரணமாக இயல்பான முறையில் கரு உருவாகும் வகையில் வெளிப்படாது.

ஆனால் அந்த அரிய நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்ந்தன, ரெபேக்கா ராபர்ட்ஸ் தனது 39 வயதில் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றார்.

அற்புதமான ஒன்றைச் செய்யக் கர்த்தர் நிகழ்வுகளையும், சூழ்நிலைகளையும் ஒருங்கிணைத்துத் திட்டமிடும் காலங்கள் உள்ளன. சில நேரங்களில் நமது வாழ்வில் தோன்றும் நிலைமையை எவ்வாறு சரிசெய்வது என்பது நமக்குப் புரியாமல் இருக்கலாம். இதற்கு மேல் இது சரியாக நடப்பதற்கு வழி இல்லை என்று நாம் நினைக்கக் கூடும். இந்தப் பிரச்சினைக்கு இனித் தீர்வே கிடையாது என்று நாம் நம்பிக்கை இழந்து விடலாம்.

ஆனால், கர்த்தரால் அரிதான, அசாதாரணமான, சாத்தியமற்ற ஒன்றைச் செய்ய முடியும். சாத்தியம் இல்லாததைச் சாத்தியமாகும் வகையில் அவர் நிகழ்வுகளைச் சரியான முறையில் ஒன்றிணைக்கிறார். தேவன் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அதைச் செயல்படுத்துகிறார்.

நாம் கர்த்தருக்கு நம்மை முழுவதுமாக ஒப்புக் கொடுக்கும் போது, ​​ஆவியானவர் நம்மில் வல்லமையுடன் செயல்படுகிறார். அப்போது அவருடைய படைப்பின் அற்புத கிரியை நாம் காண்போம். அவர் நம் வாழ்க்கையை அற்புதமாக வழிநடத்துவார்; நாம் அவருடைய பாதையில் பயணிக்கும் போது இளைப்பாறலாம். அத்துடன் அவர் செய்யப்போகும் ஆச்சரியமான காரியங்களுக்குச் சாட்சியாக இருப்போம்.

யோவான் 14:26 ல் "என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் ” என்று இயேசு கூறினார். ஆவியானவரால் நமது வாழ்வில் நிகழும் அற்புத நிகழ்வுகளை அனுபவிப்போம். அந்த அற்புத நிகழ்வுகள் கர்த்தரிடமிருந்து மட்டுமே வந்தவை என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Your Breakthrough Year: 5 Days of Inspiration to Kickstart Your New Year

இந்தப் புதிய வருடம் உங்களுக்கு ஓர் திருப்புமுனைஆண்டாக இருக்கலாம். கடந்த ஆண்டு நீங்கள் எதிர்கொண்ட தடை முடிந்து விட்டது. உங்கள் முன்னேற்றம் இப்போது அதன் மறுபக்கத்தில் உள்ளது. இறுதியாக நீங்கள் உங்கள் வாழ்க்கையில் விரும்பிய முன்னேற்றத்தை அடையக்கூடிய வருடம், இந்த ஆண்டாக இருக்கலாம். உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைவதற்குத் தேவையான ஊக்கத்தையும், உத்வேகத்தையும், இந்த வாசிப்புத் திட்டம் உறுதியாக அளிக்கும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய The Feddக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம். மேலதிக தகவலுக்கு: https://www.rickmcdaniel.com/thisisliving.html க்கு செல்லவும்