காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம் மாதிரி
நாள் 9
மரியாளின் கதையையும், அவர் இயேசுவை கருத்தரித்தலையும் நாம் கேட்கும்போது, அது மிக நம்பமுடியாததாகவும், புரிந்துகொள்வதற்கு கடினமாகவும் இருக்கும். அதனால்தான் அதற்கு நம்பிக்கை தேவை; பரிசுத்த ஆவியின் மூலம் கர்ப்பம் போன்ற ஒன்றை நமது உள்ளுணர்வு நம்புவது அல்ல! ஆனால் யோசேப்பு? நிச்சயமாக அவர் ஏமாற்றப்பட்டதாகவும், இழந்து போனதாகவும், தனது மணமகள் துரோகம் செய்ததாகவும் உணர்ந்திருக்க வேண்டும். அவர் ஒரு குழந்தை உண்டாயிருக்கிறார் என்ற செய்தியில் அவர்களின் திருமணத்திற்கு காத்திருக்கும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் வீழ்ச்சியடைந்தன.
மரியாளை "கௌரவமாகவும் அமைதியாகவும்" விவாகரத்து செய்ய முயற்சிப்பதன் மூலம் யோசேப்பு ஏற்கனவே பெருந்தன்மையாக நடந்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில், யூத சட்டம், மரியாள் துரோகம் இழைத்து இருந்திருந்தால், அந்த நேரத்தில் அவ்வாறு கருதப்பட்டது, அவள் மூப்பர்கள் முன் கொண்டு வரப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படுவாள். ஒரு நீதியுள்ள மனிதராக இருந்ததால், யோசேப்பு, மரியாளை அவள் அவமானப்படுவதிலிருந்து பாதுகாக்க முயன்றார். இந்தச் சூழ்நிலையில் அவர் உன்னதமான காரியத்தைச் செய்து கொண்டிருந்தாலும், அவர் அனுபவித்த மனவேதனையையும் குழப்பத்தையும் அது மாற்றியிருக்க முடியாது.
பின், ஒரு இரவில், எல்லாம் மாறிவிட்டது. ஒரு தேவதூதன் அவருக்கு ஒரு கனவில் தோன்றி, 700 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசனம் சொன்னது இறுதியாக நடந்தது என்பதை உறுதிப்படுத்தினார்: நம்முடைய இம்மானுவேல், நம் கடவுள், ஒரு கன்னியின் மூலம் பிறக்கப் போகிறார். அப்போதுதான், கீழ்ப்படிதலுடன் நடக்கவும், அவருடைய புதிய குடும்பத்திற்காக கடவுள் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதைப் பின்பற்றவும் அவருக்கு விசுவாசமும் தைரியமும் வந்தது.
வாழ்க்கை திருப்பங்களும் எதிர்பாராதவைகளும் நிறைந்தது என்பதில் இரகசியமில்லை. நம்மை முற்றிலுமாக உலுக்கும் செய்திகள், நம்மை சிதைக்கும் வளைவுகள் மற்றும் அனைத்தையும் ஒரு நொடியில் மாற்றும் தொடர்புகள், இவைகளுக்கு யாரும் விதிவிலக்கில்லை. யோசேப்பைப் போலவே, எந்த அர்த்தமும் இல்லாத சூழ்நிலைகள் நம் முன் வைக்கப்படும் நேரங்கள் இருக்கும். ஏற்றுக்கொள்ளவதற்கு இன்னும் கடினமான ஒன்று என்னவென்றால், சில நேரங்களில், யோசேப்பு பெற்ற பதில்களையும் தெளிவையும் நாம் பெறப் போவதில்லை. இது உண்மைகள் அனைத்தும் உடைந்த உலகில் நாம் வாழ்வதன் விளைவாகும். ஆனால் அப்போதும் கூட, நமக்குத் தெரிந்ததை உறுதியாகப் பற்றிக்கொள்ளலாம்: கடவுள் நல்லவர், அவர் உங்கள் நன்மைக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் எல்லாவற்றையும் செய்வார்.
குழப்பமான அல்லது புண்படுத்தும் சூழ்நிலை உங்களைத் திசைதிருப்பி விடாமல், பரிசுத்த ஆவியானவரின் நெருக்கம், அவருடைய குரல் உங்களை வழிநடத்தட்டும். அவரை நம்புவதற்கு ஏது இல்லாத நிலைகளிலும், அவரை நம்புவதை தெரிந்தெடுங்கள். யோசேப்பின் கீழ்ப்படிதலில், கடவுள் நினைத்ததை விட அதிகமாகவும் ஏராளமாகவும் செய்ய முடிந்தது. உன்னுடன் அதைச் செய்ய முடியாது என்று யார் கூற முடியும்?
செயல் படி: நீங்கள் எல்லா நம்பிக்கையையும் இழந்த காலத்தைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள், ஆனால் கடவுள் வந்து, அவருடைய நோக்கத்தையும் மகிமையையும் உங்களுக்கு வெளிப்படுத்தினார். அவருடைய ஏற்பாடு மற்றும் அசைக்க முடியாத தன்மைக்காக நன்றி செலுத்தும் பிரார்த்தனையை எழுதுங்கள்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.
More