காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம் மாதிரி

Timeless Wonder | a Christmas Reading Plan From New Life Church

19 ல் 11 நாள்

நாள் 11

மத்தேயு 2 இல், தனது ஆட்சிக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் அழிக்க தீவிரமாக விரும்பின ஏரோது மன்னன் என்ற தீய மற்றும் பயமுறுத்தும் தலைவனைக் காண்கிறோம். அவர் கிழக்கிலிருந்து பயணித்து வந்த ஞானிகள் மூலம் கிறிஸ்து பிறந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். ஞானிகள் இந்த "யூதர்களின் ராஜாவை" வணங்க விரும்பினர், எனவே அவர்கள் ஏரோதை, அவரை எங்கே காணலாம் என்று கேட்டார்கள்.

இந்த அத்தியாயத்தை நீங்கள் படிக்கும்போது, ​​பெத்லகேமில் இயேசுவைக் கண்டுபிடிக்க ஞானிகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு சிறந்த திட்டத்தை நீங்கள் காண்பீர்கள். ஆனால் ஏரோதுவிடம் இந்த இயேசுவை வணங்குவதற்கு அப்படிப்பட்ட திட்டம் எதுவும் இல்லை. மேலும் அவர் ஏமாற்றுபவராக இருந்த அவரின் வேட்டை தொடங்கியது.

“அவர்கள் ராஜாவிடம் உரையாடின பின்பு, புறப்பட்டுப்போனார்கள்; இதோ, அவர்கள் கிழக்கில் கண்ட நட்சத்திரம், சிறு குழந்தை இருந்த இடத்தில் வந்து நிற்கும் வரை, அவர்களுக்கு முன்னே சென்றது. அவர்கள் நட்சத்திரத்தைப் பார்த்ததும், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்கள் வீட்டிற்குள் வந்தபோது, ​​​​குழந்தை தனது தாய் மரியாளுடன் இருப்பதைக் கண்டு, விழுந்து வணங்கினர். அவர்கள் தங்களுடைய பொக்கிஷங்களைத் திறந்து, அவருக்கு கொடுத்த பரிசுகள்: பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம்.”

ஞானிகள் கிறிஸ்துவைச் சந்தித்த பிறகு, ஏரோது மன்னனால் இயேசுவின் இருப்பிடத் தகவலைப் பெற செய்யப்பட்ட வற்புறுத்ததலுக்கு இணங்கியிருக்கலாம். ஆனால் மத்தேயு 2 கூறுகிறது, அவர்கள் "ஏரோதிடத்திற்குத் திரும்ப வேண்டாம் என்று ஒரு கனவில் தேவனால் எச்சரிக்கப் பட்டார்கள்". அதைத்தான் அவர்கள் செய்தார்கள், அவர்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர். இது ஏரோதின் கொலைத் திட்டத்திலிருந்து இயேசுவைப் பாதுகாக்க பெத்லகேமிலிருந்து தப்பிச் செல்லும் யோசேப்பு மற்றும் மரியாளின் பயணத்தைத் தொடங்கியது.

வரலாற்று ரீதியாக, இந்த ஞானிகளைப் பற்றி நமக்குத் தெரியாது. அவர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து நிறைய கோட்பாடுகள் உள்ளன, ஆனால் இந்த உரையைப் படிப்பதன் மூலம் நாம் சேகரிக்கக்கூடியது என்னவென்றால், அவர்கள் ஏரோது என்ற இந்த மனிதனுக்கு பயந்ததை விட "தேவ எச்சரிக்கைக்கு" பயந்தார்கள் என்பது தெளிவாகிறது.

நீங்கள் இதைப் பற்றி சிந்திக்கும்போது, ​​​​நாம் தினசரி எடுக்கும் பல முடிவுகளின் இறுதியில் நாம் கடவுளுக்கு அல்லது மனிதனுக்கு பயப்படுகிறோம். நாம் எப்பொழுதும், யார் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படாமல், கடவுளுக்கு அதிகம் பயப்படுகிறோம் என்று நினைக்க விரும்புகிறோம், ஆனால் அது உண்மையல்ல என்று நமக்குத் தெரியும்; சில நேரங்களில், சமூக அழுத்தங்கள் நம்மை மேற்கொள்ளுகின்றன. மனிதர்களின் விமர்சனம் காயப்படுத்தலாம், மனிதர்களின் கைதட்டல் உற்சாகமளிக்கலாம். நாம் கவனமாக இல்லாவிட்டால், மற்றவர்களின் வார்த்தைகள் மற்றும் உறுதிமொழிகளால் நாம் வாழ்வோம் மற்றும் மடிவோம்.

செயல் படி: உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் அழுத்தங்கள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி சிந்திக்கும்போது, ​​அவை மனிதனிடமிருந்து வந்ததா அல்லது கடவுளிடமிருந்து வந்ததா? நீங்கள் யாரைப் பிரியப்படுத்தவும் மதிக்கவும் வாழ்கிறீர்கள்? நீங்கள் கடவுளை விட மனிதனுக்கு அதிகம் பயப்படுகிறீர்கள் என்று தோன்றினால், இன்றே அதற்காக மனந்திரும்புங்கள். இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில் அவர் உங்கள் வாழ்வின் ஆண்டவராகவும், படைப்பின் மீதும் ஆளுகை செய்பவராகவும் இருக்கிறார் என்பதை உங்களுக்கு நினைவூட்டும்படி கடவுளிடம் கேளுங்கள். இன்று நீங்கள் ஜெபிக்கும்போது, ​​"பூரண அன்பு பயத்தை விரட்டும்" (1 யோவான் 4:18) என்ற வசனத்தை தியானியுங்கள்.

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

Timeless Wonder | a Christmas Reading Plan From New Life Church

இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.

More

இந்தத் திட்டத்த்தை வழங்கிய NewSpring Churchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://newlifechurch.tv க்கு செல்லவும்

சம்பந்தப்பட்ட திட்டங்கள்