காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம் மாதிரி

Timeless Wonder | a Christmas Reading Plan From New Life Church

19 ல் 10 நாள்

நாள் 10

லூக்கா புத்தகத்தில் இயேசுவின் தாயான மரியாளை வியந்து பாராட்டுவதற்கு நிறைய இருக்கிறது. ஒரு கன்னியாக, "உன்னதமானவரின் குமாரனை" கருவுறும் செய்தியை காபிரியேல் தேவதூதன் அவளுக்கு வழங்கியபோது, ​​ஆரம்பத்தில் அவள் பயம் கலந்த அதிர்ச்சியோடுதான் அந்த செய்தியை எதிர் கொண்டாள். ஆனால் இறுதியாக அவள் காபிரியேலுக்கு அளித்த பதிலில், லூக்கா 1:38-ல் இந்த தாழ்மையான வார்த்தைகளைச் சொன்னாள்: "இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உமது வார்த்தை படியே எனக்கு ஆகக்கடவது."

ஆசிரியர் டிம் கெல்லர் தனது “ஹிடன் கிறிஸ்மஸ்” என்ற புத்தகத்தில் அவளது வார்த்தைகளின் முக்கியத்துவத்தை இங்கே விளக்குகிறார்:

“பழைய மொழிபெயர்ப்பில் மரியாள் கூறுகிறார், "உமது வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது" (லூக்கா 1:38, கிங் ஜேம்ஸ் பதிப்பு). அவளுடைய குமாரன் என்றோ ஒரு நாள் சொல்லப் போகும், "நான் விரும்பியபடி அல்ல, உங்கள் விருப்பப்படி (மத்தேயு 26:39) என்ற வார்த்தைகளுக்கு, இவை மிகவும் நெருக்கமானவை. இயேசு தனக்காக என்ன செய்யப் போகிறார் என்பதை அறியும் முன்பே அவள் இந்த சரணடைதலை செய்தாள். மரியாள் அவருக்காக செய்த தியாகத்திற்காக, இயேசு அவளுக்காக எண்ணற்றவைகளை செய்தார் என்று நமக்குத் தெரியும். மரியாள் உலகத்திற்கு தான் வந்ததை ஏற்றுக் கொண்டாள்-பரலோகத்திலிருந்து பூமிக்கு தேவகுமாரன் எவ்வளவாய் இறங்கி வந்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். அந்த கொடூரமான அவமானம் மற்றும் மரியாதை கலாச்சாரத்தில், அவள் தன் உயிரைப் பணயம் வைத்து கடவுளின் சித்தத்தை ஏற்றுக்கொள்கிறாள் என்பதை அவள் அறிந்திருந்தாள். இயேசு தாம் எல்லாவற்றையும் இழக்க வேண்டியதாயிருக்கும் என்று தெரிந்தும் கடவுளின் சித்தத்தை ஏற்றுக்கொண்டார்… ஆனால் ஓ, அவருடைய கீழ்ப்படிதலினால் வந்த முடிவில்லாத மீட்பைப் பாருங்கள்-நித்தியமாய் நமக்கெல்லாம் கிடைத்த மகிமை.”

ஒரு குழந்தையை இழக்கும் கற்பனைக்கு எட்டாத வலியை மரியாள் அனுபவிக்க நேரிடும். அவள் அவருடைய கொடூரமான மரணத்தைப் பார்த்தாள், ஆனால் பின்னர் அவருடைய வெறுமையான கல்லறையைக் கண்டுபிடித்து அவருடைய உயிர்த்த உடலையும் பார்த்தாள்! அவள் வலியையும் இழப்பையும் அறிந்திருந்தாள், ஆனால் அவளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியும் தெரியும். அவளுடைய கதையின் தொடக்கத்திலிருந்தே, அவளுடைய தற்போதைய வலிகள் அல்லது சூழ்நிலைகள் அவள் கீழ்ப்படிவதைத் தடுக்க அவள் அனுமதிக்கவில்லை. இயேசுவைப் போலவே அவளும் தன் விருப்பத்தை பிதாவிடம் சமர்ப்பித்தாள். ஏனெனில், எல்லாவற்றிற்கும் மேலாக, அவள்அவருடையவிருப்பத்தையே நாடினாள், அவளுடைய விருப்பத்தை அல்ல

செயல் படி: கடவுளுக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்கும் சூழ்நிலை உங்கள் வாழ்க்கையில் உள்ளதா? உங்கள் வாழ்க்கைக்கான அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் நடக்கும் போது, ​​"சுயம் சாவதற்கு" கடவுள் உங்களுக்கு உதவ வேண்டும் என்று ஜெபியுங்கள். இன்று உங்கள் வாழ்க்கையில் எந்த கடினமான சூழ்நிலையிலும் இயேசுவின் வார்த்தைகளை, “என் சித்தம் அல்ல, உம்முடைய சித்தப்படி”(மத்தேயு 26:39) என்று ஜெபியுங்கள்.

நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

Timeless Wonder | a Christmas Reading Plan From New Life Church

இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.

More

இந்தத் திட்டத்த்தை வழங்கிய NewSpring Churchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://newlifechurch.tv க்கு செல்லவும்

சம்பந்தப்பட்ட திட்டங்கள்