காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம் மாதிரி

Timeless Wonder | a Christmas Reading Plan From New Life Church

19 ல் 15 நாள்

நாள் 15

கிறிஸ்துமஸ் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஒரு குழந்தையைப் பற்றி சிந்திக்க வைக்கிறது, ஆனால் கிறிஸ்துமஸிற்கான தேவை வெகு முன்பே பிறந்தது. கிறிஸ்துமஸ் உண்மையில் ஒரு தோட்டத்தில் தொடங்கியது, அங்கு ஒரு சர்ப்பம் ஒரு பொய்யைச் சொன்னது, ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஒரு பழத்தை சாப்பிட்டார்கள், கடவுள் ஒரு வாக்குறுதி அளித்தார்.

ஆனால் நாம் ஆழமாக தோண்டினால், இந்த மோதல், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில், பரலோகத்தின் தேவ தூதனான லூசிஃபர், எப்படியாவது கடவுளின் மகிமையில் அபகரித்துவிடலாம் என்று நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டபோது தொடங்கியதை காணலாம்​​. கடவுள் அவன் செய்த குற்றத்திற்காக பரலோகத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற்றினார், ஆனால் இது, அதோடு முடிவடையவில்லை.

ஆதியாகமம் 3 இல், மகிமைக்கான போர் தொடர்ந்தது. கடவுளுடனான தனது சொந்த உறவை முறித்துக் கொண்ட சாத்தான் அதே எண்ணத்தை ஏவாளின் மனதில் விதைத்தான், “நீங்களும் அவரைப் போலவே இருப்பீர்கள்." ஆதியாகமம் 1ல் கடவுள் உருவாக்கிய விசுவாச சூழ்நிலையை ஒரு எளிய கேள்வியினால் சீர்குலைத்தான். கேள்வி: “உண்மையிலேயே நீங்கள் சாவீர்கள் என்று கடவுள் சொன்னாரா?” பிறகு சூழ்ச்சி நிறைந்த பொய் வந்தது: “நீங்கள் நிச்சயமாக சாக மாட்டீர்கள். இந்த மரத்திலிருந்து நீங்கள் சாப்பிட்டால், நீங்கள் கடவுளைப் போல் ஆகிவிடுவீர்கள்." அவன் "உங்களுக்கு கடவுள் தேவையில்லை. நீங்கள் உங்கள் சொந்த கடவுளாக முடியும்” என்று அர்த்தம் பட கூறினான்.

அவர்கள் அந்த பொய்யைச் உட்கொண்டார்கள்.

பாவம் தோட்டத்தில் நுழைந்தது. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு முறிந்தது, கடவுள் சம்பந்தப்பட்ட அனைவரையும் சபித்தார். அவர் முதலில் சாத்தானை சபித்தார், மேலும் ஆதாம் மற்றும் ஏவாளுக்கான தண்டனை அவரது உதடுகளை விட்டு வெளியேறுவதற்கு முன்பே, சர்ப்பத்தின் மீதான வெற்றிக்கான வாக்குறுதி செயலாற்ற தொடங்கியது.

பெண்ணின் சந்ததி பிசாசின் சந்ததியுடன் போரிடும் என்று கடவுள் சொன்னபோது, ​​“அவர் உன் தலையில் அடிப்பார், நீ அவன் குதிங்காலை நசுக்குவாய்” என்று அறிவித்தார். இவை போராட்டத்தின் வார்த்தைகளாக இருந்தன. அது மரணத்தின் வாக்குறுதியாக இருந்தது. குதிகால் நசுக்கப்படுவது ஒரு பெரிய காயம் அல்ல, ஆனால் தலையில் படும் அடி மரணத்துக்கேதுவானது.

அது வன்முறையாக இருந்தாலும், இதுதான் கிறிஸ்துமஸ் வாக்குறுதி. கிறிஸ்து, நம் வெற்றியாளர் வருவார், அவர் எதிரியின் தலையை நசுக்குவார்.

தோட்டத்தில் துண்டிக்கப்பட்ட கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு, ஒரு தொழுவத்தில் விதை வடிவம் பெற்று, கரடுமுரடான சிலுவையில் மண்ணை உடைத்து, காலியான கல்லறையில் துடிப்புடன் பூக்கும்.

கிறிஸ்துமஸ் நம்முடைய சொந்த உடைந்த மற்றும் கடினமான பூமிக்குரிய உறவுகளை நினைவுபடுத்தும் நேரமாக இருந்தாலும், நம்மோடான உறவை சரிசெய்ய கடவுள் எவ்வளவு தூரம் சென்றார் என்பதை நினைவில் கொள்வதற்கு அட்வெந்து காலம் சரியான நேரம். கடவுளின் வாக்குறுதியை நிறைவேற்றவும், சாத்தான் களவாடியதை மீட்கவும் இயேசு பூமிக்கு வந்தார்.

செயல் படி: இந்த கிறிஸ்துமஸில் நமது கடவுளின் இரக்க குணத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் அதே நேரத்தில், ​​உங்கள் வாழ்க்கையில் நல்லிணக்கமும் மன்னிப்பும் தேவைப்படும் உறவு இருக்கிறதா?

நாள் 14நாள் 16

இந்த திட்டத்தைப் பற்றி

Timeless Wonder | a Christmas Reading Plan From New Life Church

இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.

More

இந்தத் திட்டத்த்தை வழங்கிய NewSpring Churchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://newlifechurch.tv க்கு செல்லவும்

சம்பந்தப்பட்ட திட்டங்கள்