காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம் மாதிரி
நாள் 17
நீங்கள் எப்போதாவது தவறு செய்து, அதுதான் உங்களின் முடிவு என்று நினைத்திருக்கிறீர்களா? அதை ஈடு செய்ய நீங்கள் என்ன செய்தாலும், அதை மீட்டெடுக்க முடியவில்லையா? இன்று, நாம் தாவீதின் வாழ்க்கையை ஆழமாக சிந்திக்கப் போகிறோம். விசுவாசத்தால், இஸ்ரவேலின் பெரிய ராஜாவாகி, தலைமுறைகள் பின்பற்றக் கூடிய தரத்தை அமைத்தவர். கடவுளின் இதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதன் என்று பொதுவாக அறியப்பட்டாலும், அவர் தனது வாழ்க்கையில் ஒரு கலங்கின பருவத்தைக் கொண்டிருந்தார், அது அவரது விதியை மாற்றி, ராஜாவாக ஆட்சி செய்யாமல் அவரை அழித்து இருக்க முடியும்.
2 சாமுவேல் 11 இல், தாவீது திருமணமான பெண் பத்சேபாள் மீது ஆசைப்பட்டார். அவள் அவனால் கர்ப்பமானபோது, தன் அதிகாரப் பதவியைப் பயன்படுத்தி அவளுடைய கணவன் உரியாவைக் கொலை செய்தார். இது நிச்சயமாக ஒரு ராஜாவுக்கு ஏற்ற நடத்தை அல்ல! யதார்த்தம் மற்றும் நீதி பற்றிய நமது வரையறுக்கப்பட்ட பார்வையில், தாவீது தனது எதிர்காலத்தையும் நற்பெயரையும் அநேகமாக அழித்திருக்கலாம் என்று நாம் எளிதாக நினைக்கலாம். கடவுள் இனி அவரைப் பயன்படுத்துவதற்கு எந்த வழியும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இதுபோன்ற கொடூரமான செயல்களில் இருந்து அவர் எப்படி தப்பித்திருக்க முடியும்? ஒரு சட்டத்தை மட்டுமல்ல, பல சட்டங்களை மீறிய பிறகு அவர் எப்படி மன்னிக்கப்பட்டிருப்பார்? தான் சட்டத்திற்கு மேலானவன் என்று நினைக்கும் அளவிற்கு, எவ்வளவு அகம்பாவமாய் இருந்திருக்க வேண்டும்?
இருப்பினும், கடவுள் தனது பரந்த நோக்கின் மூலம், என்ன நடக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக அறிந்திருந்தார்.
கடவுள் தாவீதின் ஆற்றலைக் கண்டார் மற்றும் அவரின் தவறுகள் அவருடைய எதிர்காலத்தை நிர்ணியிப்பதில்லை என்பதை அறிந்திருந்தார். கிரியைகள் சார்ந்த விசுவாசம் தாவீதை மீட்பதாக இருக்க முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். இங்கே தாவீதின் செயல்கள் அதைப் பிரதிபலிக்கவில்லை என்றாலும், அவர் மனத்தாழ்மையுடன் தம்முடைய மக்களைக் கவனித்து, கடவுளுடைய ராஜ்யத்தைப் பெருக்குவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார் என்பதை அவர் அறிந்திருந்தார். மிக முக்கியமாக, 28 தலைமுறைகளுக்குப் பிறகு உலகத்தின் ஒவ்வொரு மீறுதலையும் மீட்பதற்காக இரட்சகருக்கு இருந்த ஒரு பெரிய திட்டத்தை கடவுள் அறிந்திருந்தார்.
தாவீதின் கடந்தகாலம் அவனது வாழ்க்கையையும் அதன் பின் வரும் தலைமுறைகளையும் குறிக்கப் போவதில்லை என்று கடவுள் அறிந்திருந்தார். தாவீது தனது செயல்களினால் வெட்கத்துடனும் தோல்வியுடனும் நடந்திருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக அவர் பிதாவிடம் ஓடி, தனது முரட்டாட்டமான ஆவியை ஒப்புக்கொண்டார், மேலும் அவரது பாவங்களும் அவமானமும் கழுவப்பட வேண்டும் என்று கெஞ்சினார். தாவீதின் பணிவான மனமும் முழுமையான சரணடைதலும், பிதாவை, தாவீது நினைக்காத அளவிற்கு அவரின் சீர்குலைந்த சூழ்நிலையை மேன்மையானதாக மாற்றியது. தான் மன்னிக்கப்பட்டதை தாவீது அறிந்திருந்தும், கடவுள் அதை மேலும் எடுத்துச் சென்று, தாவீதின் சந்ததியில் நம் இரட்சகர் பிறக்க அனுமதித்தார். நாம் கடவுளிடம் திரும்பும்போது நம்மை மன்னித்து மீட்பதற்குக் அவர் கிருபை நிறைந்தவராயிருக்கிறார்!
செயல் படி: தாவீது தன் அவமானத்தை தன் பிதாவின் பாதத்தில் கொண்டு வந்தது போல், நாமும் செய்யலாம். என்ன கடந்தகால பாவங்கள் அல்லது போராட்டங்களுக்காக நீங்கள் இன்னும் வெட்கப்படுகிறீர்கள்? உங்கள் சூழ்நிலையில் சங்கீதம் 51 ஜெபியுங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பாவங்கள் மற்றும் கோட்டைகளின் மீது கிறிஸ்துவின் வெற்றியைப் பெறுங்கள்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.
More