காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம் மாதிரி
நாள் 16
1 இராஜாக்கள் அத்தியாயங்கள் 17-19, கடவுள் எலியாவைப் பயன்படுத்தி அவருக்கும் மற்றவர்களுக்கும் உணவு, குணம் மற்றும் வெற்றியைக் அற்புதமாக கொண்டு வந்த பல தருணங்களை விவரிக்கிறது. இந்த அற்புதங்களை அனுபவித்த பிறகு எலியாவுக்கு கொஞ்சம் நம்பிக்கை இருந்திருக்க வேண்டும், ஆனால் பொல்லாத ராணி யேசபேலிடமிருந்து வந்த ஒரு செய்தி, "அவருடைய தலையை எடுத்து விடுங்கள்!", அவரை உயிருக்காக ஓட வைத்தது.
கடவுளுக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்ததற்காக இந்த ஜீவனுக்கான அச்சுறுத்தல் எப்படி அவருடைய வெகுமதியாக இருக்க முடியும்? வெற்றியில் நடப்பதற்குப் பதிலாக, அவர் சோர்வாகவும் பயமாகவும் உணர்ந்தார்.
விடுமுறை நாட்களை நெருங்கும்போது, சங்கடமான சமூகச் சூழல்கள் அல்லது பதட்டமான குடும்பக் கூட்டங்களை எதிர்நோக்குவதைக் குறித்து நாம் கவலையாக உணரலாம். உங்களுக்குத் தெரிந்த ஒருவர் அடிக்கடி உங்களைக் குற்றம் சாட்டவோ, தூண்டிவிடவோ அல்லது உங்களை அச்சுறுத்தவோ முயற்சிக்கலாம். அவர்கள் எப்போதும் அதைச் செய்திருப்பதால், உங்கள் குடும்பத்தின் மற்றவர்களைப் புண்படுத்தாமல் எப்படி அவர்களை முழுவதுமாகத் தவிர்ப்பது அல்லது குறைந்தபட்சம் அவர்களுடன் உங்கள் நேரத்தைக் குறைப்பது எப்படி என்று நீங்கள் சிந்திக்கிறீர்கள்.
அதற்கு நாம் எவ்வாறு தயாராகலாம்?
ஓரேப் மலையை அடையும் வரை 40 நாட்கள் ஓடிய எலியா, தீவிரமாக ஜெபித்து, கடவுளின் சத்தத்திற்கு காத்திருந்தார். நிலநடுக்கத்திலோ, காற்றிலோ, நெருப்பிலோ கடவுளின் சத்தம் கேட்கவில்லை. மென்மையான குரலில் கடவுள் பேசினார்.
கடவுள் நம் கவனத்தை ஈர்ப்பதற்காக உடல்ரீதியாக நம்மை அசைப்பதில்லை, அவருடைய சக்தியால் நம்மை ஊதிவிடுவதில்லை, அல்லது கணத்தின் வெப்பத்தில் நம்மை எரித்துவிடுவதில்லை. இல்லை, நாம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவருக்கு முன்பாக நம் இதயங்களை அமைதிப்படுத்தும் வரை அவர் காத்திருக்கிறார்.
எலியா எதிர்கொண்டதைப் போலவே, நாம் எதிர்கொள்வது உணர்ச்சி ரீதியாக சோர்வாகவும், பதட்டமாயும், கவலையையாயும் இருக்கலாம். ஆனால் எலியா எதை எதிர்க்கிறார் என்பதை கடவுள் அறிந்திருந்தார், மேலும் நீங்கள் என்ன எதிர்கொள்கிறீர்கள் என்பதையும் அவர் அறிவார்.
அவரால் வழிநடத்துதலையும் செயல்திட்டத்தையும் கொடுக்க முடியும், ஆனால் அவரது சத்தம் ஒரு மென்மையான குரலாய் வருகிறது, எனவே அதைக் கேட்கும் அளவுக்கு அமைதியாக இருப்பது நமக்குப் பயனளிக்கிறது.
செயல் படி: எலியாவைப் போல, பதட்டம், அச்சுறுத்தல்கள் அல்லது குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும், உங்கள் தலைக்குள் இருக்கும் குரல்களை நீங்கள் ஒதுக்க முடியுமா? ஒரு கணம் சுவாசித்து இறைவனை உங்கள் சூழ்நிலைக்குள் அழைக்க முடியுமா? நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பிறப்பைக் கொண்டாட நாம் தயாராகும்போது, உங்கள் சமூதாயத்திற்கு வாழ்வு, அன்பு மற்றும் நம்பிக்கையைக் கொண்டுவருவதற்கான வழியைக் காண்பிக்கும்படி அவரிடம் கேளுங்கள்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.
More