காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம் மாதிரி
அறிமுகம்
இயேசு பூமிக்கு மனிதகுலத்தை அவர்களின் பாவங்களிலிருந்து காப்பாற்றுவதற்காக வந்தார். அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் கிருபையின் மேல் கிருபை அருளினார், மேலும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் காலத்திலும் அவர் நம்மை நெருங்கி வருவதற்கு எவ்வாறு தன்னைத் தாழ்த்தினார் என்பதை நாம் ஆச்சரியத்துடனும் பிரமிப்புடனும் சிந்திக்கிறோம். உங்கள் எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்தின் மீது இயேசுவின் பிறப்பினால் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொள்ளும்படி இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத அதிசயமான அவர், சந்தித்து, சரி செய்ய முடியாத எந்த அம்சமும் உங்கள் வாழ்வில் இல்லை!
நாள் 1
ஏன் இயேசு நம்முடன் இருப்பதை விட ஆவியானவர் வருவது நல்லது என்று அவர் சொன்னார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? கிறிஸ்மஸ் என்பது தேவனுடைய குமாரன் மாம்சமாகி, நம்முடன் வசிப்பதின் கதை. இம்மானுவேல். அவருடைய பரிசுத்த ஆவியானவரின் வாசஸ்தலத்தில் அவர்நம்மி்ல் வசிப்பதற்காக வருகிறார். பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் சொந்த ஆவி, அற்புதமான ஆலோசகர், நமக்குள் வாழ்ந்து, இயேசுவைப் போல வாழ நமக்கு அதிகாரம் அளிக்கிறார்.
வில்லியம் டெம்பிள் இதை இவ்வாறு விளக்கினார்: “ஹேம்லெட் அல்லது கிங் லியர் போன்ற ஒரு நாடகத்தை எனக்குக் கொடுத்து, அப்படி ஒரு நாடகத்தை எழுதச் சொல்வது நல்லதல்ல. ஷேக்ஸ்பியர் அதை செய்ய முடியும்; என்னால் முடியாது. இயேசுவின் வாழ்க்கையைப் போன்ற ஒரு வாழ்க்கையை எனக்குக் காட்டுவதும், அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழச் சொல்வதும் நல்லதல்ல. இயேசு அதை செய்ய முடியும்; என்னால் முடியாது. ஆனால், ஷேக்ஸ்பியரின் அறிவாழம் என்னுள் வந்து வாழ முடிந்தால், அது போன்ற நாடகங்களை என்னால் எழுத முடியும். இயேசுவின் ஆவி என்னுள் வந்து வாழ முடிந்தால், நான் அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியும். கிறிஸ்துவைப் போல வாழ உள்ளிருந்து நம்மை வழிநடத்தும் பரிசுத்த ஆவியின் வரம் நம்மிடம் உள்ளது.
இந்த உண்மை இருந்தபோதிலும், குறிப்பாக கிறிஸ்துமஸ் சமயத்தில் நம்மில் பலர் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறோம். நமது கேள்விகள் நம்மை ஆட்கொள்ள ஆரம்பிக்கலாம். நான் யாராக மாறுவேன்? நான் என்ன சாதிப்பேன்? எனது பரம்பரை என்னவாக இருக்கும்? வேதம்கடவுளின் ஆவியானவரை வாக்குத்தத்தத்தின் முத்திரை என்று அழைப்பதை நாம் மறந்துவிட்டோம். இந்த முத்திரை உரிமையின் சட்ட சின்னமாகும். அவருடைய ஆவியால், நாம் வேலியடைக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மற்றும் தேவைகள் சந்திக்கப்பட்டுள்ள மகன்கள் மற்றும் மகள்களாகக் குறிக்கப்படுகிறோம். அவர் நமக்கு "புத்திர சுவீகாரத்தின் ஆவி" கொடுத்துள்ளார். அவரிடம் உள்ள அனைத்தும் நம்முடையது. இது நமது கிருபையின் சுதந்திரம், அதை நாம் போக்கடித்து விட முடியாது. அவர் ஒவ்வொரு நொடியும் நம்முடன் இருக்கிறார் என்பதே தற்போதைக்கு நமது வாக்குறுதி. நமக்குள் நற்கிரியையை ஆரம்பித்தவர் அதை செய்து முடிப்பதற்கு உண்மையுள்ளவராக இருப்பார் என்பதே எதிர்காலத்திற்கான நமது வாக்குறுதி. அவர் இதுவரை தோல்வியடைந்ததில்லை, இப்போதும் தோல்வியடைய மாட்டார்.
எனவே, எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் பரவுவதை நாம் கவனிக்கத் தொடங்கும் எந்த நேரத்திலும், நிதானித்து, அந்த உணர்வு எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிய உதவுமாறு பரிசுத்த ஆவியானவரிடம் கேட்கலாம். பயமும், சந்தேகமும் தோட்டத்தில் எங்கிருந்து வந்ததோ, அதே இடத்தில் இருந்துதான் வருகிறது. “எனது நிம்மதியை இழக்கச் செய்யும் எந்த பொய்யை நான் நம்புகிறேன்?” என்று நாம் கேட்க வேண்டும். அற்புதமான ஆலோசகரும் சமாதான பிரபுவான அவரே நம்மைத் தம்மிடம் அழைத்துச் செல்கிறார். அவர் இம்மானுவேல், கடவுள் நமக்குள்ளே இருக்கிறார்.
நடவடிக்கை படி: எதிர்காலத்தைப் பற்றிய பதட்டத்தை உண்டாக்கும் எந்த பயத்தின் உணர்வோடு நீங்கள் கூட்டு சேர்ந்திருக்கிறீர்கள் என்று உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா? உங்களுக்கு ஆலோசனை வழங்கவும், உண்மை என்ன என்பதை நினைவூட்டவும் பரிசுத்த ஆவியானவரை அழைக்கவும்.
*ஒரு நாள் பக்தி உள்ளடக்கத்திற்கான மேற்கோள் ஜான் ஆர். டபிள்யூ. ஸ்டாடின் அடிப்படை கிறிஸ்தவத்தவம் என்ற உரையிலிருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.
More