காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம் மாதிரி
![Timeless Wonder | a Christmas Reading Plan From New Life Church](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F34536%2F1280x720.jpg&w=3840&q=75)
நாள் 2
கிறிஸ்மஸ் சமயத்தில் பெரும்பாலும் சலசலப்பும், சந்தடியும் இருக்கும், நாம் கவனமாக இல்லாவிட்டால், இறைவனின் குரலை நாம் தவறவிடலாம். நமது திட்டங்கள் மற்றும் செய்ய வேண்டிய பட்டியல்களில் நாம் மிகவும் மும்முரமாகிவிட்டால் நாம் தருணங்களை இழக்க நேரிடும். குறுக்கிடுவதை நாம் விரும்பவில்லை! நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளன! ஆனால் பெரும்பாலும், கடவுள் குறுக்கீடுவதின் மூலம் சிறப்பாக செயல்படுகிறார்.
இன்றைய வாசிப்பில், அனனியா கடவுளால் குறுக்கிடப்பட்டதைக் காண்கிறோம். ஒரு கொலைகாரனுக்கு ஊழியம் செய்வது, அவரின் அந்த நாள் திட்டத்தில் இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், கிறிஸ்தவர்களை கொலை செய்த சவுலைக் கண்டுபிடித்து, பார்வையை மீட்டெடுக்க உதவுமாறு கடவுளால் அவர் கேட்கப்பட்டார். அனனியா உத்தரவுகளை முதலில் பெற்றபோது, "நிச்சயமாகவா கடவுளே?" சவுல் இயேசுவின் சீஷர்களைக் கொன்று கொண்டிருந்தார் என்பது கடவுளுக்குத் தெரியாதா? என்று கேட்டார். ஆனால் இறைவனின் பதில், “எப்படியும் போ” என்பதுதான்.
இந்த கிறிஸ்மஸ் காலத்தில் நீங்கள் அந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டும் தருணங்களைக் கொண்டிருக்கலாம். "கடவுளே, நிச்சயமாகவா?" உங்கள் மனைவி குற்றம் செய்தவராக இருப்பினும் அவரிடம் உங்களை மன்னிப்பு கேட்கும்படி அவர் கேட்கலாம். சங்கடமாக இருந்தாலும் கூட பிரிந்த குடும்ப உறுப்பினரை இரவு உணவிற்கு அழைக்கும்படி கூறலாம். உங்கள் பெற்றோர்கள் தகுதியற்றவர்களாக இருந்தாலும் அவர்களை மன்னிக்க அழைக்கலாம்.
இயேசுவை நீண்ட காலமாக பின்தொடர்ந்து செல்லும் போது, நம் சொந்த விருப்பத்திற்கு எதிராக ஏதாவது செய்யும்படி கடவுள் நம்மைக் கேட்பது பொதுவானது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். பொதுவாக, இது சிரமமான, சங்கடமான அல்லது ஆபத்தானது. கீழ்ப்படிதலும் செளகரியமும் எப்பொழுதுமே ஒன்றுக்கொன்று ஒத்து போவது இல்லை. கீழ்ப்படிதல் என்றால் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பது. ஆரம்பம் நமது யோசனையாக இருந்தால் அது உண்மையில் கீழ்ப்படிதல் அல்ல. கீழ்ப்படிதல் என்பது விருப்பங்களின் மோதலை உள்ளடக்கியது. கடவுளுக்கு ஒரு சிறந்த வழி இருப்பதாக நாம் நம்புவதால், நம் விருப்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, கடவுளுடைய விருப்பத்துடன் நம் விருப்பத்தை இணைத்துக் கொள்ள வேண்டும்.
அனனியா கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, தன் உயிரைப் பொருட்படுத்தாமல், சவுலைக் கண்டுபிடித்து, சவுல் பரிசுத்த ஆவியைப் பெற்று, சவுலின் கண்களில் இருந்து செதில்கள் விழுந்து, சவுல் பவுலாக மாறினதை அவன் கண்டான். பிறகு, அனனியா அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்! வரலாற்றில் மிகவும் விசுவாசத்தை வரையறுக்கும் மனமாற்ற அற்புதங்கள் மற்றும் மாற்றங்களில் ஒன்றிற்கு அனனியா கருவியாக இருந்தார். புதிய ஏற்பாட்டில் உள்ள 27 புத்தகங்களில் 13 புத்தகங்களை எழுதிய பவுல் எல்லா காலத்திலும் சிறந்த கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் இறையியலாளர்களில் ஒருவராக மாறுவார். இருப்பினும், அனனியாவின் கீழ்ப்படிதல், பவுலின் அற்புத ஊழியத்திற்கு முந்தியது. உண்மையுள்ள கீழ்ப்படிதலின் ஒரு செயலால் கடவுள் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியாது.
செயல் படி: கர்த்தர் உங்களிடம் கேட்கும் ஏதாவது ஒன்றில் நீங்கள் இன்னும் அவருக்குக் கீழ்ப்படியவில்லையா? கீழ்ப்படிதலுக்கு நீங்கள் இன்று என்ன முயற்சி எடுக்கலாம்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Timeless Wonder | a Christmas Reading Plan From New Life Church](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F34536%2F1280x720.jpg&w=3840&q=75)
இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)
வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)
தேவனோடு நெருங்கி வளர்தல்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52714%2F320x180.jpg&w=640&q=75)