காலத்தால் அழியாத அதிசயம் | நியூ லைஃப் ஆலயத்திலிருந்து ஒரு கிறிஸ்துமஸ் வாசிப்பு திட்டம் மாதிரி

Timeless Wonder | a Christmas Reading Plan From New Life Church

19 ல் 4 நாள்

நாள் 4

பேதுரு என்பது வேதாகமத்தில் உள்ள ஒரு பாத்திரம், சில சமயங்களில் மோசமாய் புரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம். இயேசு சிலுவையை சுமந்து சென்றபோது அவரைத் தெரியாது அல்லது அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தலித்தார். அந்த உரையாடல்கள் பிற்காலத்தில் பேதுருவை எவ்வளவாய் சங்கடபடுத்தின என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியும். ஆனால் பேதுரு இயேசுவை மறுப்பதற்கு முன்பு, அவருக்கும் இயேசுவுக்கும் ஒரு சிறப்பான உறவு இருந்தது.

பேதுரு பன்னிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராக இருந்தார், அவர் இயேசுவின் பக்தியுள்ள சீஷர். மேலும் அவர் பல அற்புதங்களைச் செய்ததைக் கண்டார், அவருடைய ஊழிய காலம் முழுவதும் அவருடன் இருந்தார். மத்தேயு 16 இல், மக்கள் அவரைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று இயேசு தம் சீஷர்களிடம் கேட்டார், ஏனெனில் மக்கள் அவரை யார் என்று நம்புகிறார்கள் என்பதை அறிய விரும்பினார். எனவே அவர்கள் அவரிடம், “…சிலர் யோவான் ஸ்நானகன், எலியா, எரேமியா அல்லது மற்ற தீர்க்கதரிசிகளில் ஒருவரென்று சொல்கிறார்கள் என்றார்கள்.” ஆனால் இயேசு தம்மை யார் என்று சீஷர்கள் நினைக்கிறார்கள் என்று அறிய விரும்பினார். பேதுருவின் விசுவாசம் உண்மையில் இந்த நேரத்தில் பிரகாசித்தது. “சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.”

“இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.”

மத்தேயு 16: 17 -19 NIV

இந்த பகுதியில் இயேசு தாம் சொன்னதின் படியே செய்தார். பேதுரு சபையைக் கட்டினார். அவர் அற்புதங்களைச் செய்தார், அவர் பெந்தெகொஸ்தே நாளில் கருவியாக இருந்தார், இன்று நாம் அறிந்தபடி பேதுருவின் வாழ்க்கை கிறிஸ்தவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இயேசு பரலோகத்திற்கு ஏறிய பிறகு பேதுருவின் வாழ்க்கை எளிதானது என்று அர்த்தப்படுத்தவில்லை. பேதுரு பின்னர் நீரோவின் கைகளில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டார், ஏனென்றால் கிறிஸ்துவைப் போலவே இறக்க அவர் தன்னை தகுதியுள்ளவராக உணரவில்லை. அவர் கிறிஸ்துவுக்காக உண்மையாக வாழ்ந்து பின்னர் மரித்தார்.

பேதுருவின் குணாதிசயங்களில் குறைபாடுடைய நேரங்கள் இருந்தபோதிலும், அவரது விசுவாசம் தைரியமாகவும் காலப்போக்கில் பலப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. கடந்த கால தோல்விகள் அவரது எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்த அவர் அனுமதிக்கவில்லை. தன் பாதுகாப்பின்மைகள், பலவீனங்கள் மற்றும் மனிதனைப் பற்றிய எந்தப் பயத்தையும் விட இயேசு தன்னை அழைத்தது மிகப் பெரியது என்பதை அறிந்த வைராக்கியத்துடன் எதிர்நோக்கினார். அவருடைய விசுவாசம் மரணம் வரை நிலைத்திருந்தது - மேலும் அவர் ராஜ்யத்திற்கு என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்!

செயல் படி: கடந்த கால தோல்விகள் உங்கள் எதிர்காலத்தில் தோல்வி உணர்வை ஏற்படுத்த அனுமதித்திருக்கிறீர்களா? நாளை என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது, ஆனால் இந்த வாழ்க்கையில் நாம் தனியாக நடக்க மாட்டோம் என்று இயேசு சொன்னார் என்பது நமக்கு தெரியும். இன்றே உங்கள் எதிர்காலத்திற்காக ஜெபியுங்கள், கிறிஸ்துவின் அன்பிலிருந்து எதுவும் நம்மை பிரிக்காது என்ற உண்மையை நம்புங்கள்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Timeless Wonder | a Christmas Reading Plan From New Life Church

இந்த மூன்று வாரத் திட்டம், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நமக்காக எப்படி வந்தார் என்ற காலவரம்பற்ற அதிசயத்தின் மூலம் நம்மை அழைத்துச் செல்கிறது. இந்தத் திட்டம் திங்கட்கிழமை தொடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் ஒவ்வொரு வார இறுதியில் விடுமுறைக் காலத்தில் ஓய்வு மற்றும் பிரதிபலிப்புக்கான குறுகிய உள்ளடக்கம் இருக்கும். கிறிஸ்துவின் பிறப்பு நமது எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்திற்கான அர்த்தம் என்ன என்பதைப் படிக்கும்படி எங்களுடன் சேருங்கள்.

More

இந்தத் திட்டத்த்தை வழங்கிய NewSpring Churchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://newlifechurch.tv க்கு செல்லவும்

சம்பந்தப்பட்ட திட்டங்கள்