மகிமையை மீண்டும் அடைதல்மாதிரி
இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிமை
இயேசுவின் பிறப்பைப் பற்றி மரியாளுக்கு தேவதூதன் அறிவித்ததில் துவங்கி,கிழக்கில் இருந்து வந்து இயேசுவை தரிசித்த மூன்று ஞானிகள் வரை கிறிஸ்மஸ் வரலாறானது இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளால் நிறைந்திருக்கிறது. தேவதூதர்கள் கனவில் தோன்றி வரவிருக்கும் பெரும் அபாயத்தைப் பற்றி புதிய தகப்பன் ஒருவனிடம் சொல்வதைப் பற்றி நினைத்துப் பாருங்கள். வானவியல் அறிஞர்கள் அடையாளம் கண்டு பின்பற்றி வந்த வானத்தின் அடையாளத்தைப் பற்றி சிந்தியுங்கள். மலை அருகே மேய்ப்பர்களுக்கு தேவதூதர்கள் காட்சியளித்துப் பாடி,அவர்களை எல்லாம் மீட்கப் போகும் ஒரு குழந்தையின் பிறப்பைப் பற்றி அறிவித்ததைப் பற்றி யோசியுங்கள். இவை அனைத்துமே இந்த உலகத்துக்கு உரியவைகள் அல்ல. அவை அசாதாரணமானவைகள். இவர்கள் சாதாரண மக்கள் தான் ஆனால் அவர்களது தினசரி நடவடிக்கைகளையும் தாண்டிய ஒன்றைப் பற்றி அவர்கள் அறிந்து கொண்டார்கள். இந்த அறிவானது அவர்களை என்றென்றைக்குமாக மாற்றிவிட்டது. ஏனென்றால் அவர்கள் அதற்குக் கீழ்ப்படிய ஆயத்தமாக இருந்தார்கள். யோசேப்பு தேவதூதனுக்குக் கீழ்ப்படிந்து மரியாளைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டார். மேய்ப்பர்களும் தேவதூதர்களுக்குக் கீழ்ப்படிந்து புதிதாகப் பிறந்திருந்த மீட்பரை வணங்கினார்கள். மன்னாதி மன்னனை வணங்குவதற்காக மூன்று அறிஞர்கள் உலகத்தில் பாதி தூரத்தைக் கடந்து பயணப்பட்டு வந்தார்கள்.
நாம் வாழ்கின்ற இந்தக் காலத்திலும் கூட,நாம் இயற்கையானவைகளுக்குள்ளேயே அகப்படுக்கிடக்கிறோம். இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்வை வாழ மறந்து போகிறோம். இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்வை வாழ்கிறவர்களும் கூட இந்த உலகத்தையும் அதன் தேவைகளையும் அறியாமல் இல்லை. ஆனால் பரலோகத்தின் சிறு ஒளிக்கதிர்கள் உலகத்தைத் தொடும் அந்த காட்சிகளைக் காண எப்போதுமே ஆயத்தமாக இருக்கிறார்கள். கடவுள் கண்ணுக்குத் தெரியாத உலகத்தில் செயலாற்றுகிறார் என்றும்,சரியான காலத்தில் தன்னை வெளிப்படுத்துவார் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இப்போது அவர்கள் எந்த சந்தேகமும் இன்றி அவர்களது நம்பிக்கை அவர்களை ஏமாற்றமடையச் செய்யாது என்று உறுதியாக நம்புகிறார்கள். பரலோகத்தில் இருப்பது போல உலகத்திலும் அவரது விருப்பம் நிறைவேற வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவிப்பதற்காக நாம் இயற்கையில் கடவுளுக்குக் கீழ்ப்படிவதில் ஒழுங்கு உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவரது வார்த்தையாகிய வேதாகமத்தை வாசிப்பதும்,அவரது குரலைக் கேட்பதும் அவருடனான உறவில் நாம் வளர்ச்சியடைய உதவுகின்றன. அவருக்குக் கீழ்ப்படிவதைத் தொடர்வதன் மூலம் அவரது இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிமையைக் காணும் பாக்கியவான்களாக நாம் இருப்போம்.
அறிக்கை: ஆண்டவரே நீர் நித்தியமானவர்,அழிவில்லாதவர்,தோல்வியே இல்லாதவர். என் வாழ்க்கைக்கான உமது விருப்பமானது மோட்சத்தில் இருப்பது போலவே இங்கேயும் செய்யப்படும் என்பது எனக்குத் தெரியும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கடவுளின் மகிமையைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது அதிகப் பழக்கமான ஒன்று ஆகையால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த கிறிஸ்மஸ் காலத்தில் அதிகம் பழகிப்போன, ஆனால் மிகவும் முக்கியமான இந்த உண்மையை நீங்கள் மறுபடியும் கவனித்து அது உங்களது கண்ணோட்டங்களை மாற்றும் என்று நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://instagram.com/wearezion.in/