மகிமையை மீண்டும் அடைதல்மாதிரி

மகிமையை மீண்டும் அடைதல்

5 ல் 5 நாள்

மகிமையில் இருந்து மகிமைக்கு

கடவுளின் பிரசன்னத்தில் தான் நீங்கள் கடவுளின் மகிமையைக் காண்பீர்கள். இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக,நாம் தினமும் அவரது பிரசன்னத்துக்குள் அர்ப்பணிப்புடனும் நோக்கத்துடனும் பிரவேசிக்க வேண்டும். இது நமது தினசரி கடமைகளான விழித்தல்,பல் துலக்குதல் போன்று முக்கியமானதாகும். வேதாகமம் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு அமைதி வேளை முக்கியத் தேவையானது என்று நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும்,இயேசு பல நேரங்களில் தனியாக எல்லாவற்றிலும் இருந்து விலகி, தனது பிதாவுடன் நேரம் செலவிடச் சென்றார் என்று வேதாகமம் சொல்கிறது.கடவுளின் மகனாக மனித உடலில் வந்த கடவுளாகிய,உலகங்களை உருவாக்கிய அவருக்கே இதைச் செய்ய வேண்டிய தேவை இருந்தது என்றால்,நாம் அதைச் செய்ய வேண்டும் என்பது தேவையானது என்று புரிகிறது. அவரது பிரசன்னத்தில் நாம் செலவிடும் நேரமானது நாம் அவரது மகிமையைக் கண்டு அவரது மகிமையால் நாம் மறுரூபமாகும் தருணமாகும். நம் மீட்பின் நாள் வரை நமது இதயத்தையும் மனதையும் மூடியிருந்த திரை ஒன்று இருந்தது. இயேசுவிடம் திரும்பி அவருக்கு நம் வாழ்வின் மேன்மையான இடத்தைக் கொடுத்ததின் மூலம் அந்த திரையானது ஒரேயடியாக எடுக்கப்பட்டது என்று காண்கிறோம். அந்த திரை விலகியதால் நாம் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கும் விடுதலையை அனுபவிக்கலாம். அத்துடன் கடவுளின் மகிமையைப் பிரதிபலிக்கலாம்.

நீங்கள் சாலை விளக்குகள் இல்லாத எதிரொளிப்பான்கள் மட்டுமே இருக்கும் பெரும் சாலையில் அல்லது மலைப்பகுதியில் வாகனம் ஓட்டியிருப்பீர்கள் என்றால் சாலையில் அல்லது வளைவுகளில் எதிரொளிப்பான்கள் ஒளிர்வதைப் பார்த்திருப்பீர்கள். இந்த எதிரொளிப்பான் மீது வெளிச்சம் படவில்லை என்றால் அவை எதிரொளிக்காது. அது வெளிச்சத்தைப் பெறும்போது தான் அது எதிரொளிக்கிறது. நம் வாகனத்தின் விளக்கை ஒளிரவிட்டுச் செல்லும்போது இதைக் காண்கிறோம். நாம் கடவுளின் மகிமையைப் பிரதிபலிக்கவே படைக்கப்பட்டு,மீட்கப்பட்டு இருக்கிறோம். இதற்குப் பொருள் என்னவென்றால்,நாம் அவரது பிரசன்னத்தில் இருக்கும்போது அவரது மகிமை நம்மில் பிரகாசிக்கிறது. நம்மை சிறிது சிறிதாக அவருடைய சாயலுக்கு ஏற்ப மறுரூபமாக்குகிறது. அத்துடன் அது நிற்பதில்லை. இந்த மறுரூபமானது நமது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் இடங்களுக்குள், நம் வேலையிடங்களில்,பள்ளிகளில்,கல்லூரிகளில் நாம் நுழையும்போது, நம்முடன் கடவுளின் மகிமையை எடுத்துச் செல்கிறோம். நாம் அவரது வெளிச்சத்தை நமது உலகத்தின் இருளான பகுதிகளில் பரவச் செய்கிறோம். இதன் மூலம் இயேசுவை ஒவ்வொரு மூலை முடிக்கிலும் எடுத்துச் செல்கிறோம்.

மகிமையில் இருந்து மகிமைக்கு மாற நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா?

அறிக்கை: நாம் கடவுளின் மகிமையை எதிரொளிக்கிறேன். அவரது மகிமையை நான் என்னில் எடுத்துச் செல்கிறேன். அதை உலகத்துக்குள் பிரகாசிக்கச் செய்கிறேன்.

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

மகிமையை மீண்டும் அடைதல்

கடவுளின் மகிமையைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது அதிகப் பழக்கமான ஒன்று ஆகையால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த கிறிஸ்மஸ் காலத்தில் அதிகம் பழகிப்போன, ஆனால் மிகவும் முக்கியமான இந்த உண்மையை நீங்கள் மறுபடியும் கவனித்து அது உங்களது கண்ணோட்டங்களை மாற்றும் என்று நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://instagram.com/wearezion.in/