மகிமையை மீண்டும் அடைதல்மாதிரி
மண்ணில் மகிமை
இன்றைய வேதபகுதியானது,வேகமாகப் பார்க்கும்போது சாதாரணமானதாகத் தோன்றலாம். ஆனால் அது உங்களை மீண்டுமாக வாசிக்கக் கேட்கிறது. இப்போது மெதுவாக,இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்களில் சாய்ந்து கொள்வதாக வாசிக்க வேண்டும். சில பெயர்கள் பழக்கமானவைகளாகவும் சில புதிதாகவும் இருக்கலாம். ஆதியாகமம்,யாத்திராகமம்,இராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களைத் திருப்பிப் பார்க்க உங்களுக்கு நேரம் இருக்கும் என்றால்,அவர்களது வாழ்க்கையின் விபரங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அவர்களது வாழ்க்கை வரலாறுகள் எல்லாம் மகிமைக்கு மிகவும் தூரமானவைகளே. அவர்கள் எந்த வகையிலும் மகிமை இல்லாதவர்கள். யாக்கோபின் ஒரு மகனாகிய யூதா,தனது மருமகளை ஒரு விபச்சாரி என்று நினைத்து அவருடன் உறவு கொண்டார். அவர்களுக்கு ஒரு இரட்டைக் குழந்தை பிறந்தது. அவர்களில் ஒருவர் இயேசுவின் வம்ச வரலாற்று அட்டவணையில் இடம்பெற்றிருக்கிறார்.ராகாப் என்னும் சத்திரக்காரி / விபச்சாரியும்,போவாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரூத் என்னும் யூதரல்லாத பெண்மணியும் இந்த அட்டவணையில் இடம்பிடித்திருக்கின்றனர். குறிப்பிடப்பட்டுள்ள சில அரசர்கள் மிக மோசமான தவறுகளைச் செய்திருந்தனர். இஸ்ரவேல் நாட்டை மிகுந்த பாவத்திற்குள்ளும் பஞ்சத்திற்குள்ளும் உருவ வழிபாட்டுக்குள்ளும் தள்ளிவிட்டனர். இப்படிப்பட்ட இறந்த காலத்தை உடையவர்கள் கடவுளின் மகனாகிய இயேசுவின் வம்ச வரலாற்று அட்டவணையில் இடம் பெற்றது மிகவும் ஆச்சரியமானதாக இருக்கிறது அல்லவா?
இது தான் இயேசுவின் குணமாக இருக்கிறது என்று சொல்லலாம். அவர் பாவிகளின் தோழனாக,சமுதாயத்தால் அதிகமாகவெறுக்கப்பட்டவர்களுடன் உணவு உண்பவராக இருந்தார். நோயுற்றவர்களையும்,பலவீனமாக இருந்தவர்களையும் தொட்டார். வியாதியுள்ளோர் அவரைத் தேடிச் சென்றார்கள். அவர் பேச்சைக் கேட்ட அனைத்து வகை மனிதர்களுடனும் சுலபமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறவராக அவர் இருந்தார். மக்கள் தங்களது மோசமான,சோகமான,தாழ்வான நிலையில் இருக்கும்போது அவர்களை சந்திப்பதே அவரது சிறப்பு அம்சமாக இருந்தது. அங்கிருந்து அவர்களைத் தனது பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்துவது அவரது தன்மை. பிசாசுபிடித்திருந்த மகதலேனா மரியாள் அவர் பின் சென்றவர்களில் ஒருவர்.வெறுத்து ஒதுக்கப்பட்ட யூத வரிவசூலிப்பாளரான மத்தேயு இயேசுவின் குழுவில் முக்கியமான இடத்தைப் பெற்றார். யூதாஸ் என்னும் பொய்யனும்,ஏமாற்றுக்காரனும் அவருடன் மூன்று வருடங்களாக நெருக்கமாக இருந்தார். அவருக்கு மிக நெருக்கமான குழுவில் இருந்த சீமோன்,அவருக்குப் பெரும் தேவையாக இருந்த நேரத்தில் அவரை மறுதலித்தார். ஆனாலும் நல்ல செய்தியை எடுத்துச் செல்லும் மாபெரும் தலைவர்களில் ஒருவராக மீண்டும் அமர்த்தப்பட்டார்.
ஒரு பழக்கம் அல்லது தவறான உறவு அல்லது பாவமான இறந்த காலம் ஆகியவற்றின் மூலம் கடவுளின் குடும்பத்தில் இருந்து உங்களை நீங்களே தகுதி இழப்பு செய்திருக்கலாம். இயேசு உங்கள் வாழ்வில் இருக்கும்போது,அவர் மண்ணில் இருந்து மகிமைக்கு உயர்த்துகிறார். உங்கள் வரலாறு அவரது சிறப்பான வெளிப்படுத்தலாக மாறுகிறது. உங்கள் அழுக்கு எல்லாம் கல்வாரியில் சிந்தப்பட்ட அவரது இரத்தத்தில் வல்லமையால் கழுவப்படுகிறது.
அவர் மட்டுமே உடைந்த உங்கள் வாழ்வின் துகள்களை சேகரித்து மிகவும் மகிமையான வழியில் அதை மீண்டும் கூட்டி இணைக்க முடியும். உங்களை நீங்களே கணக்கில் இருந்து எடுத்து விடாதீர்கள். நீங்கள் கடவுளின் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்கிறீர்கள். அவர் உங்களை நேசிக்கிறார். அவரிடமும் அவர் குடும்பத்திடமும் இருந்து உங்களைப் பிரித்து வைத்திருப்பவைகளுக்காக வருந்தி மன்னிப்புக் கேளுங்கள். உங்களை மீண்டும் கட்டித்தழுவ அவரை அனுமதியுங்கள்.
அறிக்கை: நான் கடவுளின் பிள்ளை. நான் முழுமையடையாமல் இருந்தாலும்,முழுமையான தகப்பனால் அன்பு செய்யப்பட்டு,நினைவில் வைக்கப்பட்டு இருக்கிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கடவுளின் மகிமையைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது அதிகப் பழக்கமான ஒன்று ஆகையால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த கிறிஸ்மஸ் காலத்தில் அதிகம் பழகிப்போன, ஆனால் மிகவும் முக்கியமான இந்த உண்மையை நீங்கள் மறுபடியும் கவனித்து அது உங்களது கண்ணோட்டங்களை மாற்றும் என்று நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://instagram.com/wearezion.in/