மகிமையை மீண்டும் அடைதல்மாதிரி

மகிமையை மீண்டும் அடைதல்

5 ல் 1 நாள்

மகிமை

கிறிஸ்தவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் சொல்லானது மகிமை என்பதாகும். அதன் பொருள் என்ன என்பதைப் பற்றி நீங்கள் குழம்பியும் இருக்கலாம். அல்லது பலரைப் போல அதன் பொருளை அறிந்திருந்தாலும் அது குறிப்பிடும் பெரும் மகத்துவத்தைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். இன்று நீங்கள் எப்படிப்பட்ட கூட்டத்தில் இருந்தாலும் பரவாயில்லை. மகிமை என்னும் சொல்லானது கடவுளுக்கு உரியதாக குறிப்பிடப்படுகிறது. அது அப்படியே இருக்க வேண்டும். நமது படிப்பிலோ வேலையிலோ பெரும் சாதனையை நிகழ்த்திய பின் நம் மீது மகிமை வழங்கப்படுகிறது. தைரியம் இல்லாமல் மகிமை இல்லை என்ற ஒரு வாக்கியம் போர் அல்லது ஆக்ரமிப்பு சார்ந்து பயன்படுத்தப்படுகிறது.

மகிமை என்பதற்கான “டாக்ஸா”,என்னும் கிரேக்க சொல்லானது பாரமானது என்றே பொருள் கொடுக்கிறது. ஒன்றின் மாபெரும் மதிப்பு அல்லது உள்ளடக்கத்தைப் பற்றி இது குறிப்பிடுகிறது. மகிமை என்னும் சொல்லானது கடவுளுக்கு மட்டுமே பொருத்தப்பட வேண்டும். ஏனென்றால் அவர் ஒருவரே அந்த சொல்லுக்கு உண்மையிலேயே பொருத்தமானவர். சில எடுத்துக்காட்டுகளைச் சொல்வதானால்,அவரது வல்லமை,மகத்துவம்,மனதுருக்கம்,வீரம்,ஆக்கப்பூர்வமான புதுமை,அவரது இறையாண்மையுள்ள சித்தம்,மனித குலத்தின் மீது அவர் கொண்டிருக்கும் இரக்கம் போன்றவை மகிமைக்கு அவர் முழுமையாகப் பாத்திரமானவர் என்பதைக் குறிக்கும் சில குணாதிசயங்களாகும்.

இயேசுவே வார்த்தையாக இருந்து,மாம்சமாகி நமக்குள்ளே வசித்தவர் என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதுகிறார். ஷெக்கினா என்னும் எபிரேயச் சொல்லானது,கடவுளின் மகிமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இயேசு உலகத்தில் வந்தபோது,நாம் இந்த ஷெக்கினா மகிமையைக் கண்டோம். கடவுளின் மகன் மகிமையாலும் உண்மையாலும் நிறைந்திருந்தார் இந்த வசனத்தில் சொல்லப்படுகிறது ஷெக்கினா என்பது கடவுளின் பிரசன்னத்தினால் மகத்துவமாக வெளியே தெரிந்த மகிமையாகும் இது நமது கனவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. புகழ்,பெருமை,தம்பட்டம் என்பவற்றுக்கு நாம் வைத்திருக்கும் அனைத்துக் கருத்துகளுக்கும் மிகவும் மேலானது இது. இது மன்னாதி மன்னனும்,கர்த்தாதி கர்த்தருமானவருக்கே பொருத்தமானது ஆகும்.

இன்று,நீங்கள் யாராக இருந்தாலும்,எந்த அனுபவங்களுக்குள் சென்று வந்திருந்தாலும்,என்னதான் செய்திருந்தாலும்,நீங்கள் இயேசுவை உங்கள் வாழ்வுக்குள் மீண்டுமாக வரவழைக்கலாம். அவர் வந்தால்,தங்குவதற்காகவே வருகிறார். அவர் இருக்கும் இடத்தில் நாம் அவரது மகிமையைக் காணலாம். உங்களது திறமைகளுக்கும் மேலாக செயல்பட உங்களை அவர் பலப்படுத்தும்போது இதை நீங்கள் உணர முடியும். உங்களது பொறுமையின்மைக்காக உங்கள் குழந்தைகள் உங்களை மன்னிக்கும் போது இதை நீங்கள் உங்கள் வீட்டில் காண்பீர்கள். ஒரு குறிப்பிட்ட மோசமான நாளில் முன்பின் தெரியாத ஒருவர் உங்களுக்குக் காட்டிய கனிவில் இதை நீங்கள் காணலாம். இயேசு இருக்கும் இடத்தில் மகிமையானது வெளிப்படையாகத் தெரியும். உங்களுக்கு சில பாராட்டுக்கள் கிடைக்கலாம்,ஆனால் மகிமையை அவருக்கே திருப்பிக் கொடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அறிக்கை: இயேசுவே,நீரே என்னுடன் இருக்கும் கடவுள்,இம்மானுவேல். எல்லாவற்றிலும் நீரே மகிமை அடைகின்றீர்!

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

மகிமையை மீண்டும் அடைதல்

கடவுளின் மகிமையைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது அதிகப் பழக்கமான ஒன்று ஆகையால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த கிறிஸ்மஸ் காலத்தில் அதிகம் பழகிப்போன, ஆனால் மிகவும் முக்கியமான இந்த உண்மையை நீங்கள் மறுபடியும் கவனித்து அது உங்களது கண்ணோட்டங்களை மாற்றும் என்று நம்புகிறோம்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://instagram.com/wearezion.in/