மகிமையை மீண்டும் அடைதல்மாதிரி
சாதாரணத்தில் மகிமை
திருமணம் அல்லது குடும்பம் என்பதைப் பொருத்தவரையில் யோசேப்பும் மரியாளும் சிறியவர்களாகவும் அனுபவம் இல்லாதவர்களாகவும் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் நெருக்கமான உறவில் ஈடுபடுவதற்கு முன்பாகவே அவர்களுக்கு பெற்றோராகும் உயர்ந்த ஒரு அழைப்பு கொடுக்கப்பட்டது. அவர்கள் ஒரு சாதாரணமான குழந்தைக்குப் பெற்றோர் அல்ல. கடவுளின் மகனுக்குப் பெற்றோர். அது எத்தனை அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்!லூக்கா 2 ஆம் அதிகாரத்தை நாம் வாசிக்கும்போது,அவர்களது வாழ்வின் மற்றும் ஒரு நாளைப் பற்றிய விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதுமான மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்பதற்காக அவர்கள் இன்னும் ஒரு ஊருக்குப் பயணப்படவேண்டியதாக இருந்தது. மரியாளுக்கு பிரசவ காலம் ஏற்படும் நாள் நெருங்கும்போது அவர்கள் பயணம் செய்ய நெருக்கப்பட்டார்கள். இறுதியில் பெத்லகேமில் மிருகங்களுக்கான முன்னணையில் பிரசவிக்கவேண்டியதாக இருந்தது. மிகச் சாதாரணமான சூழலில் தனது மகன் பிறக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டிருந்தது பெரும் வியப்பைத் தருகிறது. எளிமையைப் பற்றி சொல்லும்போது,மரியாள் தனது குழந்தையை துண்டுத் துணிகளில் சுற்றி வைத்திருந்தார். சத்திரத்தில் அவர்களுக்கு இடம் இல்லாததால் தன் குழந்தையை மிருங்களுக்கான முன்னணையில் கிடத்தியிருந்தார் மரியாள். மிருகங்களின் சத்தங்களும்,தொழுவத்தின் நெடியும்,இயற்கை நேரடியாகத் தங்களைத் தாக்குவதையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.
தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளம் போன்றவற்றின் வருகையால் அண்மைக் காலத்தில் அசாதாரணமாக,சாதனையாளர்களாக,வெற்றி பெற்றவர்களாக வாழ்வதற்கான அழுத்தம் நமக்குக் கொடுக்கப்படுகின்றது. நமது முகங்கள் பூரணமானவைகளாகத் தெரியவேண்டும் என்று விரும்புகிறோம். சிறப்பான உடைகளை அணிய விரும்புகிறோம். மாபெரும் கொண்டாட்டங்களையும்,சிறப்பான பயணங்களைத் திட்டமிடவும் விருப்பம் கொண்டிருக்கிறோம். இவை அனைத்தும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவே. சாதாரணமானவைகள் சலிப்பானவைகள் என்று நாமே நினைத்துக் கொள்கிறோம். நமது மிகச் சாதாரணமான வாழ்க்கைக்குத் தான் இயேசுவின் தலையீடு அதிகம் தேவை என்பதை மறந்துவிடுகிறோம். சாதாரணமானவைகளில் காணப்படும் மகிழ்ச்சியைப் புறக்கணித்துவிடுகிறோம்.
ரோமர்12ஆம் அதிகாரத்தின் 1 ஆம் வசனமானது இவ்வாறு சொல்கிறது, “கடவுள் உதவினால் இவற்றைத் தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன். கடவுளின் உதவியுடன்,உங்கள் தினசரி, சாதாரண வாழ்க்கையை – உங்கள் உறக்கம்,உணவு,வேலைக்குச் செல்லுதல் – கடவுளுக்கு முன்பாக காணிக்கையாகப் படையுங்கள். கடவுள் உங்களுக்குச் செய்பவற்றைத் தழுவிக் கொள்வது தான் அவருக்கு என்று நீங்கள் செய்யும் சிறப்பான செயலாகும்.”
உங்கள் வாழ்க்கையை முழுவதுமாக இயேசுவுக்கு அர்ப்பணிக்கும்போது,உங்கள் சாதாரண வாழ்க்கையை நீங்கள் மாபெரும் நோக்கத்துடன் வாழ முடியும். இதைச் செய்வதால் நீங்கள் நித்தியமான மகிமையை அவருக்குக் கொண்டுவர முடியும்.
அறிக்கை: இயேசுவே என் வாழ்க்கை உம்முடையது. அதன் ஒவ்வொரு பாகமும் உமக்கே. நீர் அதிலிருந்து சிறப்பானதை வெளிக் கொண்டுவருவீர் என்று நான் அறிவேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கடவுளின் மகிமையைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது அதிகப் பழக்கமான ஒன்று ஆகையால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த கிறிஸ்மஸ் காலத்தில் அதிகம் பழகிப்போன, ஆனால் மிகவும் முக்கியமான இந்த உண்மையை நீங்கள் மறுபடியும் கவனித்து அது உங்களது கண்ணோட்டங்களை மாற்றும் என்று நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http://instagram.com/wearezion.in/