முடிவில்லா அழகைப் பெற்றுக் கொள்ள தயார் காலம், வாரம்1மாதிரி
மேய்ப்பர்கள் அப்போது சமுதாயத்தின் விளிம்பில் இருந்தனர். தேவன் இருப்பதாகக் கருதப்படும் எல்லா இடங்களிலிருந்தும் அவர்கள் ஒதுக்கப்பட்டனர். அவர்கள் அசுத்தமாக கருதப்பட்டதால், அவர்களின் வேலை கோவிலில் வழிபடுவதைத் தடுத்தது. அவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள்.
ஆனால் கிறிஸ்து பிறந்தபோது, தேவ அன்பு இருளில் தள்ளப்பட்டிருந்த அவர்களை பரலோக அழைப்போடு தேடிச் சென்றது, அவர்களை ஒதுக்கிய சமூகத்தின் எல்லைகளுக்கு, மனு உருவில் பிறந்த தேவனை காண அழைத்துச் சென்றது..
“உங்களுக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார்,” என தூதர்கள் கூறினர்.
உன்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? தேவனும் மற்றவர்களும் தங்களை மறந்துவிட்டனர் போல என்று அவர்கள் உணரும் வேளையில், அன்பு அவர்களைத் தேடி கண்டுபிடித்தது. ஆம், அந்த அன்பை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள்.
அந்த மகத்துவமான அன்பு அவர்களை அழகை தேடுகிறவர்களாக மாற்றியது - மாம்சத்தில் பிறந்த அழகைக் காண விரைந்தனர். அங்கே மாம்சத்தில் பிறந்த அழகை முன்னையில் கண்ட போது, தாங்கள் தேவனால் நினைவுகூறப்பட்டதையும், அறியப்பட்டதையும், தேவனால் நேசிக்கபட்டதையும் உணர்ந்தார்கள். அது அவர்களை மாற்றியது.
இது எப்படி நடந்தது என டாக்டர். கர்ட் அவர்கள் விவரிப்பது ஆச்சரியமாய் இருக்கிறது,
“நாம் தேவனால் காணப்பட்டு, அறியப்பட்டு, நேசிக்கப்படும் அனுபவத்தை அழகு தருகிறது. அதை நான் அனுபவிக்கும்போது, நாம் நாமாக மாறுகிறோம் - நமக்குள் இருக்கும் அழகாக மாறுகிறோம். அப்போதுதான் மலை மேல் உள்ள பட்டணமாக - உண்மையான சுவிசேஷகராக ஜொலிக்கிறோம்.”
அழகை சந்திக்கும்போது நாம் என்ன செய்வோமோ அதையே மேய்ப்பர்களும் செய்தனர்—அவர்கள் மற்றோரிடம் அந்த நற்செய்தியை பகிர்ந்தனர்.
அழகு நம்மை ஆட்கொள்ள நாம் விட்டுக்கொடுக்கும்போது, நாம் தேவனால் காணப்பட்டு, அறியப்பட்டு, நேசிக்கபடும் அனுபவத்தை பெறுகிறோம். அத்தருணங்களில், "மலை மேல் உள்ள பட்டணமாக" ஜொலிக்கும் ஆச்சரியத்தினால் நிறைந்து நம்மை சுற்றி உள்ள மற்றவர்களுக்கு அந்த தெய்வீக அன்பை பிரகாசிக்கிறோம்.
ஒரு நிமிடம் யோசனை செய்யுங்கள்—நீங்கள் தேவனால் காணப்பட்டவர்கள், அறியப்பட்டவர்கள், நேசிக்கப்பட்டவர்கள் என்பதை அனுபவிக்கசி செய்யும் அழகை எப்போது சந்தித்தீர்கள்? அதை மற்றவர்களோடு பகிர்ந்தீர்களா?
இன்று மேய்ப்பர்கள் அழகைத் தேடியதைப் போல நீங்களும் தேடும்படி உங்களை அழைக்கிறோம்—அது உங்களை ஆச்சரியத்திற்கும் ஆராதனைக்கும், பிரமிப்பிற்கும், வியப்பிற்கும் வழிநடத்த அனுமதியுங்கள். பின்பு, அந்த மேய்ப்பர்களைப் போல உங்கள் அனுபவத்தை மற்றோரோடு பகிருங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மிகுந்த எதிர்பார்ப்போடு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் இந்த பருவத்தினை நெருங்கும் வேளையில் தேவனுடைய இருதயத்தோடு ஒன்றிடும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் எங்களோடு 4 வாரங்களுக்கு கீழ்கண்ட தலைப்பின் கீழ் தியானிக்க இணைந்திடுங்கள்: இதோ அழகு, தடைகளை உடைப்போம், அறையை உருவாக்குவோம், தேவன் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.. வாழ்க்கையின் அனைத்து சிறந்த விஷயங்களைப் போலவே, இந்தப் பயணமும் மற்றவர்களுடன் பகிரும்போது மேலும் சிறப்பாகிறது-எனவே ஓர், இரு நண்பர்களோடும், உங்கள் ஆச்சரிய உணர்வோடும், இந்த கிறிஸ்துமஸ் பருவத்திற்குள் செல்லுங்கள்.
More