முடிவில்லா அழகைப் பெற்றுக் கொள்ள தயார் காலம், வாரம்1மாதிரி
கிறிஸ்மஸைத் திருடிய கிரிஞ், என்னும் கதையில், க்ரிஞ்சின் இதயம் “அன்று மூன்று அளவு வளர்ந்தது?” என்ற பகுதி உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அத்திரைப்படத்தின் இக்காட்சி பலருக்கு பிடித்தமான தருணம். பனியில் கிரிஞ்ச் கால்கள் சிக்கிக் கொண்டு அங்கேயே நின்று காத்திருந்தான். எதற்காக? ஹூ கிராமம் தங்கள் பொட்டலங்கள், பெட்டிகள் மற்றும் பைகள் எடுத்துச் செல்லப்பட்டதை உணரும் போது என்ன நடக்கும் என்று பார்க்க.
ஆனால் எதிர்பார்க்கப்பட்ட "பூ ஹூ" மலை ஏறுவதற்கு பதிலாக,ஹூ-வின் ஒரு கிரிஞ்சை சென்றடைந்தது…எதிர்பாராத அழகுடன்.
அப்பாடாலின் இனிமைக்கு காரணம் இராகத்மோ பாடல் வரிகளை அல்ல. அதாவது, "டஹூ டோர்ஸ்" என்றால் என்ன என்று உண்மையில் யாருக்குத் தெரியும்? இல்லை—அவர்களின் பாடல்கள் அழகாக இருந்தது, ஏனெனில் அவை ஒரு பெட்டியில் அடைக்க முடியாத ஒன்றிலிருந்து வெளிவந்தன. நித்தியமான ஒன்றிலிருந்து வந்தது.
அப்போதுதான் க்ரிஞ்ச், "ஒருவேளை கிறிஸ்துமஸ் என்பது கடையில் வாங்கும் பொருட்கள் அல்ல... அதற்கும் மேற்பட்டது" என்ற பேரறிவைப் பெற்றது. க்ரின்ச் அழகை சந்தித்தார், அந்த அழகைப் பெற்றுக் கொள்ள கிரிஞ்சின் இதயம் மூன்று மடங்கு விரிவடைந்தது…ஏனெனில் அழகு அதைத்தான் செய்கிறது.
ஜான் ஓ’டோனோஹ் சொல்வது போல, “வேகமாக மற்றும் சுத்தமான கிருபையினால் அழகு நம்மை ஆச்சரியப்படுத்துவதே அழகின் அதிசயம், இது தெய்வீக சுவாசம் இதயத்தை ஊதி திறப்பதைப் போன்றது.”
க்ரிஞ்சின் இதயம் அழகால் விரிவடைந்தது. தேவனின் நித்தியமான, எல்லையற்ற, ஆடம்பரமான அன்பைப் பெற நம் ஆன்மாவை விரிவுபடுத்துவதே அழகின் நோக்கம்.
ஆழ்மனதில் இதை நாம் அறிவோம், இல்லையா? சூரிய அஸ்தமனம், குழந்தை அல்லது தேவனின் அழகைக் காணும்போது, நமது இதயம் சற்று விரிவடைகிறது. நமது இதயத்தை நாம் திறப்பதின் மூலமாக, நமக்குள் அழகு நுழைய அனுமதிக்கிறோம்.
நம் அனைவருக்கும் இது போன்ற தருணங்கள் தேவை. தெய்வீக அன்பின் பரந்த தன்மைக்கு இடமளிக்க நம் இதயங்களை விரிவுபடுத்தும் தருணங்கள்.
ஏனெனில் 2 கொரிந்தியர் 3:18ன் படி, நாம் அழகுக்காக நம்மைத் திறக்கும்போது ஏதோ ஒன்று நடக்கிறது. நாம் "கர்த்தருடைய மகிமையைக் காணும்போது ... நாம் அதே சாயலில் மாற்றப்படுகிறோம்.”
வில்லியம் ப்லேக்ஸ் சொல்வது போல, “நாம் எதைப் பார்க்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம்.”
தேவன் உண்மையிலேயே அழகானவர் என்றால், எல்லா அழகும் அவரிடம் இருந்து வெளிப்படுமெனில், நாம் அவரைப் பார்க்கும்போது, நாம் அவரைப் போலவே ஆகிவிடுவோம். தேவனுடைய குமாரனின் சாயலைப் போல தோற்றமளிக்கும் வகையில் அவர் நம்மைத் தனது தெய்வீக அரவணைப்பில் வைத்து வனைகிறார்.
இந்த வாரம் அழகைப் பார்ப்பதின் மூலம் “தேவ மகிமையைக் காண்பது” என்னும் அனுபவத்திற்குள் செல்வோமா? கிறிஸ்துவின் அழகை உங்கள் கற்பனையில் தியானியுங்கள்.
நீங்கள் அவரைப் பார்க்கும்போது, “ஆண்டவரே, இத்தருணத்தில் என்னை எப்படி உமது சாயலாக மாற்ற விரும்புகிறீர்? எனக் கேளுங்கள்.
இன்ஃபினிட்டமுடன் அட்வென்ட்டின் ஒவ்வொரு வாரத்தையும் தொடர விரும்பினால், இந்த இணைப்பைக் காணவும் https://infinitumlife.com/tools-and-resources மேலும் பல வேதாகம வாசிப்புத் திட்ங்களுக்கு எங்களோடு இணையவும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மிகுந்த எதிர்பார்ப்போடு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் இந்த பருவத்தினை நெருங்கும் வேளையில் தேவனுடைய இருதயத்தோடு ஒன்றிடும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் எங்களோடு 4 வாரங்களுக்கு கீழ்கண்ட தலைப்பின் கீழ் தியானிக்க இணைந்திடுங்கள்: இதோ அழகு, தடைகளை உடைப்போம், அறையை உருவாக்குவோம், தேவன் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.. வாழ்க்கையின் அனைத்து சிறந்த விஷயங்களைப் போலவே, இந்தப் பயணமும் மற்றவர்களுடன் பகிரும்போது மேலும் சிறப்பாகிறது-எனவே ஓர், இரு நண்பர்களோடும், உங்கள் ஆச்சரிய உணர்வோடும், இந்த கிறிஸ்துமஸ் பருவத்திற்குள் செல்லுங்கள்.
More