முடிவில்லா அழகைப் பெற்றுக் கொள்ள தயார் காலம், வாரம்1மாதிரி
இயேசு இவ்வுலகத்திற்கு வந்த போது, தேவன் ஒரு அழைப்பு விடுத்தார், “என் அரவணைப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் அன்பானவராக, தகப்பனாக என்னைப் பெற்றுக் கொள்ளுங்கள். என் விரித்த கரங்களுக்குள், என் வீட்டிற்குள், என் குடும்பத்திற்குள் வாருங்கள். நீங்கள் என்னுடையவர்கள்.”
நாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளையாக அவருடைய அரவணைப்பை பெற்றுக் கொள்கிறோம். ஒரு தாய் முதல் முறை தன் பிள்ளையை மார்போடு அணைப்பது போல, தேவன் நம்மை அவரது அன்பின் கரங்களில் அரவணைக்கிறார், அவரது சொந்தப் பிள்ளையாக கைகளில் ஏந்தி மகிழ்கிறார்.
அழகு இது போன்ற அனுபவத்தை நமக்களிக்கிறது. ஜான் ஓ’டோனோ இதனை அழகாக எடுத்துரைக்கிறார், “அழகானவர்…தனிமையிலிருந்து நித்திய அரவணைப்பின் கதகதப்பிற்கு, ஆச்சரியத்திற்கு அழைக்கிறார்.”
தனிமையில் இருந்து நித்திய அரவணைப்புக்கு அழைக்கப்படுகிறோம்.
நாம் அழகை அனுபவிக்கும்போது, தேவனோடுள்ள ஐக்கியத்தை ருசிக்கிறோம் - திருமண உறவின் ஐக்கியத்தை ருசிக்கிறோம். தேவனுடைய அரவணைப்பிற்கு நம்மை அழைக்கிறது அழகு. நாம் அந்த அழைப்பை ஏற்று சரணடையும்போது, வெட்கம் என்னும் கட்டு உடைகிறது, நேசரின் அன்பினால் விடுதலையாக்கப்படுகிறோம்.
அழகு, தேவனுடைய கிருபையாக செயல்படுகிறது, நமது தவிப்பின் நேரத்தில், தனிமையின் நேரத்தில், பயம் மற்றும் பதட்டத்தின் நேரத்தில் மனதினுள் கிருபையென்னும் அழகு நுழைந்து நாம் நாமாக வாழும்படி நம்மை விடுவிக்கிறது.
அழகு உங்களை காண வேண்டும் என பிரார்த்திக்கிறேன். எல்லாத் தடைகளையும் உடைத்து, அழகானவரின் பிரசன்னத்தால் உங்களை விடுதலையாக்க வேண்டும் என ஜெபிக்கிறேன். இதுவே உங்களுக்கான எங்களது ஆசீர்வாதம்—உங்களுக்கான எங்கள் ஜெபம், நமக்கான ஜெபம்.
அழகின் வாசலில் நின்று
அழகு உங்களை உள்ளே வரவேற்பதைக் காண்பீர்களாக.
அழகின் பரப்பு உங்கள் இருதயங்களை அகலப்படடுத்தட்டும்
மேலும் அழகின் ஐசுவரியம் உங்களை ஆழப்படுத்தட்டும்.
அழகின் அளவற்ற அன்பு உங்களை விடுதலையாக்கட்டும்.
அதன் மகிமை உங்களை ஊடுருவட்டும்.
விடுதலையோடு நேசிக்கக் கூடிய அந்த வலிமையை உங்களுக்குள் அது கிளரட்டும்,
விடுதலையோடு நேசிக்க, ஊதாரத்துவமாய் இருக்க,
மேலும் அளவிற்கதிகமாய் உருவாக்க.
இந்த வாரத்தில் அழகின் பாதையில் எப்படி ஈடுபடுவீர்கள், மேலும் தேவனின் அரவணைப்பிற்கான அழைப்பிதலுக்கு என்ன பதிலளிப்பீர்கள்?
ஒரு ஓவியத்தின் முன் அமருங்கள், ஒரு நடனத்தைக் காணுங்கள், அல்லது ஒரு பாடலைக் கேளுங்கள் மேலும் அத்தருணத்திலே தான் தேவ அணைப்பை உணருங்கள். நீங்கள் என்ன உணருகிறீர்கள்? என்ன காண்கிறீர்கள்?
(யூ டியுபில்) உள்ள “ஹீ ஹேஸ் டைம்” என்னும் பாடலின் மூலம் அழகின் அணைப்பிற்குள் உங்களை அனுமதியுங்கள். அல்லது உங்கள் விருப்பமான ஆராதனைப் பாடலின் மூலம் தேவ பிரசன்னத்தை உணருங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மிகுந்த எதிர்பார்ப்போடு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் இந்த பருவத்தினை நெருங்கும் வேளையில் தேவனுடைய இருதயத்தோடு ஒன்றிடும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் எங்களோடு 4 வாரங்களுக்கு கீழ்கண்ட தலைப்பின் கீழ் தியானிக்க இணைந்திடுங்கள்: இதோ அழகு, தடைகளை உடைப்போம், அறையை உருவாக்குவோம், தேவன் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.. வாழ்க்கையின் அனைத்து சிறந்த விஷயங்களைப் போலவே, இந்தப் பயணமும் மற்றவர்களுடன் பகிரும்போது மேலும் சிறப்பாகிறது-எனவே ஓர், இரு நண்பர்களோடும், உங்கள் ஆச்சரிய உணர்வோடும், இந்த கிறிஸ்துமஸ் பருவத்திற்குள் செல்லுங்கள்.
More