முடிவில்லா அழகைப் பெற்றுக் கொள்ள தயார் காலம், வாரம்1மாதிரி
“அழகு உலகைக் காக்கும்.”—ஃபியோடர் டோஸ்டாய்வ்ஸ்கி
உண்மையில் அழகு உலகைக் காக்க முடிந்தால்?
நம்மில் பலருடைய கடந்த காலம் மனிதர்கள் மேலுள்ள நம்பிக்கையை இழக்கச் செழ்துவிட்டது. நம்மில் பலர் பெரும் இழப்பில் இருந்து மீண்டு கொண்டிருக்கிறோம். அரசியல் சூழல்கள், சர்வதேச தொற்று நோய் பரவல், மத வெளிகளில் அநீதிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் நம்மை மனமடியச் செய்து விட்டன.
நம்மில் பலருடைய கேள்வி … ஏதாகிலும் அழகாயிருக்க முடியுமா?
நமது உலகம் அதிர்ச்சியால் சூழப்பட்டுள்ளது. மருத்துவர். கர்ட் தாம்சன், எம். டி. யின் கூற்றுப்படி, இடது-மூளையின் வழிகளைக் கையாள்வதன் மூலம் அதிர்ச்சிக்கு பதிலளிக்க விரும்புகிறோம், அதாவது: தர்க்கம், பகுத்தறிவு மற்றும் கட்டுப்பாடு.
அது முற்றிலும் உண்மை. விரக்தி, தீமை மற்றும் அநீதியை நமது சொந்த கட்டுப்பாட்டின் மூலம் தோற்கடிக்க முயற்சிக்கிறோம் - சரிசெய்தல், நிர்வகித்தல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது, என ஏதேதோ செய்து பார்க்கிறோம் ஆனால் அது அவைகளை தோற்கடிக்க முடியவில்லை.
பொதுவாக, நாம் கட்டுப்படுத்த எவ்வளவு கடினமாக முயற்சிக்கிறோமோ, அவ்வளவாக அதே பிரச்சனைகள் நம்மைக் கட்டுப்படுத்தும்.
ஆனால் நம் உலகில் உள்ள மனதை-சுருக்கும் நெருக்கடியானது இடது-மூளைப் பிரச்சனையாக இல்லாவிட்டால், அதற்கு இடது-மூளைத் தீர்வுகளான அமைப்பு மாற்றங்கள் அல்லது ஒரு வலுவான இறையியல் போன்றவை தேவைப்படாது அல்லவா?
உலகில் உள்ள தீமையான பிரச்சினைகளுக்கு நாம் எதிர்பாராத அழகுடன் அதைத் தகர்ப்பது போன்று பதிலளித்தால் எப்படி இருக்கும்?
அழகு உலகைக் காப்பாற்றுமா என்பதை அறிய விரும்புகிறீர்களா? தேவன் உலகைத் தானேக் காப்பாற்றும் முடிவை எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதைப் பார்ப்போம். உலகத்தை இருளில் மூழ்கடித்த அதிர்ச்சியின் நடுவில், “வார்த்தை மாம்சமாகி, நம் மத்தியில் வாசம் செய்தார்.”
“பிசாசு கொண்டுவரும் தீமைக்கு இயேசு ஒரு நடைமுறை போன்ற அணுகுமுறையை எடுக்கவில்லை; இயேசு அவ்வகை பிரச்சனைக்கு அழகியல் அணுகுமுறையை கையில் எடுத்தார்.”—பிரையன் ஜன்ட் அழகு உலகத்தை காக்கும்.
தேவன் இவ்வுலக இருளை வெளிச்சத்தின் வெள்ளத்தால், இயேசுவின் மூலமாய் நீக்கினார். அவர் உலகை எதிர்பாராத அழகின் மூலமாய் மாற்றினார்.
ஏனெனில் அழகு என்பது அன்பின் உருவம்.
நீங்கள் எப்போதாவது ஒரு கணம் நம்பமுடியாத கவலை அல்லது சோகத்தை அனுபவித்திருக்கிறீர்களா, அது திடீரென்று உங்கள் நடுவில் அழகு இருப்பதால் மாற்றப்பட்டிருக்கிறதா? அந்த நேரத்தில் உங்களுக்குத் தேவையான வார்த்தைகளை சரியாகப் பேசிய ஒரு பாடலை நீங்கள் கேட்டிருக்கலாம். அல்லது நீங்கள் உண்மையிலேயே மன அழுத்தத்தில் இருக்கும்போது யாராவது உங்களை சிரிக்க வைத்திருக்கலாம்.
இப்படிப்பட்ட தெய்வீக அன்பு வெளிப்பட்ட தருணங்கள்— அவை நம்மை மாற்றக்கூடியவை, இல்லையா?
இப்போது உங்கள் வாழ்க்கையிலோ அல்லது நம் உலகத்திலோ நம்மை அமிழ்த்துவது போன்று உணரவைக்கிற அல்லது அதிக கவலையைத் தூண்டுகிற ஒரு பகுதியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். பின்னர் தேவனிடம் கேளுங்கள், "இந்த சூழ்நிலையில் உங்கள் அன்பை வெளிப்படுத்தும் அழகான காரியம் என்ன?" என்று.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
மிகுந்த எதிர்பார்ப்போடு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் இந்த பருவத்தினை நெருங்கும் வேளையில் தேவனுடைய இருதயத்தோடு ஒன்றிடும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் எங்களோடு 4 வாரங்களுக்கு கீழ்கண்ட தலைப்பின் கீழ் தியானிக்க இணைந்திடுங்கள்: இதோ அழகு, தடைகளை உடைப்போம், அறையை உருவாக்குவோம், தேவன் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.. வாழ்க்கையின் அனைத்து சிறந்த விஷயங்களைப் போலவே, இந்தப் பயணமும் மற்றவர்களுடன் பகிரும்போது மேலும் சிறப்பாகிறது-எனவே ஓர், இரு நண்பர்களோடும், உங்கள் ஆச்சரிய உணர்வோடும், இந்த கிறிஸ்துமஸ் பருவத்திற்குள் செல்லுங்கள்.
More