முடிவில்லா அழகைப் பெற்றுக் கொள்ள தயார் காலம், வாரம்1மாதிரி

Infinitum Advent Behold Beauty, Week 1

5 ல் 1 நாள்

         
                     

அழகே உருவானவர் இப்பூமியில் அவதரித்தார். அழகழாய் அனைத்தையும் படைத்தவர் மாம்சமாகித் தோன்றினார். அப்படியிருந்தும்—“உலகமோ அவரை அறியவில்லை?” இது எப்படி சாத்தியம்?

ஒருவேளை மேசியா இப்படி தோன்றுவார் என அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இயேசு இருந்ததால் அவர்களால் அவரை அறிய முடியவில்லையோ என்னவோ.

இயேசு விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளத்தில் வரவில்லை, அவருடைய வரவு தாழ்மையான மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
பலத்த பராக்கிரமசாலியாக வராமல், சிறு பாலகனாக பிறந்தார் இயேசு.
வீரர் படையோடு வராமல், துதி பாடும் தூதர் சேனையோடு வந்தார்.

இயேசு இப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை போலவே, நாமும் அழகு என்றால் இதுதான் என தவறான எண்ணம் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளோம். ஆனால் நமது அழகு என்பது பெரும்பாலும் நமது எண்ணத்தை பொறுத்ததே.

ஜான் ஓ’டோனோ இதனை தனது புத்தகத்தில் அழகாக வெளிப்படுத்தி எழுதி உள்ளார் அழகு: அறியாத அரவணைப்பு:

“நாம் பயபக்தியோடு அனுகும்போது, பெரிய காரியங்கள் நம்மை அனுக தீர்மானிக்கின்றன. நமது வாழ்க்கை வெளியே தெரிய வருகிறது, அதன் வெளிச்சம் உள்ளே மறைந்திருக்கும் அழகை வெளிக்கொணர்கிறது. நாம் பூமியின் மீது பயபக்தியோடு நடக்கும்போது, அழகு நம்மை நம்ப தீர்மானிக்கிறது. அவசரப்படும் மனதும், திமிரான உள்ளமும் அழகின் அரவணைப்புக்குள் செல்லத் தேவையான மிருதுத் தன்மையையும் பொறுமையும் இழந்துவிடுகிறது.”― ஜான் ஓ'டோனோ, அழகு: அறியாத அரவணைப்பு

நாம் “படபடப்பான மனதோடும் திமிரான உள்ளத்தோடும்,” இருக்கும்போது அழகின் அரவணைப்பிற்குள் செல்வது கடினமாகிறது. அழகைப் பிடிக்க முடியாதபடி நாம் அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். அல்லது அழகு இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறோம். இப்படியாக யோசித்தால், அழகை நமது விருப்பத்திற்கு ஏற்றார் போல கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்.

அழகு மினுமினுப்பாக, ஒளிவீசும் நட்சத்திரங்களைப் போல அல்லது மஞ்சளும் சிவப்பும் கலந்த கவர்ச்சிகரமான சூரிய அஸ்தமனத்தைப் போலவோ இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சில நேரங்களில் அழகு அப்படி இருக்கும். ஆனால் சில நேரங்களில் அழகு நம் மத்தியில் மிகவும் சாதாரணமான, அன்றாட தருணங்களில் வெளிப்படுகிறது. அவளை அங்கே பார்க்கும்படி அவள் கேட்கிறாள்.

ஒரு குழந்தை தன்னோடு விளையாடும்படி நம்மை அழைக்கையில்.
அந்நியரின் பாசமான புன்னகையில்.
தோழமையின் மன்னிக்கும் வார்த்தையில்.

அழகை கண்டுகொள்ள நாம் முதலில் சரணடைய வேண்டும். நாம் நமது எதிர்பார்ப்பை,கட்டுப்பாடை, தேவன் எப்படி இருப்பார், எப்படி நவ் மத்தியில் வருவார் என்பது போன்ற நிகழ்ச்சி நிரல்களை விட்டுக்கொடுக்கும்போது, அழகானவரை, இயேசுவை கண்டுகொள்ள இயலும்.

இந்த வாரம், உலகை பயபக்தியோடும், ஆர்வத்தோடும், திறந்த மனதோடும் அனுகவதின்மூலம் சரணடைதலை பயிற்சி செய்யப் போகிறோம். இதன் மூலமாக  அன்றாட வாழ்க்கையில், நம்மைச் சுற்றிலும் நாம் தொட்டு உணரக்கூடிய வகையில் உள்ள தேவனின் அழகை நாம் பெற்றுணர முடியும்.

தேவ பிரசன்னம் வெளிப்படும் அழகைப் பெற்றுக் கொள்ள “பூமியில் பயபக்தியோடு நடப்பது” எப்படி இருக்கும்?

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Infinitum Advent Behold Beauty, Week 1

மிகுந்த எதிர்பார்ப்போடு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் இந்த பருவத்தினை நெருங்கும் வேளையில் தேவனுடைய இருதயத்தோடு ஒன்றிடும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் எங்களோடு ​​ 4 வாரங்களுக்கு கீழ்கண்ட தலைப்பின் கீழ் தியானிக்க இணைந்திடுங்கள்: இதோ அழகு, தடைகளை உடைப்போம், அறையை உருவாக்குவோம், தேவன் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்.. வாழ்க்கையின் அனைத்து சிறந்த விஷயங்களைப் போலவே, இந்தப் பயணமும் மற்றவர்களுடன் பகிரும்போது மேலும் சிறப்பாகிறது-எனவே ஓர், இரு நண்பர்களோடும், உங்கள் ஆச்சரிய உணர்வோடும், இந்த கிறிஸ்துமஸ் பருவத்திற்குள் செல்லுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக இன்ஃபினிட்டம்- க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கீழே சொடுக்கவும்: http://infinitumlife.com/2022advent