ஏங்கும் ஒவ்வொரு இதயமும்மாதிரி
தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிய அசெளகரிய ஆணை
ஒரு உத்திரவில், அகுஸ்து ராயன், குடிமதிப்பெழுத எல்லா மக்களையும் தங்கள் பூர்வீக கிராமங்களுக்கு செல்ல செய்தார். பேரரசு எவ்வளவு விரிவடைந்திருக்கிறது என்று அறிந்தால், அதிக வரி விதித்து ரோமில் பெரிய, சிறப்பான இராணுவத்தை உருவாக்க முடியும். இந்த குடிமதிப்பு அகுஸ்துவின் குடிமக்களை சிரம படுத்தியது, அவன் அதை பொருட்படுத்தவில்லை. அவன் தன்இராஜ்யத்தை கட்டுவதிலும், காப்பதிலுமே அக்கறை காட்டினான்.
கடவுளின் நிலையான நித்திய இராஜ்யத்தை உருவாக்க அவனின் குடிமதிப்பு கட்டளையை பயன்படுத்தினார் என்பதை கொஞ்சமேனும் அவன் அறிந்திருக்கவில்லை
அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட பொழுது யோசேப்பும், மரியாளும் பெத்லேகேம் நகரத்திலிருந்து 90 மைல் தொலைவில் உள்ள நாசரேத்தில் இருந்தனர், மரியாளுக்கு பிரசவ நேரம் நெருங்கியிருந்தது. இது சிரமத்தையும், சங்கடத்தையும் அளித்தாலும், கண்ணுக்கு புலப்படாத அநேக காரியங்களும் இதினால் நடந்தது.
700 வருடங்களுக்கு முன்னரே, நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த மேசியா பெத்லகேமில் பிறப்பார் என்று மீகா தீர்க்கதரிசி முன்னறிவித்திருந்தார். பெத்லகேமில் இல்லாமல் நாசரேத்தூரில் இயேசு பிறந்திருந்தால், வேதம் நிறைவேறியிருக்காது, அவர் இரட்சகராகவும் இருந்திருக்க மாட்டார். மீகாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற அவர் புறமத ஆட்சியாளனையும், அசெளகரியமான கட்டளையையும், அந்த புனித குடும்பத்தை வழிநடத்தவும் பயன்படுத்தினார்.
மரியாள் பெத்லகேமிற்கு போகும் வழியில் அவளுக்கு பிரசவ வலி அதிகரித்த போது, கர்த்தர் அவளை நடுவழியில் பிரசவிக்க விடமாட்டார் என்பதை அறிந்து அவள் ஆறுதல் அடைந்தாளா என்பதுதான் நமது சிந்தனை. ஒரு வேளை அவள் மீகாவின் தீர்க்கதரிசனத்தை நினைவில் வைத்து, பெத்லகேம் சேரும் வரை பிரசவம் நேரிடாது என்றிருந்திருக்கலாம்
அநேக வேளைகளில் நாம் கடவுளின் நேரத்தையும், வாழ்க்கையின் நிகழ்வுகளையும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். நமது பார்வை குறுகினது, அவர் நம் வாழ்க்கையின் மிகச் சிறிய மற்றும் பெரிய விவரங்களின் ஊடாய் அவரின் சித்தத்தை நிறைவேற்றுகிறார். அடுத்த முறை ஒரு சிரமமான கட்டளை, அல்லது எதிர்பாராத திருப்பம் நம் திட்டத்தில் ஏற்பட்டால் தைரியமாக இருங்கள். அகுஸ்து ராயனின் கட்டளை, கர்த்தர் எப்பொழுதும் கிரியை செய்கிறார் என்றும், அவரை தடுத்து நிறுத்த முடியாது என்றும் நமக்கு நினைவூட்டுகிறது.
- உலகளாவிய காரியங்களை வேறு கண்ணோட்டத்தில் சிந்திக்க கடவுள் எப்படி நம்மை அழைக்கிறார்?
- குறுக்கீடுகள் ஏற்படும் போது எனது திட்டங்களைப் பற்றி வேறு கண்ணோட்டத்தில் சிந்திக்க கடவுள் என்னை எப்படி அழைக்கிறார்?
- எனது திட்டத்தின்படி காரியங்கள் நடைபெறாத போதும் நான் எப்படி அசையாமல் இருக்க முடியும்?
இந்த திட்டத்தைப் பற்றி
சார்லஸ் வெஸ்லியின் புகழ்பெற்ற கிறிஸ்மஸ் கீதமான "வா, நீ நீண்ட காலமாக எதிர்பார்த்த இயேசு" (“Come, Thou Long Expected Jesus,”) என்ற பாடலில், ஏங்கும் ஒவ்வொரு இருதயத்திற்கும் இயேசுவே மகிழ்ச்சி என்று பாடுகிறோம். இந்த வருகை, எவ்வாறு மனித நிகழ்வுகளின் தெய்வீக ஒத்திசைவு மற்றும் அவரது வருகைக்கான பல்வேறு பதில்கள், நம் இருதயங்களின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டறியவும். ராஜாக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் முதல் மேய்ப்பர்கள் மற்றும் கன்னிகைகள் வரை, இயேசுவின் வருகை நாம் எதை பொக்கிஷமாக கருதுகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் இருதயத்தின் மகிழ்ச்சியை இந்த கிறிஸ்துமஸில் கண்டுபிடியுங்கள்.
More