ஏங்கும் ஒவ்வொரு இதயமும்மாதிரி
ஒரு அகம்பாவ & யூதர்களின் மெய்யான ராஜா
சாஸ்திரிகள் எருசலேமிற்குள் நுழைந்து, யூதர்களின் புதிதாகப் பிறந்த ராஜாவைப் பற்றி கேள்விகளைக் கேட்டபோது, ஏரோது தனக்குள் எழும் பீதியை மறைக்க முயன்றார். எருசலேமில் சாஸ்திரிகளின் பிரசன்னத்தின் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொண்டார், மேலும் அவர்கள் காரணமில்லாமல் எங்கேயோயிருந்து வரவில்லை என்பதை அறிந்திருந்தார். மற்றும், அவர்கள் மெய்யான யூத ராஜாவுக்கு கீரீடம் சூட்டும் பணிக்காக வந்தனர், இது அவனுக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது.
அகுஸ்து ராயன், அவனது தந்தையான ஆண்டிபேட்டருக்குத் தயை செய்யும் விதமாய், ஏரோதுக்கு "யூதர்களின் ராஜா" என்ற பட்டத்தை திருப்பிக் கொடுத்தார். ஆனால் ஏரோது யூதர் கூட இல்லை, ஏதோமியன். அவர் பட்டத்தை எப்படிப் பெற்றிருந்தாலும், அவர், தான், யூதர்களின் நியாயமான ராஜா அவர் என்றும், அந்த பட்டத்தை உரிமைக்கோரும் யாரும் தனது சிம்மாசனத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நம்பினார்.
ஏரோதின் ஆட்சி வரலாற்றாசிரியர்களிடையே மிகவும் முக்கியப்படுத்தப்படுகிறது, ஏனெனில் அவரை பற்றிய ஆய்வு, வேறுபட்ட தீவிரநிலைகளைப் பற்றியது. ஒருபுறம், யாரும் இவருக்கு சமமாக இல்லாதபடி கட்டுபவர். யூதரகளின் ஆலயத்தை புனரமைப்பதே அவரது மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான கட்டிடத் திட்டமாகும். அதன் புனரமைப்பில் எந்தச் செலவும் மிச்சப்படுத்தப்படவில்லை, மேலும் ஏரோதின் மிகப்பெரிய ரசிகர்களாக இல்லாத மதகுருக்கள் கூட அதன் சொல்லமுடியாத அழகைப் பற்றி அடிக்கடி குறிப்பிட்டனர்.
ஆனால், மறுபுறம், ஏரோது எந்த நல்ல காரியத்தைச் செய்தாலும், அது அவனுடைய விளக்க முடியாத சித்தப்பிரமை மற்றும் கொடுமையால் பெரிதும் மறைக்கப்பட்டது. தேசத்துரோகம் என்று சந்தேகிக்கப்படும் எவரும், அவனுடைய குடும்பம் உட்பட, அவரது முன்னிலையில் பாதுகாப்பாக இல்லை. அவர் தனது விருப்பமான மனைவி மரியம்னே மற்றும் அவர்களின் இரட்டை மகன்கள் தனது அரியணையைக் கைப்பற்ற விரும்புவதாக அவர் சந்தேகித்தபோது, அவர் அனைவரையும் கொன்றார்.
எனவே, யூதர்களின் மற்றொரு ராஜா பிறந்தார் என்ற செய்தியை ஏரோது கேள்விப்பட்டபோது, அவர் அச்சுறுத்தப்பட்டார் மற்றும் சாஸ்திரிகளுடன் ஒரு இரகசிய சந்திப்பை ஏற்படுத்தினார். குழந்தை ராஜா இருக்கும் இடத்தைப் பற்றி அவருக்குத் தெரிவிக்கும்படியும், அவரும் அவரை வணங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் ஏரோதுவிடம் திரும்பி வரக்கூடாது என்று கனவில் எச்சரிக்கப்பட்டதால், சாஸ்திரிகள் வேறு வழியில் வீட்டிற்கு சென்றனர்.
இந்த சுயநலவாதியின் அதிகார வெறியின் சோகமான விளைவு ஒரு கொலைவெறி. பெத்லகேமில் இரண்டு வயது மற்றும் அதற்குக் குறைவான அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்றார்.
ஒளிக்கும் இருளுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் அண்ட சக்திப் போராட்டத்திற்கு ஏரோதின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. பூமிக்குரிய கண்ணோட்டத்தில், ஏரோது தனது சிம்மாசனத்திற்கான எந்தவொரு போட்டியையும் அகற்ற விரும்பினார். ஆனால் ஆன்மீகக் கண்ணோட்டத்தில், இது சாத்தானின் செயல், சர்ப்பத்தை நசுக்கும் இயேசு கிறிஸ்துவைக் கொல்ல முயற்சிக்கிறது. (ஆதியாகமம் 3:15).
கிறிஸ்து ராஜாதி ராஜாவாகவும் தேவாதி தேவனாகவும் இல்லாவிட்டால், அவர் இந்த உலகத்தின் ராஜ்யங்களுக்கு அத்தகைய அச்சுறுத்தலாக இருப்பாரா? 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும், எருசலேமில் பிறந்த யூதர்களின் ராஜாவை உலகம்இன்னும் புறக்கணிக்க முடியாது என்பது அவருடைய அரசாட்சியை மேலும் நிரூபிக்கிறது!
ஏரோது வந்து போனார், மேலும் பல ஆட்சியாளர்களும் வந்துள்ளனர். இயேசு பூமிக்குரிய ராஜ்யங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், கடவுளுடைய ராஜ்யத்தின் முன்னேற்றத்தை எதுவும் தடுக்க முடியாது. ஒரு ராஜா இருக்கிறார், அவருடைய பெயர் இயேசு. அவர் வருகையை ஏற்றுக்கொள்ளுவது என்பது, அவரை வணங்கி ஆராதிப்பதாகும்.
- இயேசுவின் பிறப்பு எவ்வாறு இன்று ராஜ்யங்களையும் ஆட்சியாளர்களையும் அச்சுறுத்துகிறது?
- இயேசுவின் பிறப்பு, என் வாழ்வை அவர்ஆளவும், ஆட்சி செய்யவும் அனுமதிப்பது, என் சுய விருப்பத்தை எப்படி அச்சுறுத்துகிறது?
இந்த திட்டத்தைப் பற்றி
சார்லஸ் வெஸ்லியின் புகழ்பெற்ற கிறிஸ்மஸ் கீதமான "வா, நீ நீண்ட காலமாக எதிர்பார்த்த இயேசு" (“Come, Thou Long Expected Jesus,”) என்ற பாடலில், ஏங்கும் ஒவ்வொரு இருதயத்திற்கும் இயேசுவே மகிழ்ச்சி என்று பாடுகிறோம். இந்த வருகை, எவ்வாறு மனித நிகழ்வுகளின் தெய்வீக ஒத்திசைவு மற்றும் அவரது வருகைக்கான பல்வேறு பதில்கள், நம் இருதயங்களின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டறியவும். ராஜாக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் முதல் மேய்ப்பர்கள் மற்றும் கன்னிகைகள் வரை, இயேசுவின் வருகை நாம் எதை பொக்கிஷமாக கருதுகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் இருதயத்தின் மகிழ்ச்சியை இந்த கிறிஸ்துமஸில் கண்டுபிடியுங்கள்.
More