ஏங்கும் ஒவ்வொரு இதயமும்மாதிரி

Every Longing Heart

7 ல் 3 நாள்

ஒரு தாழ்மையான பணிப்பெண்ணும் & அவளுடைய அற்புதமான கடவுளும்

அவள் முக்கியமற்ற நாசரேத் நகரத்தைச் சேர்ந்த திருமணமாகாத மற்றும் விரைவில் கர்ப்பமாக இருக்கும் இளம்பெண். அவளது சொந்த கூற்றின்படி, அவள் எதுவுமில்லாதவள். ஆனாலும், காபிரியல் தேவ தூதன் அவளுக்கு சொன்ன செய்தி வேறுவிதமாகச் இருந்தது. கடவுள் அவளை மிகவும் ஆசீர்வதித்தார் என்றும், அவள் பெண்களிலேயே மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகக் கருதப்படுவாள் என்றும் அவளிடம் கூறினார்…எப்போதும்.

அவளுடைய புரிந்துகொள்ள முடியாத பாக்கியம் என்னவென்றால், அவள் கர்ப்பமாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவர் மேசியா, அவருடைய ராஜ்யத்திற்கு முடிவே இருக்காது. ஆனால் எல்லாவற்றிலும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, அவள் கன்னியாக மேசியாவை பெறுவாள் என்ற விவரம்.

எதிர்பாராத கர்ப்பம் பற்றிய செய்தியால் பீதி அடைய மரியாளுக்கு காரணம் இருந்தது. அவளுடைய நிலைமையை விளக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது மற்றும் அது சமூக ரீதியாக அவளை அழிக்கக்கூடும். ஆனால் இந்த செய்திக்கு மரியாளின் பதில், அதை வழங்கிய தூதனைப் போலவே உலகத்திற்கு அப்பாற்ப்பட்டதாக இருந்தது. எதுவுமே அவளை அசைக்க முடியாத அளவுக்கு கடவுளுடைய வார்த்தையின் உண்மைகளில் முழுமையாக மூழ்கியிருந்த ஒரு இளம் இதயத்தை அது வெளிப்படுத்தியது.

மரியாளின் கீதம், அல்லது The Magnificat, கடவுள் அவளுக்காகவும் இஸ்ரவேல் மற்றும் வருங்கால சந்ததியினருக்காகவும் செய்தவற்றிற்காக ஆராதனையால் நிரம்பி வழிந்தது. நீங்கள் அதைப் படிக்கும்போது, ​​மரியாளுடைய இருதயம் எப்படி ஆராதிக்கவும் நன்றி செலுத்தவும் ஆசைப்பட்டது என்பதைக் கவனியுங்கள்.

1. அவள் நிகழ்காலத்திற்கு நன்றி கூறினாள்

பாராட்டுகளில் மூழ்கிய மரியாள், கடவுளை இருபது தடவைகளுக்கு மேல் தன் பாடலில் குறிப்பிட்டார், மேலும் எட்டு முறை அவர் செய்ததற்காக அவரைப் புகழ்ந்தார். அவளுடைய இதயம் அவளுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் கடவுள் கிரியை செய்வதைக் காண்பதற்கு இசைவாக இருந்தது. கர்த்தருடைய நாமத்தை பெரிதாக்குவது அல்லது மேன்மை படுத்துவதுதான் மரியாளின் மிகப்பெரிய ஆசை.

2. அவள் எதிர்காலத்திற்கு நன்றி கூறினாள்

அவள் பெற்ற மகனின் மூலம் எதிர்காலத்தை காப்பாற்ற கடவுள் செய்து கொண்டிருந்த வேலையை மரியாள் பார்த்தாள். தனது இளமை பருவத்தில் கூட, கடவுள் சாதாரண சமூக அமைப்பைத் தூக்கி எறிந்து, தன்னைப் போன்ற ஒரு தாழ்த்தப்பட்ட பணிப்பெண்ணை உயர்த்துவதை அவள் உணர்ந்தாள்.

3. அவள் கடந்த காலத்திற்கு நன்றி கூறினாள்

வேதாகமத்தை முழுமையாகப் புரிந்துகொண்டதால், இஸ்ரவேலுக்காக கடவுள் ஏற்கனவே செய்த எல்லாவற்றின் வெளிச்சத்திலும் மரியாள் தனது குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பார்க்க முடிந்தது. ஆபிரகாமிய உடன்படிக்கைக்குத் திரும்பிய கடவுளின் பெரும் மீட்புக் கதையில் அவள் தன் பங்கைக் கண்டாள். கடவுள் கடந்த காலத்தில் உண்மையுள்ளவராக இருந்தார், அவளுடைய அறியப்படாத எல்லாவற்றின் மத்தியிலும் தொடர்ந்து உண்மையாக இருப்பார்.

தான் இறைவனின் தாழ்ந்த பணிப்பெண் என்பதை முதலில் ஒப்புக்கொண்டவர் மரியாள். ஆனால் கடவுள் அவளது நிலைக்கு அப்பால் பார்த்தார் மற்றும் எந்தவொரு பெண்ணுக்கும் அவர் வழங்காத மிக அழகான பாக்கியத்தை அவளுக்குக் கொடுத்தார்.

ஏவாள் முதல், நாம் அனைவரும் பாவத்தின் சாபத்தில் பிறந்திருக்கிறோம், ஆனால் மரியாளின் மகன் விதிவிலக்காக இருந்தார். மரியாள் பாவமற்றவளாக இருந்ததால் அல்ல, மாறாக இயேசு பரிசுத்த ஆவியால் பிறந்ததால்.

மரியாள் ஆசீர்வதிக்கப்பட்டாள், அவளுடைய பாடல் நன்றி மற்றும் பிரமிப்பால் நிரம்பி வழியும் இளம் இதயத்தை வெளிப்படுத்தியது. அவளுடைய வார்த்தைகளைக் கருத்தில் கொண்டு, அவளுடைய மனத்தாழ்மை மற்றும் கடவுளுக்கு முன்பாக அவளுடைய தகுதியற்ற தன்மையை அங்கீகரிப்பது என்பவற்றை மாதிரியாக கொண்டு இருக்க முயலுங்கள். நம் இதயத்தின் உண்மையான ஏக்கம் மரியாளைப் போலவே கடவுளையும் காண்போம் என்பதாக இருக்க வேண்டும்

  • உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்காக கடவுளுக்கு நன்றி. கடந்த காலத்தில் அவர் உங்களிடம் இருந்த உண்மைத்தன்மை இப்போதும் எதிர்காலத்திலும் அவர்மீது உங்கள் நம்பிக்கையை எவ்வாறு அதிகரித்தது?
  • உங்கள் பாசத்தை கடவுள் எப்படி தம்மை அதிகமாக நேசிப்பதற்காக மறுசீரமைக்கிறார்?
  • இன்று அதிக நன்றியை வெளிப்படுத்த கடவுள் உங்களை எவ்வாறு அழைக்கிறார்?

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Every Longing Heart

சார்லஸ் வெஸ்லியின் புகழ்பெற்ற கிறிஸ்மஸ் கீதமான "வா, நீ நீண்ட காலமாக எதிர்பார்த்த இயேசு" (“Come, Thou Long Expected Jesus,”) என்ற பாடலில், ஏங்கும் ஒவ்வொரு இருதயத்திற்கும் இயேசுவே மகிழ்ச்சி என்று பாடுகிறோம். இந்த வருகை, எவ்வாறு மனித நிகழ்வுகளின் தெய்வீக ஒத்திசைவு மற்றும் அவரது வருகைக்கான பல்வேறு பதில்கள், நம் இருதயங்களின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டறியவும். ராஜாக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் முதல் மேய்ப்பர்கள் மற்றும் கன்னிகைகள் வரை, இயேசுவின் வருகை நாம் எதை பொக்கிஷமாக கருதுகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் இருதயத்தின் மகிழ்ச்சியை இந்த கிறிஸ்துமஸில் கண்டுபிடியுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியமைக்காகக் கரா ரே க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://cara-ray.com