ஏங்கும் ஒவ்வொரு இதயமும்மாதிரி

Every Longing Heart

7 ல் 2 நாள்

ஒரு பயங்கர தேவதூதனும் ஊமையான பதிலும்

சீட்டு தன் பெயருக்கு விழுந்ததை சகரியாவால் நம்ப முடியவில்லை. ஆசாரியனாய் ஆயிரமாயிரம் மிருகங்களை பலியிட்டு இருக்கிறான், ஆனால் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பலியிட்டதில்லை. ஆழ்ந்த மூச்சு எடுத்துக் கொண்டு மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைந்தான்

அவன் எடுத்து சென்ற சிறிய தீபம் அறையெங்கும் நிழல் வீசியது. அவனது வலதுபுறம் சமூகத்து அப்பம் வைக்கும் மேசையையும், இடதுபுறம் பொன் குத்து விளக்கயையும், முன்புறம் தூபபீடத்தையும் கண்டான். பலிபீடத்தில் தூபவர்க்கத்தை ஏற்றி, பிரார்த்திக்க தலை குனிந்தான். அவன் தன் கண்களை திறந்த போது, அவனைஒரத்தில் கண்டான்.

நிழலில் அவன் ஒருபோதும் கண்டிராத கம்பீரமான பயங்கர தோற்றம் உடையதை கண்டான். அது காபிரியேல் தூதன்.

>p>காபிரியேல் பயங்கர தோற்றத்துடன் இருந்த போதிலும், அவர் பயப்பட வேண்டாம், நற்செய்தி உண்டு என்றார். சகரியா, எலிசபெத்தின் குழந்தைக்கான விண்ணப்பம் கேட்கப்பட்டது, அவன் கர்த்தரின் பார்வையில் பெரியவனாயிருப்பான். இந்த நீண்ட கால விண்ணப்பத்தின் குழந்தை மேசியாவின் முன்னோடியாயிருப்பான்.

ஒரு பிரச்சனை என்னவென்றால் சகரியாவும் எலிசபெத்தும் குழந்தை பெறும் வயதை கடந்தவர்கள். அதினால் சகரியா, இது எப்படியாகும்? என்று காபிரியேலைக் கேட்டான். தேவதூதன் “நான் தேவசந்நிதானத்தில் நிற்கும் காபிரியேல் என்பவன்” என்று மறுமொழி கூறினான். சகரியாவே, நீ நம்புவதற்கு என் பிரசன்னம் போதாதா என்று கேட்பது போலிருந்தது.

சகரியா, மெய்யாகவே கர்த்தர் தன் விண்ணப்பங்களை நிறைவேற்றுவார் என்று அறிந்திருந்தான், ஆகிலும் தன் எதிர்பார்ப்பை பாதுகாக்கும் படி, அவர் என்ற முடிவுக்கு வந்து விட்டான்

காபேரியேல், சகரியாவின் அவிசுவாசத்தினால் அவனை ஊமையாக்கினான். எல்லா அவிசுவாசமும் முட்டாள்தனமானதுதான். கர்த்தருடைய வார்த்தையில் சொல்லப்பட்டவைகளை நாம் விசுவாசிக்காவிட்டால், அது ஆவிக்குரிய ஊமைத்தனம்தான்.

ஆரம்பத்தில் சகரியா விசுவாசிக்காவிட்டாலும், அவனின் காலக்கெடு அதை சரியாக புரிந்து கொள்ள உதவியது. அவனின் நாவு கட்டவிழ்க்கப்பட்ட போது, அவனது உதடுகள் நன்றியால் நிரம்பி வழிந்தது. அவனுக்கு பேச்சு வந்தபோது, அவன் அவிசுவாசத்திற்கு அல்ல, கர்த்தரை ஆசிர்வதிக்க பயன்படுத்தினான்.

சகரியாவும், எலிசபெத்தும் கரத்தர் அவர்களின் இருதய வாஞ்சைக்கு ‘இல்லை’ என்ற பதில் தந்தார் என்று நினைத்தனர், ஆனால் பதில் ‘இதுவரை இல்லை’ என்பது தான். தொடர்ந்து ஜெபியுங்கள், தொடர்ந்து விசுவாசியுங்கள், தொடர்ந்து கீழ்படியுங்கள்! நிறைவேற வேண்டிய உங்கள் விண்ணப்பங்களுக்காக கர்த்தர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியாது

  • வெளிப்படுத்தப்பட்ட எந்த கர்த்தருடைய வார்த்தையை நான் நம்பவில்லை?
  • எந்த விண்ணப்பத்தை நான் விட்டுவிட எண்ணுகிறேன்?
  • நான் விட்டுவிட நினைக்கும்போது, தொடர்ந்து நம்புவதற்கு சகரியா மற்றும் எலிசபெத்தின் குறைவுள்ள விசுவாசத்தை நான் எவ்வாறு முன்மாதிரியாக கொள்ள முடியும்?

    நாள் 1நாள் 3

    இந்த திட்டத்தைப் பற்றி

    Every Longing Heart

    சார்லஸ் வெஸ்லியின் புகழ்பெற்ற கிறிஸ்மஸ் கீதமான "வா, நீ நீண்ட காலமாக எதிர்பார்த்த இயேசு" (“Come, Thou Long Expected Jesus,”) என்ற பாடலில், ஏங்கும் ஒவ்வொரு இருதயத்திற்கும் இயேசுவே மகிழ்ச்சி என்று பாடுகிறோம். இந்த வருகை, எவ்வாறு மனித நிகழ்வுகளின் தெய்வீக ஒத்திசைவு மற்றும் அவரது வருகைக்கான பல்வேறு பதில்கள், நம் இருதயங்களின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதைக் கண்டறியவும். ராஜாக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் முதல் மேய்ப்பர்கள் மற்றும் கன்னிகைகள் வரை, இயேசுவின் வருகை நாம் எதை பொக்கிஷமாக கருதுகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது. உங்கள் இருதயத்தின் மகிழ்ச்சியை இந்த கிறிஸ்துமஸில் கண்டுபிடியுங்கள்.

    More

    இந்த திட்டத்தை வழங்கியமைக்காகக் கரா ரே க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://cara-ray.com

    சம்பந்தப்பட்ட திட்டங்கள்