தேவனின் சமாதானம்மாதிரி

God's Peace

4 ல் 4 நாள்

திட நம்பிக்கை தரும் சமாதானம்.

தேவனுடனான உரையாடல்.
நிலையான, உறுதியான, தடுமாறாத, நம்பகமான, திடமான - இவை தேவனைக் குறித்துக் கூறப்படும் வார்த்தைகள். நீங்கள் ஜெபம் பண்ணும்பொழுது தேவனுடைய இந்த குணாதிசயங்களுக்காக அவரை மகிமைப் படுத்துங்கள்.

தொடக்கமாக
இரண்டு பாத்திரங்களை மணலைக் கொண்டு நிரப்புங்கள். ஒன்றை தண்ணீர் சேர்த்து இறுக்கமாகவும் மற்றொன்றைத் தளரலாகவும் நிரப்புங்கள். இரண்டின் மேலும் பொம்மை வாகனங்களைச் செலுத்துங்கள். எந்த வகையான மணலில் அந்த பொம்மை அதிக தூரம் போகிறது என்று பார்ப்பதே நம் நோக்கம்.

மேலும் தொடர
எப்படி உறுதியான மணலில் பொம்மை வாகனத்தைச் செலுத்துவது சுலபமாக இருக்கிறதோ, அப்படியே உறுதியான நம்பிக்கை நம் வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகளை எளிமையாகக் கடந்து செல்ல நமக்கு உதவுகிறது. நம்பிக்கை அநேக ஆசிர்வாதங்களை நமக்கு அளிக்கிறது, சமாதானம் உட்பட. ஆனால், தேவன் மேல் உள்ள நம்பிக்கையை நாம் இழக்கும் பொழுது, தளரலான மணலை போல் மாறுகிறோம்; கடினமான நேரங்களில் நாம் புதையுண்டு அவற்றை மேற்கொள்ள முடியாமல் கவலைக்குள்ளாகிறோம். அதனால் தான் தேவன் நம்மை அவருக்கு இன்னும் அருகில் சேர்த்துக் கொள்ளவும், நம் நம்பிக்கையை அதிகப்படுத்தவும் நாம் ஜெபிக்க வேண்டும்.

கலந்துரையாடலுக்கான கேள்விகள்
1. உங்கள் நம்பிக்கை உறுதியடைந்த ஒரு நேரத்தையும், எது உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியது என்றும் விவரியுங்கள்.
2. தேவனுடைய சமாதானத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அது எப்படி இருந்தது?
3. சமாதானத்தையும் எல்லா நன்மையான காரியங்களையும் உண்டாக்கினவர் தேவனே. அவரிடம் உங்கள் நம்பிக்கையைப் பலப்படுத்தும்படி கேட்டிருக்கிறீர்களா? உங்களுக்குச் சமாதானம் அருளும்படி கேட்டிருக்கிறீர்களா?

வேதவசனங்கள்

நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

God's Peace

தேவனுடைய வார்த்தை நமக்கு அவர் "எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்" தருகிறார் என்று கூறுகிறது. இந்த 4 நாள் வாசிப்பு திட்டத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகளும் இச்சமானத்தை உங்கள் வாழ்க்கையின் எந்த எந்த பகுதிகளில் அனுபவிக்கலாம் என்பதைக் குறித்துப் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு ஜெபக்குறிப்பும், சிறிய வேத வாசிப்பு பகுதியும் அதன் விளக்கமும், ஒரு செயல்முறை நடவடிக்கையும், கலந்துரையாடலுக்கான கேள்விகளும் கொடுக்கப்படும்.

More

We would like to thank Focus on the Family for providing this plan. For more information, please visit: www.FocusontheFamily.com