தேவனின் சமாதானம்மாதிரி

God's Peace

4 ல் 2 நாள்

தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதினால் வரும் சமாதானம்.

தேவனுடனான உரையாடல்.
தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தில் உங்களுக்கு எவையெல்லாம் பிடிக்கும் என்று தேவனிடம் கூறுங்கள். ஒரு குறிப்பிட்ட வசனமோ, கதையோ உங்களுக்கு ஏன் பிடிக்கும் என்று தேவனிடம் கூறி அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

தொடக்கமாக
உங்கள் அம்மாவோ அப்பாவோ அருகில் இருக்கும் பொழுது, ரோலர் ஸ்கேட்டுகள் அல்லது பெரிய காலணிகளை அணிந்து உங்கள் அறையில் நடக்க முயற்சி செய்யுங்கள். தடுமாறாமலோ, கீழே விழாமலோ எவ்வளவு தூரம் உங்களால் நடக்க முடிகிறது? இவற்றை வீட்டிற்குள் அணியக் கூடாது என்ற விதி சரி என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? விவரித்துக் கூறுங்கள்.

மேலும் தொடர
சங்கீதம் 119:165 ல் சங்கீதக்காரன் "உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை." என்று கூறுகிறார். தேவனுடைய வார்த்தை நமக்குக் கூறும் கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்கும் பொழுது, நமக்கு மிகுந்த சமாதானத்தைத் தருவேன் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணுகிறார். தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிதல் நம் தவறுகளைக் குறைக்க உதவுகிறது, மேலும் நாம் தடுமாறுவதைக் குறித்தோ அல்லது நாம் எடுக்கும் தவறான முடிவுகளினால் காயப்படுவதைக் குறித்தோ கவலைப்படத் தேவையில்லை. தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நாம் வாழும்பொழுது தேவனுடைய சமாதானம் நம் இருதயங்களை ஆளுகிறது.

கலந்துரையாடலுக்கான கேள்விகள்
1. சாலையைச் சரியான இடத்தில் கடப்பது, பள்ளியில் வகுப்பறைகளின் குறுக்கே ஓடாமல் இருப்பது போன்ற நீங்கள் கடைப்பிடிக்கும் சில விதிகளைக் குறித்துச் சிந்தியுங்கள். ஒருவேளை அவைகளை நீங்கள் கடைப்பிடிக்கவில்லை என்றால் நீங்கள் காயப்பட வாய்ப்பிருக்கிறதா? விவரித்துக் கூறுங்கள்.
2. தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததினால் நீங்கள் சமாதானத்தை உணர்ந்திருக்கிறீர்களா?
3. நீங்கள் தவறு செய்த பிறகு தேவனுடைய சமாதானத்தை எப்படித் திரும்பப் பெறுவீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

God's Peace

தேவனுடைய வார்த்தை நமக்கு அவர் "எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்" தருகிறார் என்று கூறுகிறது. இந்த 4 நாள் வாசிப்பு திட்டத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகளும் இச்சமானத்தை உங்கள் வாழ்க்கையின் எந்த எந்த பகுதிகளில் அனுபவிக்கலாம் என்பதைக் குறித்துப் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு ஜெபக்குறிப்பும், சிறிய வேத வாசிப்பு பகுதியும் அதன் விளக்கமும், ஒரு செயல்முறை நடவடிக்கையும், கலந்துரையாடலுக்கான கேள்விகளும் கொடுக்கப்படும்.

More

We would like to thank Focus on the Family for providing this plan. For more information, please visit: www.FocusontheFamily.com