தேவனின் சமாதானம்மாதிரி

God's Peace

4 ல் 3 நாள்

சமாதானமான இல்லம்.

தேவனுடனான உரையாடல்.
உங்கள் குடும்பத்தில் யாரையாவது நீங்கள் இரக்கமின்றி நடத்தியிருந்தாலோ அல்லது அவர்கள் உணர்வுகளைக் காயப்படுத்தி இருந்தாலோ தேவனிடம் மன்னிப்பு கேளுங்கள். பின்னர், உங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் உங்களுக்கு இருக்கும் உறவுக்காகத் தேவனுக்கு நன்றி கூறுங்கள்.

தொடக்கமாக
பிரகாசமான வண்ணங்கள் கொண்டு உங்கள் சூரிய உதயத்தோடும், பறவைகளோடும், பரிசுகளுடனும், உங்கள் குடும்பத்தாருடனும் உங்கள் வீட்டை வரையுங்கள். இப்போது, கருமையான வண்ணங்களைக் கொண்டு புயல் மேகங்கள் சூழ்ந்த மற்றும் ஒரு வீட்டை வரையுங்கள். அதில் சண்டையிடும் சகோதரர்களையும் வரையுங்கள். இவ்விரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இவற்றில் ஒரு படத்தில் மட்டும் நீங்கள் சமாதானத்தை ஏன் உணர்கிறீர்கள் என்று கூறுங்கள்.

மேலும் தொடர
ஒரு குடும்பம் என்பது பல வகையான குணாதிசயங்களும் உணர்ச்சிகளும் கொண்ட மனிதர்களைக் கொண்டது. சில சமயங்களில் அவர்கள் சந்தோஷமாய் இருப்பார்கள் சில நேரங்களில் கோவமாய் இருப்பார்கள். ஒருவர் ஒரு நேரத்தில் எப்படி உணருகிறார் என்பதைப் பொறுத்து அந்த வீட்டின் சமாதானம் மாறக்கூடாது. ரோமர் 12:18ல் "கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்." என்று பவுல் கூறுகிறார். எல்லா மனுஷரோடும் என்று கூறும்பொழுது, நம் குடும்பத்தாரும் அதில் அடங்குவார்கள். சில நேரங்களில் நம் குடும்பத்தாரோடு ஒற்றுமையாய் இருப்பது மிகக் கடினமான காரியமாகத் தோன்றும். ஆனால், நீதிமொழிகள் 17:1 சமாதானமான குடும்பமே மெய்யான பொக்கிஷம் என்று கூறுகிறது. "சண்டையோடு கூடிய வீடு நிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்."

கலந்துரையாடலுக்கான கேள்விகள்
1. உங்கள் குடும்பத்தாரோடு நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
2. உங்கள் குடும்பத்தில் ஒருவர் கோவமாக இருந்தாலோ வருத்தமாக இருந்தாலோ நீங்கள் எப்படி சமாதானம் பண்ணுவீர்கள்?
3. நீங்கள் எல்லா காரியங்களிலும் உடன்படாத போதும் எப்படி உங்கள் இல்லத்தைத் தேவனுடைய சமாதானதால் நிரப்ப முடியும்?

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

God's Peace

தேவனுடைய வார்த்தை நமக்கு அவர் "எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்" தருகிறார் என்று கூறுகிறது. இந்த 4 நாள் வாசிப்பு திட்டத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகளும் இச்சமானத்தை உங்கள் வாழ்க்கையின் எந்த எந்த பகுதிகளில் அனுபவிக்கலாம் என்பதைக் குறித்துப் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு ஜெபக்குறிப்பும், சிறிய வேத வாசிப்பு பகுதியும் அதன் விளக்கமும், ஒரு செயல்முறை நடவடிக்கையும், கலந்துரையாடலுக்கான கேள்விகளும் கொடுக்கப்படும்.

More

We would like to thank Focus on the Family for providing this plan. For more information, please visit: www.FocusontheFamily.com