தேவனின் சமாதானம்மாதிரி

God's Peace

4 ல் 1 நாள்

பாதுகாப்பில் சமாதானம்.

தேவனுடனான உரையாடல்.
உங்கள் அன்றாட வாழ்க்கையில் எவை உங்களுக்குப் பாதுகாப்பு தருகின்றன? நீங்கள் பாதுகாப்பை இருக்கும் பொழுது ஒரு வகையான சமாதானத்தை உணருகிறீர்கள். உங்களுக்குப் பாதுகாப்பைத் தரும் - இருக்கைவார்கள், நம் கதவுகளில் இருக்கும் பூட்டுகள், நம் பெற்றோர், காவல் துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் அபாய அறிவிப்பு கருவிகளுக்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்லுவோம்.

தொடக்கமாக
உங்கள் வீட்டில் நீங்கள் சமைக்கும்பொழுது ஏதாவது கருகிவிட்டால் யாரெல்லாம் அலறுவீர்கள்? (நீங்கள், உங்கள் அம்மா, உங்கள் அப்பா, புகை அபாய அறிவிப்பு கருவி)

மேலும் தொடர
அந்த காலத்தில் எங்கேயாவது தீ பற்றியிருந்தால், தெருவில் ஒருவர் உடுக்கை போன்ற ஒரு கருவியைக் கொண்டு அறிவிப்பார்கள், சில நேரங்களில் அந்த சத்தம் பலருக்குக் கேட்பதில்லை. ஆனால் இப்பொழுதோ, நம் வீட்டில் இருக்கும் சிறு நெகிழிக் கருவிகள் நமக்கு அறிவிக்கின்றன. நாமும் எந்த கவலையும் இன்றி சமாதானமாகத் தூங்க முடிகிறது. தேவன் நமக்கு இதற்கும் மேலான ஒரு அறியச் சமாதானத்தைத் தருகிறார். இயேசு யோவான் 14:27ல் "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக." என்று உரைக்கிறார்.

கலந்துரையாடலுக்கான கேள்விகள்
நீங்கள் எதைக் குறித்துப் பயப்படுகிறீர்கள்?
நீங்கள் பயப்படும்பொழுது தேவனையும் அவர் கொடுக்கும் சமாதானத்தையும் குறித்து நினைப்பீர்களா?
தேவனின் சமாதானத்தை இன்று நீங்கள் எப்படி அனுபவிப்பீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

God's Peace

தேவனுடைய வார்த்தை நமக்கு அவர் "எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்" தருகிறார் என்று கூறுகிறது. இந்த 4 நாள் வாசிப்பு திட்டத்தில் நீங்களும் உங்கள் குழந்தைகளும் இச்சமானத்தை உங்கள் வாழ்க்கையின் எந்த எந்த பகுதிகளில் அனுபவிக்கலாம் என்பதைக் குறித்துப் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு ஜெபக்குறிப்பும், சிறிய வேத வாசிப்பு பகுதியும் அதன் விளக்கமும், ஒரு செயல்முறை நடவடிக்கையும், கலந்துரையாடலுக்கான கேள்விகளும் கொடுக்கப்படும்.

More

We would like to thank Focus on the Family for providing this plan. For more information, please visit: www.FocusontheFamily.com