நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி
ஆவிக்குரியப் பசி
நம்முடைய பசி மாறுவதை நம்மால் நன்றாக உணர முடியும். ஏனெனில் அது நம்மிடத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும். தேவனுக்கான நமது பசி மாறி உலகத்திற்கான பசி வருமாயின், அது இவ்வுலக காரியங்களை பிறப்பிக்கும். மாறாக நமது பசி தேவனுக்காக இருப்பின் தேவனுடைய காரியங்கள் அங்கே கனிகளாயிருக்கும்.
உங்களுடைய வாழ்வில் இருந்து எது உற்பத்தியாகிறது? உங்கள் நடை, பேச்சு, செயல், ஊக்கம், விருப்பம் போன்ற அன்றாட செயல்களில் இருந்து எது வருகிறது? பெரும்பாலும் நீங்கள் இவ்வுலகத்தின் காரியங்களை கனியாகக் கொண்டு வருவீர்களானால், உங்களுடைய பசி ஆவிக்குரிய பசியிலிருந்து உலகப் பசியாக மாறிவிட்டது. நீங்கள் ஆவிக்குரியக் கனிகளை கொடுப்பீர்களானால் உங்களுடைய பசி ஆவிக்குரியப் பசியாக மாறிவிட்டது.
தனிப்பட்ட வாழ்க்கையிலும் வேலை ஸ்தலங்களிலும் எனது பசி வேத வாசிப்பிலும், ஜெபத்திலும், ஆராதனையிலும் இருக்கிறது எனில் எனது பசி சரி. எனது பசி இதைப்பற்றியது இல்லையெனில் அது சரியானது அல்ல.
வேதம் பசியைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.யோவான் 6:25-70ல், இயேசு தன்னை ஜீவ அப்பம் என்று சொல்லுகிறார். அப்படி என்றால் அர்த்தம் என்ன? அவருடைய சீஷர்களும் சற்றே குழம்பினர். இயேசு, நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் ஊட்டச்சத்துக்கு தானே ஆதாரம் என்றார். அவர் சொல்லுகிறார் நாம் ஆவிக்குரிய ரீதியாக பசியில் இருக்கும்போது அவரிடம் சென்று நிரப்பப்படலாம் என.
ஏசாயா 55:1-2ல், இது ஒப்பமை பயன்படுத்தப்படுவதை காணலாம். ஒருவர் பணம் இல்லாதவராக இருந்தாலும் அவர் பசியுடையதாகத் துணி இருந்தால் தேவனிடத்தில் வந்து உண்ணலாம் பருகலாம். அவர்களிடத்தில் பணம் இல்லை என்றால் இது எப்படி சாத்தியம்? அவர்களது பசியும் தாகமும் ஆவிக்குரிய வாழ்விற்குரியது – தேவ ராஜ்யம் கட்டணம் வசூலிப்பதில்லை!
நமது ஆவிக்குரிய அப்பத்திற்காக நமது பசி திரும்ப வேண்டும். தேவனுடைய காயங்களுக்காக பசியே நமது தேவை. அன்றாட காரியங்கள் மூலமாக நாம் திருப்தி அடைவதை தூக்கி எறிய வேண்டும். தேவ வார்த்தை, ஜெபத்தில், ஆராதனையில் இருக்கும் ஊட்டச்சத்தை நாட வேண்டும். தேவப்பிரசன்னத்திற்காக நமது வயிறு கூக்குரல் இட வேண்டும். நாம் இதை செய்யும் போது நம்முடைய ஆத்துமா திருப்தி அடையும், மேலும் நமது வாழ்வு மாறும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More