நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

தேவ பிரசன்னத்தை அனுபவித்தல்
இத்திட்டத்தின் இரண்டாம் வாரத்தை நிறைவு செய்கிறோம், தேவ பிரசன்னத்தை அனுபவித்தலில் சற்று கவனம் செலுத்துவோம்.
புது வீடு, உயர்வு, கனம் அல்லது கனம் போன்ற எதையும் காட்டிலும் தேவ பிரசன்னத்தை வாஞ்சிக்கும்போது, நாம் அவரைத் தேடும் எவ்விடத்திலும் தோன்றுவார்.
நாம் தேவப் பிரசன்னத்தைப் பழகும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். இன்றைய சபைகளில் இவ்வொழுக்கம் தொலைந்து போயிற்று. தேவனின் வெளிப்பட்ட பிரசன்னத்தில் பலருக்கு பழக்கமில்லை, ஏனெனில் அவர்களுக்கு அது என்னவென்றே தெரிவதில்லை. இன்றைய பெருநிறுவன ஆராதனை அமைப்புகளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆராதனை ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதிலே தான் கவனமாயிருக்கிறோம், தேவப் பிரசன்னம் நம்மை நிரப்புவதற்கு இடம் கொடுப்பதில்லை. தேவன் நமது நிபந்தனைகளுக்கு உட்பட்டவர் அல்ல.
நாம் யோவான் 14:21ற்கு திரும்பி செல்வோம். இந்த வசனத்தில், இயேசு சொல்கிறார், இயேசுவை நேசிக்கிறவன் பிதாவினாலும் நேசிக்கப்படுவான், இயேசுவும் தன்னை அவனுக்கு வெளிப்படுத்துவார் என்று!
யாத்திராகமம் 33:1-3 மற்றும் 12-16ல், இஸ்ரவேலை வழிநடத்த வேண்டிய வழிமுறைகளை கர்த்தர் மோசேக்கு கொடுத்தார். மோசே, தான் அந்த சவாலுக்கு ஏற்றவன் அல்ல என்று உணர்ந்து தேவனிடம் கேட்டபோது, தேவன், மக்களை நடத்த அவருடைய(தன்னுடைய) சமூகத்தை முன்பாக அனுப்புவதாகக் கூறினார். பழைய ஏற்பாட்டின் காலத்திலே பகலிலும் இரவிலும் தேவ சமூகம் அக்கினி ஸ்தம்பமாகவும் மேகஸ்தம்பமாகவும் காட்சியளித்தது. ஆனால் இன்று தேவன் தன்னை வித்தியாசமாக வெளிப்படுத்துகிறார். கிறிஸ்து தன்னையே பலியிட்டதின் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ணுவதினாலும், இப்பொழுது தேவன் தம்மை நமக்குள் வெளிப்படுத்துகிறார்.
தேவ பிரசன்னம் நமக்கு மிகவும் அத்தியாவசியமான தேவை. நம்மிடத்தில் இருப்பதெல்லாம் வாக்குத்தத்தம் மாத்திரம் என்றால், நாம் மிக முக்கியமான ஒன்றை தவற விட்டுவிட்டோம். தேவ பிரசன்னம் இல்லாமல் வாழும் ஒரு நாள் நமக்கு திருப்தியின்மையைத் தர வேண்டும். தேவப் பிரசன்னம் இல்லாத ஜெபத்தில், ஆராதனையில், மற்ற எந்த ஊழியத்திலும் நாம் திருப்தி அடையக்கூடாது. இயேசுவின் சமூகமே, பிரசன்னமே மாற்றத்தை உண்டு பண்ணக்கூடியது. நாம் இயேசுவை நேசித்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டால், தம்மை வெளிப்படுத்துவேன் என இயேசு சொல்லியிருக்கிறார். நாம் இதற்காகவே படைக்கப்பட்டோம்.
இந்த திட்டத்தைப் பற்றி

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நம்மில் தேவனின் திட்டம்

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

சீடத்துவம்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
