நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி
ஆவியானவரின் அபிஷேகம்
தேவனுடன் நாம் நடப்பதற்கு தடையாய் இருந்த, நம்முடைய வாழ்வை மாசுபடுத்துகிற காரியங்களை நம் வாழ்வில் இருந்து அகற்றினோம், நம் பயணம் அங்கே தொடங்கியது. அகற்றியப் பின்னர், அந்த வெறுமைகளை ஆவியானவராலும் ஆவியானவருடைய பிரசன்னதினாலும் நிரப்பினோம். இப்போது, ஆவியானவருக்குள் எப்பொழுதும் நிரம்பி வழிகிற வாழ்க்கை முறையை வாழ கற்றுக் கொண்டிருக்கிறோம். இப்பயணம், ஆவியானவர் நம்மோடு அன்றாடம் ஐக்கியப்பட விரும்புகிறார் என்பதைக் கண்டுபிடிப்பதிலும் மீண்டும் ஒரு முறை அறிந்து கொள்வதிலும் தொடங்கியது. இன்று, இதில் நான் கொஞ்சம் ஆழமாக போக போகிறோம்.
பழைய ஏற்பாட்டில் அநேக முறை, தண்ணீர் என்பது ஆவியானவரையும், ஆவியானவரின் கிரியைகளையும் சுட்டிக்காட்டியது. நாம் இந்த குறியீடுகளை நம் வாழ்வில் அப்பியாசப்படுத்தினால், நம்மால் இயங்கக்கூடிய ஆவியானவரின் பல்வேறு அளவுகளை நம் வாழ்வில் காண இயலும். நம்மில் சிலர் கணுக்கால் அளவு அபிஷேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். சிலர் முழங்காலளவு அபிஷேகத்தில் இயங்குகிறோம், சிலர் கழுத்தளவு அபிஷேகத்தில் இயங்குகிறோம். எனினும், தேவ நதியிலே சக்தி வாய்ந்த நீரோட்டமுடைய நதிகள் உண்டு, அங்கே நாம் நம்முடைய சுயமாய் இயங்கத் தேவையில்லை; மாறாக, அங்கே நாம் தேவ நதியின் போக்கிலேயே போக முடியும், இயங்க முடியும்.
1 யோவான் 2:27ல், ஆவியானவரின் அபிஷேகத்தை பற்றிய குறிப்பைப் பார்க்கிறோம்.
மீண்டும், அபிஷேகத்தை பற்றியக் குறிப்பை ஏசாயா 10:27ல் இஸ்ரவேலில் மீந்திருப்பவர்களை பற்றிய தீர்க்கதரிசனத்தின் நடுவில் காண்கிறோம். இப்பகுதியில், ஆவியின் அபிஷேகத்துக்கு மிகுந்த வல்லமை உண்டென்று காண்கிறோம். வேத வாக்கியம் சொல்வது போல, “நுகங்களை முறிக்கும் வல்லமை,” சுமைகளை நீக்கும் வல்லமை.
கணுக்கால் அளவு முழங்கால் அளவு அபிஷேகத்தில் இயங்கியது போதும் என்று தேவனிடம் அறிக்கையிட்டு, இன்னும் ஆழமான தண்ணீரிலே-அபிஷேகத்திலே மூழ்க வேண்டும் என்று கர்த்தரிடம் நாம் கேட்க வேண்டும். நாம், நம் சுய பலத்தில் இயங்க முடியாத, நீந்தத்தக்கதான நீரோட்டத்தை – பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைக் கேட்க வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More