நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

21 Days to Overflow

21 ல் 20 நாள்

விசுவாசமும் விசுவாசக்கிரியையும்

நிரம்பி வழிதல், விசுவாசத்தோடு தெய்வீகத்தில் செயல்படும். இது சாத்திய மற்றவர்களை சாத்தியப்படுத்தும். நாம் தேவன் மீது விசுவாசம் வைத்த தேவத் தன்மையோடு நடக்கும்போது இதுதான் நடக்கிறது.

நமக்கு விசுவாசமில்லை என்றால், நம்மால் தேவனை பிரியப்படுத்த முடியாது. நமக்கு தேவனோடுள்ள உறவு, நமது விசுவாசத்தைப் பொறுத்ததே. நாம் மறுபடியும் பிறக்கும்போது, மற்றவர்கள் நமக்கு கொடுக்கக்கூடிய ஏதோ ஒன்று நம்முடைய இரட்சிப்பை உறுதிப்படுத்த முடியாது. நாம் திருமுழுக்குப் பெற்றதாக சான்றிதழ் அளித்தாலும், அது ஒன்றுக்கும் உதவாது. நம்முடைய பாவத்தின் மன்னிக்கவும் நம்முடைய அநீதியை கழுவவும் தேவனுக்கு தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு அதிகாரம் உண்டு என்று நாம் வைக்கிற விசுவாசம் நம்முடைய இரட்சிப்பை உறுதிப்படுத்துகிறது. மறுபடியும் பிறப்பதற்காக நம்முடைய விசுவாசம் கிரியை செய்தது போல, நாம் தொடர்ந்து தேவனுக்காக வாழ நம்முடைய விசுவாசம் கிரியை செய்கிறது. இயேசு விடு ஒரு அன்றாட உறவு கொள்ள விசுவாசம் தேவைப்படுகிறது. ஜெபிக்க, சாட்சியாய் வாழ, கொடுக்க, ஊழியம் செய்ய, விசுவாசம் தேவைப்படுகிறது. தேவனோடான நமது உறவில் எல்லாமே விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே தான் விசுவாசம் இல்லாமல் தேவனைப் பிரியப்படுத்துவதுக் கூடாத காரியம்.

விசுவாசம் இல்லாமல் தேவனை நம்மால் பிரியப்படுத்த முடியாது என்று நான் கூறுவதை நீங்கள் நம்பவில்லையா? எபிரேயர் 11:6ஐப் பாருங்கள். தேவனை பிரியப்படுத்துவதற்கு விசுவாசமே முக்கியமானது!

எபிரேயர் 11ஆம் அதிகாரம் முழுவதும் மிகவும் அருமையான பகுதி, இது வேதாகமம் முழுவதிலும் இருந்து விசுவாசத்தை எடுத்துப் பேசுகிறது, விசுவாசம் என்றால் உண்மையிலே என்னவென்று பேசுகிறது. நோவா, ஆபிரகாமின் விசுவாசம், மோசே, யாக்கோபு என வேதாகம சம்பவங்களைப் பகுத்து, அதன் மூலம் தேவனில் விசுவாசம் வைப்பது என்னவென்று நமக்கு விவரிக்கிறது.

நற்செய்தி என்னவென்றால்,நம் எல்லாரிடத்திலும் விசுவாசம் இருக்கிறது. இதைப்பற்றி ரோமர் 12:3 சொல்கிறது. நாம் ஒவ்வொருவரும் தேவன் மேல் உள்ள இந்த விசுவாசத்தில் மேலும் வளர்க்க வேண்டும், தேவன் செய்யும் எல்லாவற்றிலும் அவரை விசுவாசிக்க வேண்டும்.

எப்பொழுதெல்லாம் இயேசு அவருடைய சீஷர்களைக் கடிந்து கொண்டாரோ, அங்கே பார்த்தால் அவர்களுடைய விசுவாசம் குறைந்த போதாகத்தான் இருக்கும். தேவ விசுவாசத்தை இப்படித்தான் பார்க்கிறார், விசுவாசம் குறைந்தால் தேவனால் கடிந்து கொள்ளப்படுவோம்.நாம் விசுவாசித்து வாழ வேண்டும் அந்த விசுவாசம் எப்பொழுது வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான் சோதனைகள் நம் வாழ்வில் வருகின்றன. தேவன் மட்டுமே சரிசெய்யக்கூடிய காரியங்களை நம்மிடம் வர தேவன் அனுமதிப்பதன் நோக்கம் இதுதான். இவை அனைத்தும் நம் நம்பிக்கையை அதிகரிக்கின்றன. இதன் மூலமாக தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகத் தன்மையை நம் வாழ்வில் அதிகமாக வெளிப்படுத்தகிறார்.

நீங்கள் தாக்கப்படவேண்டும் என்பதற்காக உங்கள் வாழ்வில் தாக்குதல்கள் வருவதில்லை. நீங்கள் யார் என்பதினால் தாக்கப்படுகிறதில்லை. மாறாக நீங்கள் யாராக மாறுகிறீர்கள் என்பதிற்காகவே தாக்கப்படுகிறீர்கள். எனவே, எதிராளி உங்கள் எதிர்காலத்தை அழிக்க உங்கள் நிகழ்காலத்தை தாக்குகிறான். இது உங்கள் விசுவாசத்திற்கு எதிரான தாக்குதல், உங்களுக்கான தேவ திட்டத்திலிருந்து உங்களைத் தடுக்கும் முயற்சி. நம்முடைய விசுவாசம் தூண்டப்பட்டு கட்டியெழுப்பப்படுவதை நாம் அனுமதித்தால், தாக்குதல்களைத் தடுத்து நமது எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும்.

வேதவசனங்கள்

நாள் 19நாள் 21

இந்த திட்டத்தைப் பற்றி

21 Days to Overflow

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஃபோர் ரிவர்ஸ் மீடியாவிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் விவரங்களுக்கு, காண்க: https://www.theartofleadership.com/