நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

தேவ அன்பில் நிலைத்து இருத்தல்
நேற்று, தேவனிடத்தில் அவர் மேலும், மனிதர் மேலும் உள்ள அன்பை அதிகரிக்கும்படியாக வேண்டிக் கொண்டோம். இன்று அந்த அதிகரித்த அன்பில் எப்படி நிலைத்திருப்பது என்று கற்றுக் கொள்ளப் போகிறோம்.
நிலைத்திருப்பது என்றால், அதற்குள்ளே வாழ்வது, அதற்குள்ளே வாசம் செய்வது. எப்படி நாம் ஒரு வீட்டினில் வாழ்கிறோமோ வாசம் செய்கிறோமோ அதே போல. அன்பு என்பது நாம் வசிக்கும் இடம். அன்பில் நிலைத்திருப்பது என்றால் அன்பில் நாம் வசிப்பதைக் கானலாம். நம்மைக் காண வேண்டுமானால், நம்மை அன்பில் கண்டடையலாம், நாம் அன்பில் நிலைத்திருந்தால். யோவான் 15 ஆம் அதிகாரம் அன்பில் நிலைத்திருப்பது என்பது எப்படி இருக்கும் என்று நமக்கு பல சக்தி வாய்ந்த உண்மைகளை சொல்கிறது.
யோவான் 15:7-9 தேவ அன்பில் நிலைத்திருப்பதின் வல்லமையைக் குறித்துப் பேசுகிறது. நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருக்கும் போது, நாம் தேவனிடத்தில் என்ன கேட்கிறோமோ அது நமக்கு அருளப்படும். இதை தேவன் அவரது மகிமைக்காக செய்கிறார். தேவப் பிள்ளைகள் அவரது வல்லமைக்கும், கிருபைக்கும், தயவுக்கும் சாட்சியாய் செழித்திருப்பதை காண தேவன் விரும்புகிறார்.
யோவான் 15:26, ஆவியானவர் செயல்ளைக் குறித்து பேசுகிறது. நமது இயலாமையில், குறைகள் மத்தியிலும் ஆவியானவர் தேவ நன்மையைக் குறித்து சாட்சி கொடுப்பார். குறை உள்ள நம்மை தேவன் ஏற்றுக் கொள்வதினாலும், தேவனே நம்மை பரிபூரணப்படுத்துவதாலும், நாம் தேவனுக்கு மகிமை செலுத்துகிறோம்.
நாம் அவருடைய அன்பில் நிலைத்திருக்கும் போது, ஆவியானவர் வந்து நமக்கு துணை செய்கிறார், நாம் நிரம்பி வழியும்படி நம்மை நிரப்புகிறார். நாம் அறியும் முன்னரே, நம்மை தடுக்கி விட்ட, தூக்கத்தை இழக்கசி செய்த, பின்வாங்க செய்த, நம்மை நாமே வெறுக்க செய்த காரியங்கள் இப்பொழுது நம்மேல் வல்லமை அற்றுதாகிவிடுகிறது, அந்த அளவுக்கு தேவ அன்பு நம்மில் கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. நாம் தேவ அன்பில் நிலைத்திருக்கும் போது வீழ்த்த முடியாதவர்கள் ஆகிவிடுகிறோம்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நம்மில் தேவனின் திட்டம்

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

சீடத்துவம்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
