நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி
தேவன் மேலிருக்கும் எனது அன்பை அதிகரித்தல்
லூக்கா 10:25-37ல், இரண்டு பிரச்சனைகளை இயேசு கையாள்கிறார். எல்லா கட்டளைகளையும் தீர்க்கதரிசனங்களையும் இரண்டே இரண்டு கட்டளைகளில் அடக்குவது மாத்திரமல்ல, தேவன் மேல் வைக்கும் அன்பையும் மற்ற மனிதர்கள் மேல் வைக்கும் அன்பையும் கூட அதில் இனைக்கிறார், அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.கேள்வி கேட்ட நபரிடம் வேதம் என்ன சொல்ல வருகிறது என்பதையும் கூறினார்: நாம் தேவனை நேசிக்க நேசிக்க மனிதரையும் நேசிப்போம். நாம் மனிதரிடம் எந்த அளவு தயவு காண்பிக்கிறோமோ அந்த அளவு நாம் தேவன் மேல் வைத்திருக்கிறோம் நேசத்தை செயல்படுத்தி காண்பிக்கிறோம். நாம் இப்படி செய்யும்போது ஆவியானவரால் நிரப்பப்பட்டிருப்போம், மேலும் நாம் அன்பில் நடக்க தவறுவதில்லை.
ஒருவருடைய இனத்தினாலோ, அவருடைய ஜாதியினாலோ, அல்லது அவர்கள் நமக்கு என்ன செய்தார்கள் என்பதினாலோ, அவர்கள் நம்மைப் பற்றி என்ன சொன்னார்கள் என்பதினாலோ நாம் அவர்களை வெறுத்தால், வேதம் சொல்கிறது நாம் கொலை பாதகர் என்று. நமக்கு நன்றாய் தெரியும் கொலைகாரர்களுக்கு தேவ ராஜ்யத்தில் இடம் இல்லை என்று. நாம் ஆவியானவரால் நடத்தப்பட வேண்டுமானால் அன்பில் நடக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள் எல்லா கட்டளைகளும் அன்பை மையப்படுத்தியே உள்ளது.
இன்னும் ஒரு முறை1 யோவான் 2:15-17ஐப் பார்ப்போம், இத்திட்டத்தில் ஏற்கனவே ஒரு முறை இந்த வசனத்தை வாசித்திருக்கிறோம. இந்த வசனங்கள் தேவனை நேசிப்போரைப் பற்றியும் உலகத்தை நேசிப்போரைப் பற்றியும் பேசுகிறது. இரண்டுத் தனிப் பிரிவுகள் உள்ளது என்பதை கவனியுங்கள். இந்த உலகத்தின் ஆசைகளுக்கும், பறந்து போகின்ற அதின் இச்சைகளுக்கும் சாய்ந்து போகிறவர்களிடத்தில் பிதாவின் அன்பு இல்லை என்பதை இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது.
கடைசியாக, யோவான் 14:21 நாம் தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவது என்று காண்பிக்கிறது – அவருடைய கட்டளைகளை கை கொள்வதின் மூலமாக. நாம் அவருடைய கட்டளைகளைக் கை கொள்ளும்போது அவருக்கு மரியாதை செலுத்துகிறோம், நம்மிடத்தில் உள்ள பயபக்தியை காண்பிக்கிறோம், மேலும் அவரை நாம் நேசிக்கிறோம்.
ஆராதனை முக்கியமானது, ஆனால் தேவனை நமது அன்றாட வாழ்வில் நேசிப்பது ஞாயிறு காலை மாத்திரம் அவரது நாமத்தை ஆராதிப்பதை காட்டிலும் முக்கியமானது. இயேசுவின் கட்டளைகளை நாம் கடைபிடிக்க வேண்டும், அவர் நேசிக்கும் காரியங்களை நாம் நேசிக்க வேண்டும், ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூர வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More