நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

வீணான வாழ்வை நீக்குதல்
நமது வாழ்வில் கவனமாக வாழும்படி அறிவுறுத்தப்படுகிறோம்,வீணாக வாழும்படி அல்ல. வீணான வாழ்க்கை என்பது நம்மை நாமே மகிமைப்படுத்த வாழும் வாழ்க்கை. தேவனுடைய திட்டத்திற்காக அல்லாமல் நமது ஆசைகளுக்காக, நமது காரியங்களுக்காக பாடுபடும் வாழ்க்கை என்பது வீணான வாழ்க்கையே. ஜாக்கிரதையாக வாழும் வாழ்க்கை என்பது தேவனை மகிமைப்படுத்துகிறதும், அவருடைய விருப்பங்களை நிறைவேற்றுகிறதும், அவருடைய சித்தத்தை செய்கிறதும், அவருடைய சித்தம் நம் வாழ்வில் நிறைவேறுவதை பார்ப்பதுமான வாழ்க்கையே.
நாம் ஆவியானவரால் நிரப்பப்பட்டிருக்கும் போது, நம்மைக் கொஞ்சம் உற்று நோக்கும் யாவருக்கும் நிச்சயமாகவே நம் வாழ்க்கை வித்தியாசமானதாகத் தெரியும். மனிதனுடைய வரையறுக்கப்பட்ட அறிவுக்கு அப்பாற்பட்டுநாம் செயல்படும்போது, மனிதனின் வீணான நடவடிக்கைகளுக்கு உட்படாதபோது, மற்றோரில் இருந்து வேறுபட்ட வாழ்வு நாம் வாழ்கிறோம் என்பது வெளிப்படையாகத் தெரியும்.
எபேசியர் 5:5-18 நாம் சிந்திப்பதற்கு அநேக காரியங்களை சொல்கிறது. "கனியற்ற இருளான செய்கைகள்" விளைவிக்கும் தீமைகளைப் பற்றிப் பேசுகிறது மேலும் தேவனைப் பிரியப்படுத்துவது எது என ஆராய்ந்து, அதனைப் பின் தொடர அறிவுறுத்துகிறது. உங்கள் வாழ்வில் எது தேவனைப் பிரியப்படுத்துகிறது? நீங்கள் அதை முழு மனதோடு பின்பற்றுகிறீர்களா?
1 யோவான் 2:16 சொல்கிறது இவ்வுலகத்தில் ஆசைகள் கர்த்தரிடத்தில் இருந்து வருகிறது அல்ல. நாம் இதை உணர்வோமானால், பின் ஏன் அதை பின் தொடர வேண்டும்? கர்த்தரை பிரியப்படுத்தும் காரியங்களை விட உலக ஆசைகளை ஏன் முதன்மைப்படுத்த வேண்டும்?
வீணான வாழ்வை நீக்குவதற்கு, முதலில் தேவனிடம் நாம் வீணாக வாழ்வதை நீக்குமாறு உதவி கோர வேண்டும். அப்பொழுது தேவன் நமக்கு தேவ-காரியங்கள் எது என்றும், நல்லதாக தோன்றும் காரியங்கள் எது என்று உணர்த்துவார். ஏனெனில், சில காரியங்கள் நல்லதாக தோன்றும், அது பாவம் அல்ல, ஆனால் வீணானது. அது தேவ சித்தத்தை நம் வாழ்வில் நிறைவேற்றாது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

சீடத்துவம்

ஒரு புதிய ஆரம்பம்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
