நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி
ஆவிக்குரிய தாகம்
நீங்கள் சாதித்து விட்டீர்கள்! தேவன் உங்களுக்காக வைத்திருக்கிறவைகளை தடை செய்யக்கூடியவற்றை உங்களை நீங்களே வெறுமையாக்கும் அந்த நீண்ட வலி மிகுந்த கடினமான பாதையை நீங்கள் கடந்த ஏழு நாட்களில் தாண்டி விட்டீர்கள். உங்களை நீங்களே தாழ்த்தினீர்கள், உங்களை சோதித்தீர்கள், உங்கள் மாம்சத்தை மாத்திரம் திருத்தி படுத்தக் கூடியவற்றை உங்களிலிருந்து விலக்கிவிட்டீர்கள். இது நிச்சயமாகவே சுலபமானது அல்ல. ஆனால் இது மதிப்புமிக்கது.
வருகிற ஏழு நாட்கள், நமது இருதயத்தை பரிசுத்த ஆவியானவர் நிரப்பத்தக்கதாக தயார்படுத்தப் போகிறோம். நாம் வெறுமையாக்கிய அந்த இடம் இப்போது தேவனுடைய நிறைவினால் நிரப்பப்படப் போகிறது. நீங்கள் இதுவரை கண்டிராத ஒரு மாற்றம் உங்கள் வாழ்வில் வருகிறது. மாற்றத்திற்கு தயாராகுங்கள்.
யோவான் 4:13-14ம் வசனம், ஆவிக்குரிய தாகத்தை விவரிக்கிறது. இவ்வுலகத்தின் பொருட்கள் – இயேசு முதலில் குறிப்பிடும் தண்ணீர் – உங்களுடைய தற்காலிக தாகத்தை தணிக்கும், ஆனால் மறுபடியும் தண்ணீர் தாகமெடுக்கும். இயேசு மேலும் மறுமுறை தாகமெடுக்காத தண்ணீரைப் பற்றி பேசுகிறார். அந்தத் தண்ணீர் தான் பரிசுத்த ஆவியானவர். இதுவே நாம் வாஞ்சிக்கும் தண்ணீராக இருக்க வேண்டும்.
யோவான் 7:37-39ல், இதைப் பற்றி பேசும்போது இயேசு மேலும் சொல்லுகிறார், “தாகமாயிருக்கிறவன் என்னிகம் வந்து பானம் பண்ணக்கடவன்" என்று. பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள, இந்த ஜீவ தண்ணீரைப் பெற நாம் இயேசுவை ஏற்றுக் கொண்டு அவர் வேத வாக்கியங்களில் என்ன சொல்லி இருக்கிறாரோ அதை விசுவாசிப்பது அவசியம்.
நாம் ஏதோ அசைவுகளின் உடாய் மாத்திரம் போகிறவர்களாய் இருக்கக்கூடாது. நாம் பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே தரக் கூடியதான சுத்தமான ஜீவ தண்ணீரின் மேல் தாகம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More