நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி
குற்றம்
நீங்கள் எப்பொழுதாவது குற்றப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா?
தேவப் பிள்ளைகளை தடை செய்ய சாத்தான் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்று அவர்களை குற்றப்படுத்துதல். வல்லமையான தேவ மனிதர்களை கூட இந்த ஆயுதத்தை பயன்படுத்தி அவன் கீழே இழுத்து விடுகிறான். தேவ ராஜ்ஜியம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைத் தடுக்கப் பிசாசு இந்த குற்றப்படுத்துதல் என்னும் ஆயுதத்தை பயன்படுத்துகிறான். சபைகளை உடைக்க அதனைப் பயன்படுத்துகிறான். குடும்பங்களை பிரிக்க அதனைப் பயன்படுத்துகிறான், விசுவாசிகளுக்குள் பிரிவினை உண்டு பண்ண அதனைப் பயன்படுத்துகிறான். மக்களுக்கு மன உளைச்சல் மற்றும் உடல் ரீதியான நோய்களை கொண்டு வர அதனைப் பயன்படுத்துகிறான்.
நீதிமொழிகள் 17:9 சொல்கிறது, "குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்." குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான். ஆனால் அந்த குற்றத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் காண்பிக்கிறவன் நெருங்கிய சிநேகிதர்களையும் பிரித்து விடுகிறான். குற்றத்தை ரத்து செய்தல் என்பது அதை முழமையாக மறப்பதோ நினைவு கொள்ளாதது அல்ல. ஆனால் அதைப் பற்றி மீண்டும் பேசாமல், உங்கள் சகோதர சகோதரி மேல் குரோதம் கொள்ளாமல் இருப்பதே. மேலும் அதனைக் கடந்து தேவன் உங்களுக்கு கொடுத்த மன்னிப்பை நீங்களும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு கொடுங்கள்.
எபிரேயர் 12:15ல், வேதம் சொற்கிறது ஒருவனும் தேவ கிருபையை தவறவிடாதபடிக்கு கவனமாயிருக்க வேண்டும். இந்தக் கிருபை, நம்முடைய பாவங்களினிமித்தமாக தேவன் நமக்கு காண்பித்தது, இதை மற்றவர்களுக்கும் நாம் அனுப்ப வேண்டும். நமக்கு தீங்கிழைப்பவர்களை விரைவாக மன்னிக்க விழைய வேண்டும்! மேற்குறிப்பிட்ட வசனம் பிரச்சனைக்கு எடுத்துச் செல்லும் கசப்பின் வேர் பற்றி பேசுகிறது இந்த கசப்பின் வேரை பற்றி பல விதங்களில் சொல்லலாம் என்றாலும் சுருக்கமாக சொல்ல போனால் இந்த கசப்பின் வேர் என்பது குற்றமே. நமது மனதில் கசப்பின் வேறு கிளம்பும் அளவுக்கு மற்றவர்கள் நம்மை குற்றப்படுத்த விடக்கூடாது.
உங்களைக் குற்றப்படுத்தும் வார்த்தைகள் உங்கள் வாழ்வில் வேர் கொள்ள விடாதிருங்கள். துரிதமாக மன்னியுங்கள் மேலும் துரிதமாக மன்னிப்புக் கேளுங்கள். ஆவியானவரால் நிரப்பப்பட்ட வாழ்வு வாழ, நம்மைக் குற்றப்படுத்தும் வார்த்தைகள் நம் வாழ்வை தீர்மானிக்கும் காரணியாக இருக்கக்கூடாது!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More