நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி
பெருமை
நம்மை வெறுமையாக்குதலின் ஐந்தாம் நாளுக்கு வந்திருக்கிறோம். நிச்சயமாகவே இது சுலபம் அல்ல!
நம்மை ஏதோ ஒன்று செய்ய சொல்லி தேவன் கேட்டு, அதை எத்தனை முறை நாம் செய்யாமல் இருந்திருக்கிறோம், அல்லது அரைகுறையாக செய்திருக்கிறோம்? இது பெருமை. இது, "நான் கடவுள், இந்த சூழ்நிலையில் எனக்கு எது சிறந்தது என்று எனக்கு தெரியும்" என்று நாம் சொல்வதாக என்று அர்த்தம்.”
இன்றைய உலகில் பெருமை பரவலாக உள்ளது. தனிப்பட்ட கவுரவத்தில் பெருமை, வருமானத்தில் பெருமை, திறமைகளில் பெருமை, குடும்பத்தில் பெருமை, மேலும் இன்னும் அநேகம். இந்தப் பெருமை நம்மை தேவனிடமிருந்து விலக்கி நம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதில் நம்முடைய கவனத்தை செலுத்தி வைக்கிறது.
யாக்கோபு 4:6-8ல், யாக்கோபு சொல்லுகிறார் தேவன் பெருமை உள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் ஆனால் தாழ்மை உள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார் என்று. தேவனிடத்தில் கிருபை பெறுவதற்கு அவருடைய முகத்திற்கு முன்பாக நம்மை நாம் தாழ்த்த வேண்டும். நம்மிடத்தில் இருப்பதெல்லாம் நாம் சாதித்ததெல்லாம் தேவனுடைய ஆசிர்வாதம் என்பதை நாம் உணரும்போது, அங்கே பெருமைக்கு இடமில்லை.
நீதிமொழிகள் 16:18 சொல்லுகிறது பெருமை அழிவுக்கு முன்னானது என்று. பெருமை அழிவுக்கு இழுத்துச் செல்கிறது. இது உண்மை என்று தெரியும் பட்சத்தில், நாம் ஏன் வாழ்வில் அர்த்தமில்லாத காரியங்களுக்காக பெருமை பண்ணுகிறோம்.
நிரம்பி வழியும் வாழ்வு வாழ, நாம் நம்மிடம் இருந்து பெருமையை அகற்ற வேண்டும். நாம் ஆவியால் நிரப்பப்பட வேண்டுமானால், பெருமைக்கு அங்கு இடம் இருக்கக் கூடாது. நம்முடைய வாழ்வில் மறைந்திருக்கும் பெருமைகளை வெளிப்படுத்த வேண்டி தேவனிடத்தில் ஜெபியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!
More