நிரம்பி வழிய 21 நாட்கள்மாதிரி

21 Days to Overflow

21 ல் 4 நாள்

சுய நலம்

இன்று, இன்றைய நாட்களில் உலகில் இயல்பாகிப்போன ஒரு காரியத்தை நம்மை விட்டு விலக்கப் போகிறோம்: சுய நலம்.

சபையில் மாத்திரம் அல்ல, சபைக்கு வெளியிலேயும், நாம் செய்யும் காரியங்கள் சுய நல நோக்கத்தோடு அகந்தையோடு இருக்கக் கூடாது. நாம் வேலையில், பள்ளியில், நம்பர்களோடு, குடும்பத்தோடு, பொது இடங்களில் தலைமைத்துவ பொறுப்பில் நாம் இருக்கும்போது, நமது நோக்கம் முக்கியமானது.

நாம் நம்மிடம் கேட்க வேண்டிய கேள்வி, “எது எனக்கு சிறந்தது?" என்பதல்ல. மாறாக, நாம் நம்மிடம் கேட்க வேண்டிய கேள்வி, “தேவ இராஜ்ஜியத்திற்கு எது சிறந்தது?” என்பதே. நமது நோக்கமெல்லாம் தேவனுடைய சரியான திட்டத்தை செய்வதற்கு சிறந்த வழியை கண்டுபிடிப்பதாக இருக்க வேண்டும்.

பிலிப்பியர் 2:3-4, நாம் எதையும் சுயநல நோக்கத்திலோ அகந்தையினாலோ செய்யக்கூடாது என்று சொல்லுகிறது. எதையும் என்றால் எதையும். நாம் எல்லாவற்றையும் நமக்காக செய்வதிற்கு மாறாக தேவ ராஜ்ஜியத்திற்காக செய்தால், நம் வாழ்வு எவ்வளவு வித்தியாசமாக காட்தியளிக்கும்?

1 கொரிந்தியர் 10:24ம் இதையே பிரதிபலிக்கிறது, ஒருவனும் தன் சுய பிரயோஜனத்தை தேடாமல், பிறருடைய பிரயோஜனத்தை தேட வேண்டும். மற்றவர்களின் நன்மையை மனதில் கொண்டு இயங்கினால் சபை எவ்வளவு நன்றாக இருக்கும்? சுய நோக்குடையவர்களாய் இராமல், பிறர் நன்மை நாடினால் உலகம் எவ்வளவு வித்தியசாமானதாய் இருக்கும்?

நாம் மற்றவர்களுக்கு, அல்லது தேவனுக்கு ஏதாகிலும் செய்ய முற்படும்போது, நமது நோக்கம் சுய நலமுடையதா இல்லையா என்று வெளிபடுத்துமாறு தேவனிடம் கேட்போம்.

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

21 Days to Overflow

நிரம்பி வழிய 21 நாட்கள் என்கிற இந்த யுவெர்ஷன் திட்டத்தில் ஜெரெமியா ஹாஸ்ஃபோர்டு மூன்று வாரப் பயணத்தில் வாசகர்களைச் சுயத்தை வெறுமையாக்கவும், தேவ ஆவியால் நிரம்பவும், நிரம்பி வழியும் வாழ்க்கை வாழவும் அழைத்துச் செல்கிறார். சாதாரணமாக வாழ்வதை நிறுத்தி நிரம்பி வழியும் வாழ்வை வாழ்வதற்கு இதுவே நேரம்!

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஃபோர் ரிவர்ஸ் மீடியாவிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் விவரங்களுக்கு, காண்க: https://www.theartofleadership.com/