உண்மையான அன்பு என்ன?மாதிரி

What Is True Love?

12 ல் 1 நாள்

அன்புக்கு ஏங்குதல்

நமக்கு தெரிந்திருந்தாலும் சரி தெரியாவிட்டாலும் சரி, நம்முடைய இருதயம் அன்புக்கு ஏங்குகிறது. நாம் அவ்வாறே படைக்கப்பட்டோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவனுடைய உண்மையான அன்பை அறிவதற்கு ஏங்குகிறீர்களா? அதற்கு அவரை உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்மாவோடும், முழு மனதோடும் மற்றும் முழு பெலத்தோடும் உண்மையாக நேசிப்பீர்களா?

ஆனால் உண்மையான அன்பு என்றால் என்ன? அந்த ஒரு வார்த்தை பல அர்த்தங்களை கொண்டுள்ளது. ஒரு மூச்சில் நாம் சொல்லிவிடலாம், “எனக்கு காபி பிடிக்கும், என்னுடைய மனைவி/கணவனை பிடிக்கும். இயேசுவை பிடிக்கும்” என்று. உண்மையான அன்பு என்றால் என்ன என்பதை நாம் எவ்வாறு அறியலாம்? அது எப்படியாக தோன்றும்? அது எப்படிப்பட்ட உணர்வை தரும்? அது உண்மையாகவே இருக்கிறதா?

உண்மையான அன்பு என்பது ஒரு உணர்ச்சியைக் காட்டிலும், ஒரு உணர்வினைக் காட்டிலும், ஒரு பணியைக் காட்டிலும், இவைகளை விட, ஒரு கொள்கையைக் காட்டிலும் மேலானது. உண்மையான அன்பு மற்றவர்களது நலனில் உண்மையான விருப்பத்தை கொண்டிருக்கும். உண்மையான அன்பு தேவனுக்கு மகிமையை கொண்டுவருவதே வாழ்க்கையின் நோக்கமும் சபைகளின் வாழ்விற்கும் காரணம்.

சிலர் திருச்சபையின் நோக்கம் சுவிசேஷம் அறிவிப்பது என்று கூறுகின்றனர்: “திருச்சபையின் மிகச் சிறந்த பணி உலகெங்கும் சுவிசேஷம் அறிவிப்பதாகும். சுவிசேஷம் அறிவிப்பதே திருச்சபையின் நோக்கம்” (ஆஸ்வோல்ட் ஜே. ஸ்மித்).

மற்றவர்கள் அது ஆராதிப்பதற்கு என்று சொல்கின்றனர்: “சுவிசேஷம் அறிவிப்பது முக்கிய நோக்கமல்ல. அராதிப்பதே. ஆராதனை இல்லாததால்தான் சுவிசேஷம் இருக்கிறது. ஆராதிப்பது தான் நோக்கம், சுவிசேஷம் அல்ல, ஏனெனில் தேவன் மனிதனல்ல அவர் பெரியவர். இந்த காலம் முடிந்த பின், மீட்கப்பட்டோர் அனைவரும் தேவனுடைய சிங்காசனத்தை பார்த்து கிடப்போம், சுவிசேஷம் இருக்காது. அது ஒரு தற்காலிக தேவை. ஆனால் என்றென்றும் பின்பபற்ற வேண்டியது ஆராதனையே” (ஜான் பைப்பர்).

நான் உங்களுக்கு சொல்கிறது அன்பே பிரதானம் மற்றவைகலான ஆராதனையும் சுவிசேஷமும் அந்த அன்பின் வெளிபாடே ஆகும். தேவன் தம்முடைய ஜனங்களை முழு இருதயத்தோடும், முழு ஆத்மாவோடும், முழு பெலத்தொடும் தம்மில் அன்புக்கூரவேண்டும் என்று கட்டளையிடுகிறார். இதையே இயேசு மாற்றி நமக்கு முதலாவது மற்றும் பிரதான கற்பனையாக உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூரு என்பதாக. முழு என்பது எல்லாம் என்பதாகும். பின்னர் அவர் நமக்கு சொல்கிறார், நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்பதாக. பின் பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதின நிருபத்தில் விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது என்று விவரிக்கிறார். ஆக தேவன், இயேசு மற்றும் பவுலை பொறுத்தவரை நமக்கு அன்பே பிரதானம். அவ்வாறே திருச்சபையும்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

What Is True Love?

அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான குணம். அன்பின் வேதாகம அர்த்தத்தையும், தேவனை மற்றும் மற்றவர்களை எப்படி நேசிப்பது என்றும் திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸின் இந்த திட்டம் ஆராய்கிறது.

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.